தமிழ் புத்தாண்டில் புதுக்கணக்கை தொடங்கி உப்பை வாங்குங்கள்…!

தமிழ்புத்தாண்டில் புதுக்கணக்கை தொடங்குவதோடு ஒரு படி உப்பையும் வாங்கி வீட்டில் வையுங்கள். எப்போதும் லஷ்மி கடாட்சமாய் வீடிருக்கும். அந்த வருடம் முழுக்க அவர்களுக்கு சுபம் தான்
 | 

தமிழ் புத்தாண்டில் புதுக்கணக்கை தொடங்கி உப்பை வாங்குங்கள்…!

காலத்தைக் கணக்கிடும்  முறைகளை 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கணித்திருந்தார்கள் என்பதற்கு  வேதங்களில் குறிப்புகள் உள்ளன. காலத்தை  கல்பம், மன்வந்திரம், யுகம், ஆண்டு, அயனம், ருது, மாதம், வாரம், நாள், மணி, நாழிகை, விநாடி என்று பலவாக பிரித்து வைத்திருந்தார்கள் நமது முன்னோர்கள். 

நாடு முழுவதும் இப்போதும் வழக்கத்தில் இருக்கும் பஞ்சாங்கம் தொடங்கி பல்லாயிரம் ஆண்டுகள் ஆகியிருக்கும். நாள்காட்டியாக  புழக்கத்தில் இருந்து வந்தது பஞ்சாங்கம் தான். கலியுகம் தொடங்கி இதுவரை 5116 ஆண்டுகள் ஆனதாக நமது பஞ்சாங்கள் தெரிவிக்கின்றன. பஞ்சாங்கம் வாயிலாக தொடங்கும் வருடம் மக்களுக்கு சிறப்பாக இருக்குமா? போதிய அளவு மழை இருக்குமா? விவசாயம் செழிக்குமா? பூமி அதிர்வு, இயற்கை சீற்றங்கள் உண்டாகுமா? ஆட்சியாளர்கள் நன்மை செய்வார்களா? உலக அளவில் போர் உண்டாகுமா? வெள்ளம் ஏற்படுமா? இப்படி அனைத்தும் வானசாஸ்திரத்தையும்,  கணித சாஸ்திரத்தையும் வைத்து துல்லியமாக வெளிவரும் பஞ்சாங்கத்தைப் புத்தாண்டு அன்று பூஜையறையில் வைத்து வழிபட்டு குடும்பத் தலைவர் வாசிப்பார்.. இன்றும் பல குடும்பங்களில்  பூஜையின் போது பஞ்சாங்கம் வாசிக்கும் பழக்கம் தொடர்கிறது.

தமிழ் புத்தாண்டின் தொடக்கத்தில்   சிறு தொழில் செய்பவர்கள் கணக்கு எழுது வார்கள். அன்றைய தினம் இலாபம் என்று தொடங்கி  வரவு வைத்தால் வருடம் முழுவதும் செல்வம் தங்கும் என்பதை தமிழர்கள் ஆண்டாண்டு காலம் கடைப் பிடித்துவந்தார்கள். அன்றாட கூலி வேலை செய்பவர்களும் பெருந்தொழில் நடத்துபவர்களும் தொழில் நடக்கும் இடத்தில் சிறு பூஜை வைத்து வரும் முதல் வரவில்  வெள்ளையான பொருள்களை வாங்குவார்கள். குறிப்பாக  வெள்ளை யாய் இருக்கும் கல்உப்பில்  மகாலஷ்மி வாசம் செய்கிறாள் என்பதை அறிவோம். அதனால் முக்கியமாக கல்உப்பை  அன்று வாங்கிய பிறகே  விலை அதிக முள்ள பொருள்களை வாங்குவார்கள்.  இதன்மூலம் வருடம் முழுவதும் மகா லஷ்மி வீட்டில் தங்குவதாக ஐதிகம்.

அன்றைய தினம் இலாபக்கணக்கில் வரும் தொகையை முதலில்  உப்பு வாங்கிய பிறகு பணியாளர்களுக்கு வெற்றிலைப்பாக்கில் பணம் வைத்து கொடுப் பார்கள், தானம் செய்யவும் சிறிது ஒதுக்குவார்கள்.  அன்று  தானம் பெறுபவர்கள்  ஒற்றை எண்ணிக்கையில் பெற்றிருந்தால் அந்த வருடம் முழுக்க அவர்களுக்கு சுபம் தான்..  இத்தகைய புத்தாண்டு பழக்கங்கள் இப்போதும் பாரம்பரியமிக்க தமிழர்களிடம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 

தமிழ்புத்தாண்டில் புதுக்கணக்கை தொடங்குவதோடு ஒரு படி உப்பையும் வாங்கி வீட்டில் வையுங்கள். எப்போதும் லஷ்மி கடாட்சமாய் வீடிருக்கும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP