வைகுண்ட ப்ராப்தி அளிக்கும் பீஷ்ம ஏகாதசி – ( 3.12.2018)

குருக்ஷேத்ரம் தர்மக்ஷேத்ரம் என்றும் போற்றப்படுகிறது. குருக்ஷேத்ரத்தில் கண்ணன் கூறிய போற்றதலுக்குரிய பகவத் கீதை தோன்றியது ஏகாதசியில்தான். மேலும் சிறப்புமிக்க விஷ்ணு சகஸ்ர நாமம் தோன்றியதும் ஏகாதசியில்தான்.
 | 

வைகுண்ட ப்ராப்தி அளிக்கும் பீஷ்ம ஏகாதசி – ( 3.12.2018)

நமது  முன்னோர்கள்  வருடத்தின் முக்கிய நாட்களில் பண்டிகைகளைக் கொண்டாடி, நோன்புகளையும், விரதங்களையும் மேற்கொண்டனர். அவற்றில் ஒன்று ஏகாதசி விரதம். வேதங்களில் புருஷஸூக்தமமும், தர்ம சாஸ்திரங்களில் மநுஸ்ம்ருதியும், புராணங்களில் விஷ்ணுபுராணமும், கவிகளில் வால்மீகியும், மகரிஷிகளில் வியாஸரும், ஞானிகளில் பீஷ்மரும், மந்திரங்களில் மந்த்ரராஜமும், வில்வித்தையில் அர்ஜுனனும், பாரதத்தில் ஸ்ரீ கீதை அவதாரங்களில் ஸ்ரீககிருஷ்ணனும் சிறந்ததவை என்கின்றனர். அந்த வகையில் விரதங்களில் ஏகாதசியும் தலைச் சிறந்ததாக சொல்லப்படுகிறது.  அனைத்து நோன்புகளையும் விட  உயர்ந்த இந்த விரதத்துக்குரிய கடவுள் எம்பெருமான் . மாதம் இருமுறை வரும் இந்த விரத தினத்தில் மனதில் ஆன்மிகத்தை நிரப்பி வயிற்றை காலியாக வைக்கும்  போது  உடலில் பொலிவுடன் தேஜஸும்,   கடவுளின் அருளும் பெருகும். மார்க்கண்டேய புராணமும், விஷ்ணு புராணமும் ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பவனுடைய  பாவங்கள்  தீர்ந்துவிடும் என்று சொல்கின்றன.

குருக்ஷேத்ரம் தர்மக்ஷேத்ரம் என்றும் போற்றப்படுகிறது.  குருக்ஷேத்ரத்தில் கண்ணன் கூறிய  போற்றதலுக்குரிய பகவத் கீதை தோன்றியது ஏகாதசியில்தான். மேலும் சிறப்புமிக்க விஷ்ணு சகஸ்ர நாமம்  தோன்றியதும் ஏகாதசியில்தான். மகாபாரதத்தில் பீஷ்மர் அம்பு படுக்கையில் இருக்கும் போது, பாண்டவர்கள் ஸ்ரீ கிருஷ்ணருடன் அவரை சென்று வணங்குகிறார்கள். ஸ்ரீ கிருஷ்ணர் பாண்டவருக்கு தர்மத்தை உபதேசிக்கும்படி பீஷ்மரிடம் கோருகிறார்.  விஷ்ணுவின் பெயர்களைத் தியானித்தும், துதித்தும், வணங்கியும் ஒருவன் இருப்பானானால் அவன் எல்லாவித துக்கங்களையும் கடந்துவிடுவான் என்ற  பீஷ்மர் ஸ்ரீமந்  நாராயணனின் பெருமைகளைப் போற்றும் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் என்ற திவ்ய ஸ்தோத்திரத்தை உபதேசித்ததார். இப்படி  ஆயிரம் நாமங்களால் போற்றப்படும் ஸ்ரீ மந் நாராயணன் வேறு யாருமல்ல... உங்களுடன் இருக்கும் இந்த ஸ்ரீ கிருஷ்ணர்தான் என்று பாண்டவர்களிடம் கூறுவதோடு ஸ்ரீ கிருஷ்ணரையும் வணங்குகிறார். விஷ்ணுசகஸ்ரநாமம் பிறந்த இந்தப் புண்ணிய  நாளைத்தான் நாம் பீஷ்ம ஏகாதசி என்று கொண்டாடுகிறோம். வடநாட்டில் நிர்ஜலா ஏகாதசி என்று கொண்டாடுகிறார்கள். நிர்ஜலா ஏகாதசி என்றால்  சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல் விரதம் இருக்க வேண்டும். வருடத்திலுள்ள 24 ஏகாதசிகளில் முக்கியமான ஏகாதசி இது. மற்ற ஏகாதசியை விட இந்த நாளில் தான்  கடுமையான விரதம் இருப்பர். 

இன்று  பானகம்,  பழங்கள், ஆடைகள், அன்னதானம் என இயன்றதை தானம் செய்வது மிகவும்  நல்லது. சில இடங்களில் விஷ்ணு கோயில்கள் விடிய விடிய திறந்திருக்கும். பூஜைகளாலும், பஜனைகளாலும் விஷ்ணு பகவான் மனம் குளிர்வார். மனிதர்கள் செய்யும் பலாபலன்களுக்கேற்ப அவர்களுக்கான  சொர்க்க வாசலோ, நரக வாசலோ திறக்கப்பட்டிருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் இந்த பீஷ்ம விரத்தத்தை அனுஷ்டிப்பவர்கள் நேரடியாக  வைகுண்டத்துக்கு செல்வார்கள்  என்று சொல்லப்படுகிறது. இந்த பீஷ்மஏகாதசியன்று  உள்ளத்தூய்மையும், புறத்தூய்மையும் கொண்டு  விஷ்ணு சக்ஸ்ர நாமத்தைப் படித்தோ அல்லது கேட்டோ விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் வாழ்வில் அனைத்துப் பேறுகளையும் பெற்று செல்வச் செழிப்போடு, நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து வைகுண்டத்துக்குச் செல்வார்கள்.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP