பீடித்திருக்கும் நோய் விலக தைப்பூச தினத்தில் காவடி எடுங்கள் நோய் பறந்துவிடும்

தை மாதம் பூச நட்சத்திரத்தன்று முருகனுக்காக சிறப்பாக தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இந்நாள் பெரும்பாலும் நிறைமதியாக இருக்கும். அசுரர்களை அழிக்க அன்னை பார்வதி தேவியிடமிருந்து வேலைப் பெற்ற திருநாளே தைப்பூசம் என்று அழைக்கப்படுகிறது.
 | 

பீடித்திருக்கும் நோய் விலக இன்று இதைச் செய்யுங்க!

தை பூசம் (08.02.2020)

அழகன்... அறிஞன்..அனைத்தும் அறிந்தவன்.. கந்தனாகவும்,  கடம்பனாகவும், கதிர்வேலவனாகவும் அழைக்கப்படும் தமிழ்க்கடவுள் முருகனே... தைப்பூச நாயகனே... அப்பனை ஆட்டுவித்த பொடியவனே உன்னை வாழ்த்தவும், உன் பெருமையைச் சொல்லவும் சிறப்பிலும் சிறப்பான தமிழ் எழுத்துக்களில் கூட வார்த்தைகள் போதவில்லையே... தகப்பனுக்கே பாடம் எடுத்த தகப்பன் சாமியே உன்னையன்றி யாரால் எங்களை காக்க முடியும்? தீங்குகள் உன்னை மீறி எப்படி நெருங்க முடியும்?

தை மாதம் பூச நட்சத்திரத்தன்று முருகனுக்காக சிறப்பாக தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இந்நாள் பெரும்பாலும் நிறைமதியாக இருக்கும். அசுரர்களை அழிக்க அன்னை பார்வதி தேவியிடமிருந்து வேலைப் பெற்ற திருநாளே தைப்பூசம் என்று அழைக்கப்படுகிறது. வேலுக்கு அத்தனை மகத்துவம் உண்டு. வேல் நாயகனை கூர் வேலன், நெடுவேலன், சுடர்வேலன், வெற்றிவேலன் என்றும் அழைப்பார்கள். இன்றும் ஒவ்வொரு வருடமும் சிக்கல் சிங்காரவேலர் சன்னிதியில் முருகன் அன்னையிடம் வேல் வாங்கும் காட்சியை நாடகமாக காண்பிப்பார்கள். அப்போது சிங்காரவேலன் திருமேனி வேலின் கொதியால் வியர்த்துவடிவது பக்தர்களுக்கு கண்கொள்ளா காட்சி. அபிஷேகம் இல்லாமல் முருகனை ஒற்றி எடுக்கும் துணி ஈரமாவதைக் கண்டு பக்தர்கள் பக்தியில் திளைத்திருக்கின்றனர். கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் என்று ஆண்டாள் பாடுவதையும் கவனித்தாலே வேலின் மகிமை உணரமுடியும். வேல் வேறு முருகன் வேறல்ல.. வேலும் முருகனும் ஒன்றே....  

பீடித்திருக்கும் நோய் விலக இன்று இதைச் செய்யுங்க!

அப்பர் பூசம் நாம் புகுதும் புனல் ஆடவே என்று இந்த தைப்பூச தினத்தில் நீராடுவது பற்றி பாடியுள்ளார். இன்று புண்ணிய நதிகளில் நீராடுவது மிகவும் விசேஷம். புண்ணிய நதிகளை நினைந்தாவது நீராடுதல் நன்று. தொட்டதெல்லாம் துலங்கும் நாள் தைப்பூசம் என்பதை உணர்த்தும் வகையில் நமது முன்னோர்கள் பெண் குழந்தைகளுக்கு காது குத்துதல், மூக்கு குத்துதல், புதிய ஒப்பந்தங்களுக்கான வேலைகளைத் தொடங்குதலை இந்நந்நாளில் தொடங்கியிருக்கிறார்கள். சிவனும் பார்வதியும் இணைந்து ஆடியது இந்நாள் என்றாலும் பக்தர்கள் தகப்பனை வழிபட வரும்போது தகப்பன் சுவாமியை வணங்க தொடங்கினார்கள்.

மு என்பது விஷ்ணுவையும், ரு என்பது சிவனையும், கு என்பது பிரம்மாவையும் குறிப்பதால் மூவரையும் இணைந்து வழிபட முருகக் கடவுள் போதும்...அழகுக் கடவுள் முருகனை நினைத்து மார்கழி மாதம் முருக பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். கந்த ஷஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் என முருகனை நினைத்து பாராயணம் செய்வார்கள். பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மயில் காவடி, மச்ச காவடி, முருக காவடி, பறவைக்காவடி, தீர்த்தக்காவடி, அலகு குத்துதல்  என்று பக்தர்கள் தைப்பூச தினத்தில் அறுபடை வீடுகளில் வீற்றிருக்கும் முருகப்பெருமானை காவடிகளால் சூழ்ந்துவிடுவார்கள். இன்றைய தினத்தில் பக்தர்கள் பாதயாத்திரையாகவே முருகப்பெருமானைச் சந்தித்து தங்கள் துயரங்களைப் போக்கி கொள்வார்கள். குழந்தை முருகன் போல சின்ன சின்ன குழந்தைகளும் நேர்த்திக்கடன் செலுத்த காவடியைத் தூக்கி கொண்டு  வேல் வேல் வெற்றி வேல்... வேல் வேல் வீரவேல்.. கந்தனுக்கு அரோகரா.. முருகனுக்கு அரோகரா.. கடம்பனுக்கு அரோகரா...என்று முழங்கும் போது பார்க்கும் நமக்கே பக்தியில் உற்சாகம் பீறிட்டு கிளம்பும்.

பீடித்திருக்கும் நோய் விலக இன்று இதைச் செய்யுங்க!

இறைவனை அமைதியாக நாடி வேண்டுதலையும் சத்தமின்றி சொல்லும் நாம் முருகனிடம் மட்டும் முடிந்தளவு சத்தமிட்டு செல்வது பக்தர்களை மட்டுமல்ல.. கேட்கும் முருகனையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். செல்வம் வேண்டும், புகழ் வேண்டும், திருமணத்தடை நீங்க வேண்டும் என்பதையெல்லாம் கடந்து.. கடுமையாக பீடித்திருக்கும் இந்நோய் விலக வேண்டும் என்று மனமுருகி வேண்டுதல் வைத்து தைப்பூச தினத்தில் காவடி எடுத்தால் காவடி எடுக்கும் முன்னரே பீடித்த நோய் பறந்துவிடும் என்பதை பக்தர்கள் வாயிலாக கேட்கலாம். முருகனை வேண்டி விரதம் இருப்பவர்கள் இன்றைய தினம் முருகனைத் தரிசித்த பிறகே தங்களது விரதத்தை முடிப்பார்கள்.

தைப்பூசத்தன்று அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், லட்சார்ச்சனை, சாமி வீதி உலா, 1008 சங்காபிஷேகம் போன்றவை நடைபெறும். தைப்பூசதினத்தன்று தைப்பூச நாயகனுக்கு பழனியில் மட்டும் 10 நாட்கள் விழா கொண்டாடப்படும். முருகன் வள்ளி தெய்வானையுடன் வீதி உலா வரும் காட்சி காண கிடைக்காத தரிசனம். 7ஆம் நாள் நடைபெறும் தேரோட்டமும், 10 ஆம் நாள் நடைபெறும் தெப்போற்சவமும் மிகவும் புகழ்பெற்றவை. உலகெங்கும் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பாக கொண்டாடப்படும் இந்நாளில் பீடித்த நோயை விரட்டவும், வாழ்க்கையில் வறுமை வடியவும் கந்தனை... கடம்பனை... கதிர்வேலவனை... தகப்பனுக்கே பாடம் எடுத்த தகப்பன் சுவாமியை வணங்குவோம். அசுரர்களை வதம் செய்த அழகனின் வேல் நம்மை பீடித்திருக்கும் கொடிய அரக்கனான நமது நோயையும் விரட்டும் நந்நாள் இந்த தைப்பூசத்திருநாள். கந்தனுக்கு அரோகரா... முருகனுக்கு அரோகரா...

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP