மாதவிடாய் காலங்களிலும் இராமநாமம் சொல்லி புண்ணியம் சேர்க்கலாம்

பெண்கள் விலகியிருக்க வேண்டிய மூன்று நாட்களைக் கூட இராமநாம மகிமை சொல்லி புண்ணியத்தோடு கடக்கலாம். செய்யும் செயல்கள் இராம நாமத்தோடு தொடங்கினால் விளையக்கூடிய மாபாதகங்களும் விலகி ஓடும்.
 | 

மாதவிடாய் காலங்களிலும் இராமநாமம் சொல்லி புண்ணியம் சேர்க்கலாம்

வையகம் முழுக்க பரந்திருக்கும் அழிவே இல்லாத தீங்கற்ற பொருள் என்று பகவத் கீதையில் சொல்லப்பட்டிருக்கிறது  ஸ்ரீ இராம நாமத்தின் மகிமை பற்றி... 

பேராற்றல் வாய்ந்த இராம நாமத்தின் மகிமையை ஒரு கட்டுரையிலோ.. ஒரு புத்தகத்திலோ சுருக்கிவிடமுடியாது.... ஆனால் சொல்ல சொல்ல இனிக்கும் ஆணவத்தை அடக்கிடும். மனதில் மகிழ்ச்சியையும் அமைதியையும் ஏற்படுத்திவிடும் என்பதை பக்தர்கள் வாயிலாக கேட்கலாம்.

”நான் உணவின்றி பலநாள்கள் இருந்தாலும் இருப்பேன்.. ஆனால் இராம நாம ஜபமின்றி இமைப்பொழுதும், ஒரு கணமும் இருக்க மாட்டேன்..”. என்று சொல்கிறார் கம்பர்.. ஸ்ரீ இராம ஜெயம் எழுதினால் வெற்றிகிட்டும் என்னும் பக்தர்கள் மேலும் இராமபிரானை நெருங்கும் வழி என்றால் இராம நாமத்தை ஜபிப்பதுதான் என்று சொல்லலாம்.  

இராம நாமம் எழுத மனம், கை, உடல் மூன்றும் ஒருமித்து இயங்க வெண்டும். ஆனால் இராமா என்று மனதோடு இணைந்து உதடு சொன்னால் போதும்.. நா உண்டு நாமா உண்டு என்று பக்தர்கள் சொல்வது கூட இதனால்தான். 

மந்திரங்களையும் சாஸ்திரங்களையும் குருவிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் இராமநாம மகிமையைக் கற்றுகொள்ள தனி குரு தேவையில்லை.. இந்த  நாமமே குருவுக்கு நிகரானதுதான்.. நாமமே பிரம்மம்.. நாமமே குரு.... நாமமே எல்லாம் என்கிறார்கள் நாராயண பக்தர்கள்..

இராம நாமம் சொல்ல சொல்ல துன்பங்கள் நம்மை விட்டு தூரச்செல்கிறது.. மகிழ்ச்சி நெருங்கி வருகிறது. அறிந்தும் அறியாமலும் செய்த தவறுக்கு வருந்தி இராம நாமம் சொன்னாலே பிரயாசித்தம் கிடைத்த புண்ணியத்தைப் பெறுவோம்..

வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் இராம நாமம் கேட்கும் ஒவ்வொரு முறையும் எரிந்து சாம்பலாகின்றன. மனதில் இருக்கும் துர்குணங்களும் வெளியேறி மனதை தர்மவழியில் செலுத்தி இறைவனிடம் சேர்க்கிறது. பெண்கள் விலகியிருக்க வேண்டிய மூன்று நாட்களைக் கூட இராமநாம மகிமை சொல்லி  புண்ணியத்தோடு கடக்கலாம். செய்யும் செயல்கள் இராம நாமத்தோடு தொடங்கினால் விளையக்கூடிய மாபாதகங்களும் விலகி ஓடும். நன்மைமிக்க செயல்கள் மேலும் மேலும் நன்மையைக் கொண்டு வந்து சேர்க்கும்.

இராம நாமத்தைச் சொல்ல சொல்ல.. கேட்க.. கேட்க.. நினைக்க.. நினைக்க.. பிறவியில்லா பயனை அடையலாம். கேட்கும் பிறவிகளும் உயர்ந்த பிறவிகளையும் பெறலாம்... இராம நாமம் சொல்லும்போதெல்லாம் எங்கிருந்தாலும் ஓடி வரும் அனுமன் உங்களுடன் இணைந்து பக்தியோடு மனமுருகி சொல்கிறார் இராம இராம என்று... 

நித்திரைக்களையும் அதிகாலை முதல் நித்திரைக்குச் செல்லும் நடுசாமம் வரை உங்கள் உடலோடு இணைந்து ஸ்ரீ இராமரின்  நாமமும் உடன் வரட்டும்.. உங்கள் வாழ்வு இறைவனது அருளால் வளமாக அவன் வழிகாட்டுதலோடு சகலசெளபாக்கியங்களையும் கொண்டு வந்து சேர்க்கும். ராம்..ராம்…. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP