இந்திர பூஜையை விட மேலான கோ பூஜை

இந்திர பூஜையை விட மேலான கோ பூஜை
 | 

இந்திர பூஜையை விட மேலான கோ பூஜை

ஈசனுக்குத் தாயாகவும், வசுக்களுக்கு பெண்ணாகவும் ஆதித்யர்களுக்கு சகோதரியாகவும் நாபியில் அமிர்தத்தை வைத்துக் கொண்டவளாக திகழ்கிறாள் அன்னை கோமாதா.கோமாதாவை எந்த சூழ்நிலையிலும் எவரும்  அடிக்கவோ, விரட்டவோ செய்யாமல் அன்னையாக கருதி  பூஜிக்க வேண்டும்  என்கிறது  வேதம்.

பகவான் பிரம்மன் தனது  சிருஷ்டியில் உலகம் உய்ய முதலில் பசுவை படைத்து அதன் உடலில் பதினான்கு உலகையும் முப்பத்து முக்கோடி தேவர்களையும் இருக்கச் செய்தான். அதில் முதலில் வந்தவர்களான தர்மராஜனும் காலதேவனும்தான் முகத்தில் இருந்தனர். மற்றவர்கள் உடல் எங்கும் குடியேறினார்கள். இதில் கங்கையும் மகாலட்சுமி இருவரும் தாமதமாக வந்தார்கள். இதனால்  மஹாலட்சுமிக்கும் கங்கைக்கும் பசுவின் உடலில் இவர்களுக்கு இடம் இல்லை என்கிறது தேவிபாகவதம்.

கோமாதாவின் உடலில் இடம்பெற லட்சுமியும் கங்கையும் பசுவை மிகவும் வேண்டினார்கள். எங்கேயாவது இருக்க ஓர் இடம் கொடுத்தால் போதும் என்று கெஞ்சினார்கள். இவர்களின் கெஞ்சுதலைப் பார்த்த கோமாதா, உங்கள் இருவர் மீதும் எனக்கு அனுதாபம் இருக்கிறது. ஆனால் இடமே இல்லையே, ஒன்று வேண்டுமானால் செய்யுங்கள், என் உடலிலிருந்து வரும் சாணம், கோமூத்ரம் இரண்டும் யாருக்கும் சொந்தமாகவில்லை. நீங்கள் விரும்பினால் அதில் இருக்கலாம் என்று சொல்ல லட்சுமியும் கங்கையும் மிகுந்த சந்தோஷத்துடன் அந்த இடத்தில் வாஸம் செய்ய ஆரம்பித்தார்கள். அதனால் இன்றைக்கும் பசுவின் பின் புறத்தில் லட்சுமியும், கங்கையும் இருப்பதாக சாஸ்திரம். அதனால் பசுவின் சாணமும், கோமூத்ரமும் சகல பாபங்களையும் போக்கி லட்சுமி கடாட்சம் அளிக்கக் கூடியது என்கிறது நமது தர்ம சாஸ்திரம்.

வைகுண்டம், ஸத்யலோகம் போன்று கோலோகம் என்று உள்ளது. அதில் ராதிகையுடன் ஸ்ரீகிருஷ்ணன் பக்த ரக்ஷகனாக இருக்கிறார். அங்கு காமதேவனைப் படைத்து அதன் கன்றுகளை கோலோகம் முழுவதும் வைத்து கிருஷ்ணனும் ராதையும் பூஜை செய்வதாக தேவி பாகவதத்தில் இருக்கிறது. இந்திர பூஜையை விட கோ பூஜையே மேலானது என்று ஸ்ரீ கிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். கோவை லட்சுமியாக பாவித்து வேதோக்த்த ஸ்ரீஸுக்தத்தினால் ஓம் ஸுரப்யை நம: என்னும் மந்திரம் சொல்லி ஆவாஹனம் செய்து, தூபதீப நைவேத்யம் முதலானவைகளுடன் ஸ்ரீகிருஷ்ணன் பூஜை செய்ய மற்றும் பிரும்ம தேவன் சரஸ்வதியுடனும் இந்திரன் இந்திராணியுடனும் பூஜை செய்தார்கள்.

கீழே காணும் ஸ்லோகத்தை மனத்தூய்மையுடன் அன்னை கோமாதவை  நெஞ்சில் நிறுத்தி கோ பூஜை செய்ய சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

நமோ தேவ்யை மஹா தேவ்யை ஸுரப்யை ச நமோ நம

கவாம் பீஜஸ்வ ரூபாயை நமஸ்தே ஜகதம்பிகே

நமோ ராதாப் பிரியாயைச பத்மாம் சாயை நமோ நம

நம: கிருஷ்ணப் பிரியாயை ச கவாம் மாத்ரே நமோ நம

கல்ப விருக்ஷஸ்வ ரூபாயை ஸர்வேஷாம் ஸந்ததம் பரம்

ஸ்ரீதாயை தன தாயை ச வ்ருத்தி தாயை நமோ நம

சுபதாயை ப்ரஸன்னாயை கோப தாயை நமோ நம

யசோதாயை கீர்த்தி தாயை தர்மக்ஞாயை நமோ நம

இதம் ஸ்தோத்ரம் மஹத் புண்யம் பக்தி

யுக்தச்ச ய: படேத்

ஸகோ மான் தனவான்ச் சைவ கீர்த்திமான்

புத்ர வான் பவேத்!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP