ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் அனுமதி

ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் அனுமதி
 | 

ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் அனுமதி

ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 6 நாட்கள் அனுமதி வழங்க முடிவு செயப்பட்டுள்ளதாக விருதுநகர் கலெக்டர் சிவஞானம் தெரிவித்தார்.

சதுரகிரியில் ஆடிஅமாவாசை விழா ஆகஸ்ட் 9 தேதி முதல் 11 தேதி வரையில் நடக்கிறது.  கோயிலுக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பைகளைக் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டு, அதற்கு பதிலாக துணிப் பைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், பக்தர்கள் குடிநீர் பாட்டில்களையும் கொண்டு செல்ல சில நிபந்தனைகளுடன்  அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

தனியார் வாகனங்கள் மலையடிவாரத்திற்கு 7 கி.மீ. முன்பாகவே மைதானத்தில் நிறுத்தப்படும் என்றும், அங்கிருந்து பக்தர்கள் சிறப்பு பேருந்து மூலமாக மலையடிவாரத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர் என்றும் தெரிவித்தார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP