ஏமாற்றும் எண்ணம் இருந்தால் கடவுளை அடைய முடியாது

கடவுள் மீது நம்பிக்கை கொண்டிருந்தாலும் நம்பிக்கையே இல்லாமல் இருந்தாலும் கூட கடவுளின் அருளை பெறலாம்.
 | 

ஏமாற்றும் எண்ணம் இருந்தால் கடவுளை அடைய முடியாது

கேட்பதெல்லாம் கொடுக்குமாம் கற்பக விருட்ச மரம் அதுபோல் மனிதர்களின் உழைப்புக்கேற்ற பலனை தங்கமாக மாற்றிக்கொடுக்கும்  சிறிய பாத்திரம்  ஒன்றை முனிவர் ஒருவர் வைத்திருந்தார்தன்னுடைய தவத்தின் பயனை மெச்சி காட்சி தந்த தேவதையிடம் பரிசாக பெற்ற இந்த பாத்திரத்தை செல்லும் இடங்களிலெல்லாம் கூடவே சுமந்து சென்றார்.

ஜனகபுரி என்னும் நாட்டை ஆண்ட  ஜனசிம்மன் என்னும் அரசன் புகழ் பெற்று விளங்கினான். செல்வமும் செழிப்பும் மிக்க அந்நாட்டில் மக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார்கள். ஜனசிம்மனுக்கு சிவாலயம் கட்ட வேண்டும் என்னும் ஆசை வெகு நாட்களாக இருந்து வந்தது. அதற்குரிய காலமும் நெருங்கி வந்தது.  ஆலயப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

மிகப்பிரம்மாண்டமான கோயிலாய் அமைய வேண்டும் என்று அரசன் விரும்பியதால் அதிகளவில் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள். வருடக் கணக்கில் செய்து வந்த பணி என்பதால் அரசனிடம் இருந்த பொன், பொருள் அனைத்தும் குறைந்து வந்தது. அரசியின் நகைகளும் கூட உருக்கப்பட்டு கோயில் பணிகளுக்கு ஈடுபடுத்தப்பட்டது ஆயிற்று அரசனின் கஜானா தீரும் சூழ்நிலை வந்தது.

நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் ஆலயப்பணியில் ஈடுபட்டிருந்தார்கள்இறைப்பணியில் பக்தி மிக்கவர்கள் உண்மையாக உழைத்தார்கள். கடவுள் நம்பிக்கை  இல்லாதவர்கள்  உழைக்க காசு கிடைத்தால் போதும் என்று வேலை செய்தார்கள். ஆனால் சிலர்  இறைநம்பிக்கையும் இல்லாமல் உழைக்கவும் செய்யாமல் வேலை பார்ப்பது போல நடித்தார்கள். அரசனுக்கு பெருங்கவலை ஆலயப்பணிகள் நிறைந்திருந்தாலாவது கஜானா காலியானாலும் பரவாயில்லை என்று நினைத்திருக்கலாம். ஆனால் பணியும் நிறைவடையவில்லைபணியாளர்களுக்கு கூலியும் கொடுக்க முடியவில்லையே என்று வருந்தினான்.

சிவாலயப்பணியை முடிக்க முடியாத ஜனகபுரி அரசனைப் பற்றி கேள்விப்பட்ட முனிவர் அரசனைத் தேடி வந்திருந்தார். ”அரசே ஆலயப்பணியை நிறுத்த வேண்டாம். உழைப்பவர்களுக்கான பொருளை நான் அளிக்கிறேன் என்று நம்பிக்கை அளித்தார். அன்றைய தினம் பணியாளர்களுக்கு கூலி கொடுக்க வேண்டியதாயிற்றுமுனிவர் அங்கிருந்த கஜானா அதிகாரிகளிடம்  ”மண்குவியலை ஓரிடத்தில் பரப்பி வையுங்கள்நான்வந்து கூலி தருகிறேன்” என்றார். அரசருக்கும், அதிகாரிகளுக்கும் குழப்பம் இருந்தாலும் முனிவரின் பேச்சுக்கு கட்டுப்பட்டு மண்குவியலை உண்டாக்கி அவரை அழைத்து சென்றார்கள்.

”உங்களுக்கு வேண்டிய கூலியை இந்தப்பாத்திரத்தில் மண்ணை இட்டு நிரப்பி உங்கள் பைகளில் வைத்து மூடிவிடுங்கள்”  என்றார். வேலை முடிந்ததும் பிறகு, ”கடவுள் பக்தி இருந்து உண்மையாக உழைத்தவர்களும், கடவுளின் மீது ஈடுபாடு இல்லையென்றாலும் உழைப்பில் நம்பிக்கை கொண்டு உழைத்தவர்களும் உங்களிடமுள்ள பையை திறந்து பாருங்கள். மண் பொன்னாக மாறியிருக்கும்ஆனால் உழைக்காமல் கடவுளையும், அரசனையும்  ஏமாற்றியவர்களின் பையில் உள்ள மண் மண்ணாகவே இருக்கும்” என்றார்.

ஆச்சர்யம் பொன்னாக மாறியவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். உழைக்காமல் ஏமாற்றியவர்கள் மண்ணை  மட்டுமே பெற்றார்கள். தவறை உணர்ந்த இவர்களது உழைப்பிலும் முனிவரது தங்க பாத்திரத்திலும் சிவாலயம் சிறப்பாக நிறைவுற்றது.

கடவுள் மீது நம்பிக்கை கொண்டிருந்தாலும் நம்பிக்கையே இல்லாமல் இருந்தாலும் கூட கடவுளின் அருளை பெறலாம். ஆனால்  ஏமாற்றும் எண்ணம் இருப்பவர்கள்  கடவுளை  உணரவும் முடியாது. நெருங்கவும் முடியாது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP