இன்று ஆடி கிருத்திகை: விரதம் இருந்தால் முக்தியை பெறலாம்!

முருகன் பிறந்தது விசாகம் நட்சத்திரம் என்றாலும் முருகனை சீராட்டி வளர்த்தது கார்த்திகை பெண்கள் என்பதால் அவர்களது முக்கியத்துவம் கொடுக்கப்படு கிறது .மாதங்களில் வரும் கிருத்திகையைத் தாண்டி தை கிருத்திகை, கார்த்தி கிருத்திகை கொண்டாடப்பட்டாலும், உலகெங்கிலும் உள்ள தமிழ்மக்கள் கொண்டாடுவது ஆடி கிருத்திகைதான்.
 | 

இன்று ஆடி கிருத்திகை: விரதம் இருந்தால் முக்தியை பெறலாம்!

கிருத்திகை அல்லது கார்த்திகை நட்சத்திரம் முருகப்பெருமானின் நட்சத்திரம். மாதந்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம், முருகனுக்கு விசேஷமானது. கார்த்திகை என்பது முருகனின் பெயர்களில் ஒன்றான கார்த்திகேயன் என்பதைக் குறிக்கும். இவையே மருவி கிருத்திகை என்று அழைக்கப்படுகிறது. 

முருகன் பிறந்தது விசாகம் நட்சத்திரம் என்றாலும் முருகனை சீராட்டி வளர்த்தது கார்த்திகை பெண்கள் என்பதால் அவர்களது முக்கியத்துவம் கொடுக்கப்படு கிறது .மாதங்களில் வரும் கிருத்திகையைத் தாண்டி தை கிருத்திகை, கார்த்தி கிருத்திகை கொண்டாடப்பட்டாலும், உலகெங்கிலும் உள்ள தமிழ்மக்கள் கொண்டாடுவது ஆடி கிருத்திகைதான். 

இன்று ஆடி கிருத்திகை: விரதம் இருந்தால் முக்தியை பெறலாம்!

அனைத்து முருகன் கோயிலிலும் சிறப்பு வழி பாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனைகள் வெகு சிறப்பாக நடைபெறும்.பத்மாசுரன், சிங்கமுகன் உள்ளிட்ட அசுரர்களால் பாதிக்கப்பட்ட முனிவர்களும், தேவர்களும் தங்களை காப்பாற்றும்படி பார்வதி தேவியிடம் முறையிட்டார்கள். பார்வதி தேவி அகிலாண்டேஸ்வரிடம் அந்த அசுரனை வதம் செய்ய வேண்டும் என்று வேண்டினாள். 

சிவபெருமான், நெருப்பு  வடிவம் கொண்டு தவம் செய்துகொண்டிருந்த காலம் அது. எனினும் பார்வதி தேவியின் அழைப்பில் தன்னுடைய தவத்தைக் கலைத்தார்.பார்வதி தேவி கேட்டதற்கிணங்க அசுரனை வதம் செய்ய வேண்டி தனது நெற்றிக்கண்ணை திறந்தார். அதிலிருந்து ஆறு ஜோதிகள் புறப்பட்டன.  

அந்தப் பொறிகளை வாயுவும், அக்னியும் கங்கையில் சேர்த்தனர். ஆறு தாமரை மலர்களில் ஆறு குழந்தைகள் உருவாயின. அந்த  ஆறு குழந்தைகளையும் வளர்க்கும் பொறுப்பு 6 கார்த்திகைப் பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கார்த்திகை பெண்கள் ஆறுபேரும் கந்தனைப் பாலூட்டி வளர்த்த காரணத்தால், அவர்கள் 6 பேரும் தாய் என்ற சிறப்பைப் பெற்றார்கள். முருகன் குழந்தையாக இருந்ததும், திருவிளையாடல் புரிந்ததும் ஆறு நாட்களே. இப்படி சகலத்திலும், 6 என்னும் எண் முக்கியமாய் அமைய பெற்ற முருகனுக்கான நாமமும் சரவணபவ என்னும் ஆறெழுத்துக்கள் ஆகும்.

இன்று ஆடி கிருத்திகை: விரதம் இருந்தால் முக்தியை பெறலாம்!

குமாரன் வளர்ந்ததும் சிவபெருமான் உமையாளுடன் தோன்றி, ஆறு பேரையும் ஒன்றாக்கி கந்தன் என்ற பெயர் சூட்டி வாழ்த்தினாள். அப்போது, எம்பெருமான் கார்த்திகை பெண்களை வாழ்த்தி இனி கந்தன் என்ற பெயரோடு உங்கள் பெயராகிய கார்த்திகேயன் என்றும் அழைக்கப்படுவான் என்று வாழ்த்தினார்.

இன்று ஆடி கிருத்திகை: விரதம் இருந்தால் முக்தியை பெறலாம்!

கந்தனை வளர்த்த கார்த்திகைப் பெண்களுக்கு நட்சத்திரப் பதவி அளித்து, கார்த்திகைப் பெண்களின் நட்சத்திரம் வரும் சமயம் இவர்களை வேண்டி விரதம் இருப்பவர்களுக்கு நல்வாழ்வு கிடைக்கும். முக்தி பெறலாம் என்று அருளினார். இந்த கார்த்திகை விரதமே கிருத்திகை விரதமாயிற்று.

இன்று விரதமிருந்து கார்த்திகைப் பெண்களை வழிபடுவதன் மூலம், கந்தனின் அருளையும் பெறலாம். இன்று ஆடிவெள்ளியும் இணைந்திருப்பதால், விரதவழிபாட்டில் அம்மன் அருளையும் பெரும் பேறு கிட்டும். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP