அருள் தரும் ஆடியை வரவேற்போம்!

கடக ராசி, சந்திரபகவானுக்கு உரியது. சந்திர பகவானின் ஆட்சி வீடு, சக்தி அம்சத்தைக் குறிக்கும். சூரியன் சிவபெருமானின் அம்சம். இவர் சந்திரனின் ஆட்சி வீடான கடகராசியில் அமர்வதால், சக்தியின் பலம் அதிகரிக்கிறது. சிவன் சக்திக்குள் ஐக்கியமாவதால் இம்மாதம், சக்திக்கு உரிய மாதமாக, அம்மன் மாதமாக அழைக்கப்படுகிறது. ஜோதிட நூல்கள் பலவற்றில், ஆடிமாதத்தை சக்தி மாதம் என்று குறிப்பிட்டுள்ளது.
 | 

அருள் தரும் ஆடியை வரவேற்போம்!

இறைவனின் படைபப்பில் எல்லா நாளும் நல்ல நாளே எனும் பழமொழிக்கேற்ப, ஆண்டின் அனைத்து மாதங்களும் சிறப்பு மிக்கவையே. எனினும், ஒவ்வொரு மாதத்திற்கு ஓர் சிறப்பு அம்சம் உள்ளது என்றால், ஆடி மாதம் முழுவதுமே சிறப்பானது தான். ஆடி முதல் மார்கழி மாதம் வரையான ஆறு மாதங்கள், தட்சிணாயண புண்ய காலம் என்றும், தை முதல் ஆனி வரை உள்ள ஆறு மாதங்களும் உத்தராயண புண்ய காலம் என்றும் அழைக்கப்படுகிறது. 

இதில் தேவர்களின் காலைப் பொழுது உத்தராயண காலம் என்றும், இரவுப் பொழுது தட்சிணாய காலம் என்றும்  சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.  ஆடி மாதம் சூரிய பகவானின் தேர், வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணிக்கும். 
 அருள் தரும் ஆடியை வரவேற்போம்!

மனிதர்களுக்கு ஒருவருட காலம் என்பது, தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும்.  அதில், ஆடிமாதம் என்பது தேவர்களுக்கு சந்தியா பொழுது எனப்படும் மாலைப் பொ ழுது ஆரம்பிக்கும் காலம். அதனால் தான் பூஜைகள், விரதங்கள், வழிபாடுகளுக்கு உரிய காலமாக,  ஆடி மாதம் விளங்குகிறது.  

சனாதன தர்பமத்தின் பாரம்பரியப்படி, நாம் வணங்க வேண்டிய முதல் கடவுள் சூரிய பகவானே. சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் கால அளவான , 31 நாள்கள்,  28 நாழிகைகள், 12 விநாடி கால அளவு என்பதால், ஆடி மாதம் கற்கடக மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. 

கடக ராசி, சந்திரபகவானுக்கு உரியது. சந்திர பகவானின் ஆட்சி வீடு, சக்தி அம்சத்தைக் குறிக்கும். சூரியன் சிவபெருமானின் அம்சம். இவர் சந்திரனின் ஆட்சி வீடான கடகராசியில் அமர்வதால், சக்தியின் பலம் அதிகரிக்கிறது. சிவன் சக்திக்குள் ஐக்கியமாவதால் இம்மாதம், சக்திக்கு உரிய மாதமாக, அம்மன் மாதமாக அழைக்கப்படுகிறது.  ஜோதிட நூல்கள் பலவற்றில், ஆடிமாதத்தை சக்தி மாதம் என்று குறிப்பிட்டுள்ளது.

அருள் தரும் ஆடியை வரவேற்போம்!

தேவி பாகவதத்தில், ஆடிமாதத்தில் தான் பார்வதி தேவி மலையரசனின் மகளாக பிறந்தாள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன், பூமா தேவி, ஆண்டாளின் அவதாரம் நடந்தது, ஆடி மாதமே. சக்தி பீடங்கள் அனைத்திலுமே ஆடி மாதம் முழுவதும் விசேஷ பூஜைகளும், ஆராதனைகளும், வழிபாடுகளும் நடைபெறும். 

சிறிய, பெரிய நகரங்கள், கிராமங்களில் இருக்கும் மாரியம்மன் கோயில்களிலும், கூழ் வார்த்தல், பூ மிதித்தல் (தீ மிதித்தல்) பால் குடம் எடுத்தல் போன்ற வழிபாடுகள் பெரும் திருவிழாக்களாக கொண்டாடப்படும்.
பெண் தெய்வங்களை வழிபட்டு, அவர்களது அருளை பெறுவதற்காக ஆடி மாதம் முழுவதும் வேண்டுதல்களும், வழிபாடுகளும், பூஜைகளும் நடக்கிறது.

அருள் தரும் ஆடியை வரவேற்போம்!

அம்மன் அருள் தரும் இந்த ஆடி மாதத்தில், அதன் சிறப்புகள் குறித்து இனி வரும் தொடர்களில் விரிவாகக் காணலாம்.  (நாளை ஆடி பிறக்கிறது) 

newstm.in


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP