விநாயகருக்கு மூஞ்சுரு வாகனம் எப்படி வந்தது?

கந்தவர்களின் மன்னன் கிரவுஞ்சன் விநாயகரின் தீவிர பக்தன். ஒருமுறை ஆகாயமார்க்கமாக இமயமலையைச் சுற்றி பறந்துகொண்டிருந்தான். எதேச்சையாக பூமியை பார்க்கும்போது ஓர் இடத்தில் அழகே உருவான ரிஷி பத்தினி மலர்களைத் தொடுத்துகொண்டிருந்தாள்.
 | 

விநாயகருக்கு மூஞ்சுரு வாகனம் எப்படி வந்தது?

கந்தவர்களின் மன்னன் கிரவுஞ்சன் விநாயகரின் தீவிர பக்தன். ஒருமுறை ஆகாயமார்க்கமாக இமயமலையைச் சுற்றி பறந்துகொண்டிருந்தான். எதேச்சையாக பூமியை பார்க்கும்போது ஓர் இடத்தில் அழகே உருவான ரிஷி பத்தினி மலர்களைத் தொடுத்துகொண்டிருந்தாள்.

சவுபரி முனிவரின் மனைவியான அவள் அழகில் பேரழகியாக இருந்தாலும் சிறந்த பதிவிரதையாக வாழ்ந்து வந்தாள். எளிய வாழ்க்கையை வாழ்ந்து வந்தாள். இறைபக்தி மிகுந்தவளான அவள் தனது குடிலில் அமர்ந்து மாலை கோர்த்துக் கொண்டிருந்தபோதுதான் கிரவுஞ்சன் கண்ணில் பட்டாள். அவள் அழகில் மயங்கி மனதை பறிகொடுத்த கிரவுஞ்சன் பூமியை நோக்கி அழகியின் இருப்பிடத்திற்கு அவளை நெருங்கினான். 

அறியாத ஒருவனின் வருகையால் திடுக்கிட்டு எழுந்த பதிவிரதை “யார் நீங்கள்? என் கணவர் இல்லாத நேரம் வந்திருக்கிறீர்களே.. என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள்” என்று கேள்வி மேல் கேட்டாள் ஆனால் கிரவுஞ்சன் எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். சட்டென்று அவளது கையை பிடித்தான். இதை எதிர்பார்க்காத அழகி “உதவி உதவி என்னை காப்பாற்றுங்கள்” என்று கதறினாள்.

வெளியில் சென்றிருந்த  சவுபரி முனிவர் குடிலை நெருங்கிக் கொண்டிருந்தார். அவளது சத்தத்தைக் கேட்டு வேகமாக வந்தவர் கந்தர்வனின் செயலால் கோபம் அடைந்தார். அடே கந்தர்வா என்று கோபமாக கத்தினார். அதுவரையிலும் அவளது அழகில் கட்டுண்டு கிடந்தவன் முனிவரின் குரலால் மாயை கலைந்தான். அப்போதுதான் தான் செய்த தவறை உணர்ந்தான். எனினும் கோபம் கலையாத முனிவர் “பதிவிரதையான என் தர்ம பத்தினியின் கைகளை இழுத்து அடைய முயன்ற  நீ இப்போதே மண்ணை தோண்டி வளையில் ஒளியும் மூஞ்சுறுவாக மாறுவாய்” என்று சபித்தார்.

தெரியாமல் செய்துவிட்டேனே இந்த தவறுக்கு பாபவிமோசனமே கிடைக்காதா என்று அழுதான் கிரவுஞ்சன். மதிகெட்டு சில நிமிடத்தில் நீ தவறு செய்துவிட்டாய் ஆனால் கொடுத்த சாபத்தை திரும்பபெற முடியாது. ஆனால் உன் விருப்பமான விநாயகரே உனக்கு சாபவிமோசனம் கொடுத்து உடன் வைத்துக்கொள்வார் என்றார். கந்தர்வன் அக்கணமே மூஞ்சுறுவாக மாறி காட்டுக்குள் ஓடினான். காலங்கள் கடந்தது.

புத்திரம் பாக்கியம் இல்லாத மகாராணிக்கு மகனாக அவதரித்த விநாயகர் அந்த நாட்டின் விவசாய நிலங்களை அழித்து அட்டூழியம் செய்துகொண்டிருந்த மூஞ்சுருவின் மீது  பாசக்கயிறை வீசினார். வந்தது விநாயகப்பெருமான் என்பதை புரிந்துகொண்ட  மூஞ்சுரு வடிவிலிருந்த கந்தர்வ மன்னன் கிரவுஞ்சன் அவரிடம் அடைக்கலமானான். விநாயகப்பெருமானை தன்னுடைய வாகனமாக மூஞ்சுருவை மாற்றிக்கொண்ட கதை இதுதான்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP