நல்ல காரியங்களை கெட்ட நாள்களிலும் செய்யலாம்....!

‛ஒன்றே செய், நன்றே செய்.. நன்றையும் இன்றே செய்’ என்று பெரியோர்கள் சொல்லியிருப்பது அனைத்து சுப காரியங்களுக்கும் பொருந்தும். நாள், நட்சத்திரம், நேரம் பார்த்து தான் எல்லா சுபகாரியங்களும் செய்ய வேண்டும் என்று நினைக்கும் போது, பல நேரங்களில் சூழ்நிலைகள் பொருந்தாமல் நல்ல காரியங்கள் தள்ளிக்கொண்டே போகும்.
 | 

நல்ல காரியங்களை கெட்ட நாள்களிலும் செய்யலாம்....!

 
‛ஒன்றே செய், நன்றே செய்.. நன்றையும் இன்றே செய்’ என்று பெரியோர்கள் சொல்லியிருப்பது அனைத்து சுப காரியங்களுக்கும் பொருந்தும். நாள், நட்சத்திரம், நேரம் பார்த்து தான் எல்லா சுபகாரியங்களும் செய்ய வேண்டும் என்று நினைக்கும் போது, பல நேரங்களில் சூழ்நிலைகள் பொருந்தாமல் நல்ல காரியங்கள் தள்ளிக்கொண்டே போகும். 
   
அதிகாலையில் சூரியனின் வெப்ப ஆதிக்கம் இல்லாமல், சந்திரனின் வெப்ப நிலையும் இல்லாமல் இரண்டுக்கும் மத்தியில் இருக்கும் காலமே, பிரம்ம முகூர்த்தம் ஆகும். ரிக் வேதத்தில், உஷத் காலம் என்று சொல்லப்படுகிறது. அதாவது உஷஸ் என்னும் பெண் தேவதை தோன்றிய பின்பு தான் சூரியன் உதயமாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரம்ம முகூர்த்த காலம் என்பது அதிகாலை, 3 மணி முதல் 5 மணிவரை உள்ள காலகட்டமே...
பிரம்மம் எப்படி அறிய முடியாதோ, அதுபோல் பிரம்ம முகூர்த்தத்தின் இனிமையையும், முழுமையாக அறிய முடியாது. தெய்வீக காரியங்கள் படிப்படியாக   மேலோங்கி வரும் காலத்தில்  தெய்வத்தை நினைத்து செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிட்டும். 

அதனால் தான் புராணங்களில் முனிவர்கள், ரிஷிகள், தவயோகிகள் அனைவருமே பிரம்ம முகூர்த்தத்தில் விழிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்கள்.  பிரம்மா, சிவனை நினைத்து வழிபட்டு, அற்புத வரங்களைப் பெற்ற காலம் என்பதால்  அவரது பெயராலேயே பிரம்ம முகூர்த்தம் என்னும் சொல் வழக்கில் வந்தது.  

 இதற்கு புராண காலத்தில் ஒரு  கதை உண்டு.  படைக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த பிரம்மா, ஒருமுறை நீண்ட நாட்கள் உறங்கிவிட, சிவபெருமான் வந்து பிரம்மனை எழுப்பினார். விழிப்படைந்த பிரம்மா, தங்களை வழிபட சிறந்த நேரம் எது என்று கேட்டார்.  

பூமியில் வரும் அதிகாலை  நேரத்தில் என்னை வழிபட்டால்,  அவர்கள் எண்ணிய எண்ணம் ஈடேறும். அவர்கள் வேண்டிய வரம் பெற்று வளமாக இருப்பார்கள்.  நாள், நேரம், திதி என்று பார்க்காமல் என்னை வணங்கலாம். 

அதேபோன்று சந்தியா காலம் என்னும்,  அந்தி சாயும் நேரத்திலும்,  என்னை வழிபட உரிய காலமே என்று கூறினார். நாள்முழுவதும் இறைவனது அருள் கிடைக்க மனம் உருகினாலும், சக்திமிக்க அதிகாலை வேளை கேட்ட வரத்தை கொடுக்கும் என்பதை சிவபெருமானே  கூறியதால் பிரம்மாவும் அதிகாலையில் சிவனை வணங்கி வரம்பெற்றார்.
     
சிவப்பெருமானிடம் வரம் பெற்றதால் தான் பிரம்மா தன்னுடைய நாவில் சரஸ்வதியை அமரவைத்து 64 கலைகளையும் படைத்தார். பிரம்மாவைப் போல் மானிடர்களாகிய நாமும் பிரம்ம முகூர்த்தத்தில் இறைவனை வணங்கி  நல்ல செயலை தொடங்கினால், இறுதியில் வெற்றியே கிட்டும் என்பது ஐதிகம். உண்மையும் கூட. 
   
 பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம் செய்வதும், புதுமனையில் குடிகொள்வதும்  வாழ்வு முழுவதும் சுபத்தன்மையையே உண்டாக்கும். எவ்விதமான அமங்களத்தையும் உண்டாக்காது. அதனால் தான், பிரம்ம முகூர்த்தத்தில் செய்யப்படும் காரியங்களுக்கு நாள், நேரம், திதி, நட்சத்திர தோஷம் கிடையாது என்கிறார்கள். 

அதனால் நல்ல விஷயங்களை தொடங்க கெட்ட நாட்கள் என்று திதி, நேரம், நட்சத்திரம் பார்த்து  தள்ளிபோடாமல் பிரம்ம முகூர்த்தத்திலேயே செய்யுங்கள்.  சிவனது அருளால் காரியங்கள் கைகூடுவதை கண்ணார பார்க்கலாம்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP