கேட்டை நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய திருத்தலம்…!

கேட்டை நட்சத்திரக்காரர்கள் தாங்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்தன்றோ, நேரம் கிடைக்கும் போதோ தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பசுபதி கோவிலில் உள்ள வரதராஜப் பெருமாளைத் தரிசித்தால் வாழ்வில் மேன்மேலும் உயரலாம்.
 | 

கேட்டை நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய திருத்தலம்…!

கேட்டை கோட்டை கட்டி ஆளும் என்பது பெரியோர் வாக்கு. ஆனால் கோட்டையை கட்ட  படைத்தவனின் துணையும் வேண்டுமல்லவா..  கேட்டை நட்சத்திரக்காரர்கள் தாங்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்தன்றோ, நேரம் கிடைக்கும் போதோ தஞ்சாவூர்  மாவட்டத்திலுள்ள பசுபதி கோவிலில் உள்ள வரதராஜப் பெருமாளைத் தரிசித்தால் வாழ்வில் மேன்மேலும்  உயரலாம்.

மூலவர் வரதராஜப்பெருமாள். தாயார் பெருந்தேவி. இராமானுஜரின் குருவான பெரிய நம்பி கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர். அவருக்கு இத்தலத்தில் வரத ராஜப்பெருமாள் காட்சி கொடுத்து இங்கேயே முக்தி கொடுத்ததால் இத்தலம் கேட்டை நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம் ஆயிற்று. 

ஒருமுறை ஸ்ரீ ரங்கத்தில் இராமானுஜர், அவரது குருவான பெரிய நம்பிகள், அவரது சீடர் கூரத்தாழ்வார் தங்கியிருந்தார்கள். சோழமன்னனுக்கு இராமானு ஜரைப் பிடிக்காது என்பதால்  அவரை சிறைபிடிக்க உத்தரவிட்டான். அவர்கள் யாருமே இராமனுஜரை பார்க்காததால் நான் தான் இராமானுஜர் என்று பெரிய நம்பிகள் சரணடைந்தார்.  அவருடன் அவரது மகள் திருத்துழாய் மற்றும் சீடரான கூரத்தாழ்வார் சென்றனர்.  

மன்னன் தனது மதம் தான் உயர்ந்தது என்று எழுதிகொடுக்கும்படி கேட்டார். ஆனால் பெரிய நம்பி மறுக்கவே அவரது கண்களைக் குருடாக்கும்படி பணித்தான். ”அந்த சிரமும் உங்களுக்கு வேண்டாம்”  என்று கூரத்தாழ்வார் தன் கண்களைக் குத்திக்கொண்டு பார்வை இழந்தார். காவலர்கள் பெரிய நம்பியின் கண்களைக் குருடாக்கி விடுதலை செய்தார்கள். 

பார்வை இழந்த இருவரையும் திருத்துழாய் அழைத்து வந்து இத்தலத்தில் தங்கினாள். வயது மிகுந்த பெரிய நம்பியின் துன்பத்தைப் பொறுக்காமல் வரதராஜப்பெருமாள் காட்சியளித்ததோடு அவர் தங்கியிருந்த இந்த இடத்திலேயே காட்சி கொடுத்து அவருக்கு மோட்சம் கொடுத்தார். இவர் மார்கழி மாத கேட்டை நட்சத்திரத்தில் பிறந்ததால் ஒவ்வொரு மாதமும் கேட்டை நட்சத்திரத்தில் இவருக்கு  சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

கேட்டை நட்சத்திரக்காரர்கள்  ஜாதகத்தில் தோஷம் இருந்தால் இவரை வேண் டிக்கொள்கிறார்கள். செவ்வாய்க்கிழமையில் வரும் கேட்டை நட்சத்திரத்தன்று இங்கு வந்து வழிபாடு செய்தால் இரட்டிப்பு பலன்களை பெறலாம். கண் குறை பாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்துக்கு வந்து கூரத்தாழ்வாரிடம் வேண் டினால் பாதிப்புகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.. 

நேரம் கிடைக்கும் போது சென்று வாருங்கள்.. வாழ்வில் நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP