வீடு மனை வாங்க... வாஸ்து தோஷம் நீங்க... யாரை வழிபடலாம்?

இந்திரன், எமன், அக்னி, நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் இவர்கள்தான் அஷ்டதிக் பாலகர்கள் என்று அழைக்கப்படுகி றார்கள். இவர்களது ஆட்சியில் பூமி இயங்குவதாலேயே இந்திர மூலை, அக்னி மூலை, வாயு மூலை, ஈசானிய மூலை என்று அழைக்கிறோம்.
 | 

வீடு மனை வாங்க... வாஸ்து தோஷம் நீங்க... யாரை வழிபடலாம்?

அஷ்டம் என்றால் எட்டு என்று பொருள்..  திக் என்றால் திசை என்று அர்த்தம். இதுதான் அஷ்டதிக் என்று அழைக்கப்படுகிறது. நம்மைச் சுற்றி இருக்கும் கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு ஆகிய எட்டு திசைகளிலும் எட்டு பாலகர்கள் பூமியைத் தாங்கி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.  இந்திரன், எமன், அக்னி, நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் இவர்கள்தான்  அஷ்டதிக் பாலகர்கள் என்று அழைக்கப்படுகி றார்கள். இவர்களது ஆட்சியில் பூமி இயங்குவதாலேயே இந்திர மூலை, அக்னி மூலை, வாயு மூலை, ஈசானிய மூலை என்று அழைக்கிறோம். 

நம்மை கண்காணிக்கும் அஷ்டதிக் பாலகர்களுக்கு துணையாக நவக்கிரகங்கள் இருக்கிறார்கள். வாஸ்து சாஸ்திரத்தில் முக்கியபங்கு வகிக்கும் குபேரனும், ஈசானும்  கூட அஷ்டதிக் பாலகர்களில் ஒருவராக விளங்குகிறார்கள். இவர்கள் கோயில் கோபுரங்களிலும், கோயில் சுவர்களிலும் ஓவியங்களாகவும், சிலை வடிவிலும்  அமைந்திருக்கிறார்கள். 

இந்திரன்: அஷ்டதிக் பாலகர்களின் தலைவனாக இந்திரன்  இருக்கிறார்.  கிழக்கு திசக்கு உரியவரான இந்திரன் ஐராவதம் என்னும் வெள்ளையானையை வாகனமாகக் கொண்டிருக்கிறார். இவரை வணங்கினால் ஆரோக்யமும் ஐஸ்வரி யமும் பெருகும்.

அக்னி:  இவர்  தென்கிழக்கு திசையின் அதிபதி. வேள்வியின் போது அக்னியில் இடப்படும் பொருள்களை  பிற தெய்வங்களுக்கு எடுத்து செல்லும் இவரது வாக னம் ஆடு. இவரை வணங்கினால் வனப்பும், மனதில் பலமும் மேன்மையும் உண்டாகும்.

எமன்: தெற்கு திசையின் காவலன். எருமை வாகனத்தைக் கொண்டவர். தீவினை யால் வரும் துன்பத்தை நீக்குவதற்கும்  நற்பேறை  அடைவதற்கும் எமதர்மனை துதிக்கலாம்.

நிருதி: தென்மேற்கு திசையின் அதிபதி. பிரேத வாகனமுடையவர். எதிரிகளிடத்து பயம் நீங்க இவரை வழிபடுவது நல்லது.

வருணபகவான்: மேற்கு திசையின் காவலர். மரகம் என்ற மீனை வாகனமாக கொண்டவர் இவர். மழையை வேண்டியிருக்கும் மக்கள் வணங்க வேண்டியது வருணபகவானைத்தான்.

வாயு: வடமேற்கு திசையின் காவலன். மான் வாகனத்தைக் கொண்டவன். நாம் சுவாசிக்கு ப்ராணனுக்கு சொந்தக்காரன். நீண்ட ஆயுளும்  பலமும் கிடைக்க இவனை வழிபடலாம்.

குபேரன்: வடக்கு திசையின் அதிபதியானவன். செல்வத்தின் அதிபதி. இவர் மதுஷனை  வாகனமாக கொண்டிருக்கிறார்.  வாழ்வில் சகல செளபாக்கியங்க ளும் வாரி வழங்க குபேரனை தான் வழிபட வேண்டும்.

ஈசானன்: வடகிழக்கு திசையின் அதிபதி இவர். எருதை வாகனமாக கொண்டி ருப்பவர். அறிவும் ஞானமும் வேண்டி இவரை வணங்குவது சிறந்தது.  

வாஸ்து தோஷம் நீங்கவும் அஷ்டதிக் பாலகர்களை வணங்கலாம். வீடு மனை  வேண்டுபவர்கள் அஷ்டதிக் பாலகர்களின் முன்பு தீபம் ஏற்றி, அவருக் குரிய காயத்ரி மந்திரத்தை ஜெபித்தால்  பாக்கியம் கிட்டும்.  வீட்டில் வாஸ்து சக்தி பெருகும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP