சகல காரியங்களிலும் வெற்றி தரும் திதி நித்யா தேவி ஸர்வமங்களா

நீங்கள் வளர்பிறை திரயோதசி அல்லது தேய் பிறை த்ரிதியை திதிதியில் பிறந்திருந்தால், உங்களுக்குரிய திதி நித்யா தேவி ஸர்வமங்களா. அன்றைய தினம் வீட்டில் விளக்கேற்றி, ஸர்வமங்களாவை வணங்கினால், வழக்குகளில் வெற்றி உண்டாகும். வாழ்வில் கிட்ட வேண்டிய அனைத்து பேறுகளும் கிட்டும். பயணக்காலங்களில் ஆபத்துகள் நெருங்காது.
 | 

சகல காரியங்களிலும் வெற்றி தரும் திதி நித்யா தேவி ஸர்வமங்களா

நிம்மதியாக வாழ என்ன வேண்டும்… கல்வியில் சிறப்பு, தொழிலில் மேன்மை, குடும்பத்தில் அமைதி, செல்வத்தில் சிறப்பு, சீரான ஆரோக்யம், தடையில்லா திருமணம், குழந்தைப்பேறு இவையெல்லாம் இருந்துவிட்டால், வேறு என்ன வேண்டியிருக்கிறது, மனிதப்பிறப்பை  கடக்க…. 

ஆனால் இவற்றில் எல்லாமேவா கிடைக்கும். அதிலும், வேண்டுதல் ஒன்றிலேயே என்று அறியாமல் இருப்பவர்களுக்கு அனைத்தும் தந்து, அபயம் அளிக்கிறாள் ஸர்வ மங்களா தேவி. வெளியே செல்லும் போது, எதிரில் யார் வருகிறார்கள் என்று பார்க்காமல், ஸர்வமங்களாவை நினைத்து வேண்டி சென்றால்,  போகும் காரியங்களில் வெற்றியும்,  தீங்கு விளைவிக்கும் ஆபத்தும் நெருங்காமல் இருக் கும். ஸர்வமங்களத்தையும்  கேட்கும் பக்தர்களுக்காக அருள் பாலிக்கிறாள் ஸர்வமங்களா. 
 
நீங்கள் பிறந்ததேதிக்கு உரிய திதி நித்யா தேவியை, அந்த திதி நாளில், ஸ்ரீ லலிதாம்பிகையுடன் ஸ்ரீ சக்கரம் வைத்து கொடுத்திருக்கும் மூலமந்திரத்தை, ஒரு வருடம் சொல்லி வந்தால், திதி சூனியம் நீங்கி, வாழ்வில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். 

நீங்கள்  வளர்பிறை திரயோதசி அல்லது தேய் பிறை த்ரிதியை திதிதியில் பிறந்திருந்தால், உங்களுக்குரிய திதி நித்யா தேவி ஸர்வமங்களா. அன்றைய தினம் வீட்டில் விளக்கேற்றி, ஸர்வமங்களாவை வணங்கினால், வழக்குகளில் வெற்றி உண்டாகும். வாழ்வில் கிட்ட வேண்டிய அனைத்து பேறுகளும் கிட்டும். பயணக்காலங்களில் ஆபத்துகள் நெருங்காது. 

ஸர்வமங்களா:
திதி நித்யா தேவிகளில் பதிமூன்றாம் இடத்தில் இருப்பவள். அனைத்து மக்களங்களுடன், ஆயுதம் இன்றி இருக்கும் அன்னையானவள், பக்தர்களுக்கு மங்களங்களை அள்ளித்தருவதிலும், தனித்திறன் மிக்கவள். மின்னும் தங்க நிறத்தைக் கொண்டு, தாமரை மலரில் வீற்றிருக்கும் தங்கநிறமுடையவள். 
முத்துக்களும், இரத்தினங்களால் வாய்ந்த அணிகலன்களும், இவளை மேலும் அலங்கரிக்கின்றன. புராணங்களில் ஸர்வமங்களைவச் சுற்றி, 72 காவல் தெய்வங்கள் இருப்பதாக கூறுகின்றன. நான்கு திருக்கரங்களிலும் மாதுளம் பழம், தங்கப்பாத்திரம், அபயவரதம் தரித்து திதி நித்யா தேவிகளுக்கு எதிரான இளநகையுடன் கூடிய திருமுகத்தைக் கொண்டவள்.

மூலமந்திரம்:
ஓம் ஸர்வமங்களாயை வித்மஹே
சந்த்ராத்மிகாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP