மனக்கவலை போக்கும் ஷீரடி

சரி, சாய்பாபாவுக்கு வேதங்கள், உபநிடதங்கள் சாஸ்திரங்கள் தெரியுமா? தெரியாது. புராண இதிகாசக் கதைகளாவது புரியுதா? புரியாது ஏன் ? அவருக்கு எழுதப்படிக்கவே தெரியாது. ஆனால் சாய்பாபாவுக்கு ஒரே வரியில் தான் தெரியும். அந்த மந்திரம் இறைவன் உயர்ந்தவன் என்பதாகும் அவருடைய தொண்டர் சேனை பல்கிப் பெருகி உலகெங்கும் வியாபித்திருக்கிறது .
 | 

மனக்கவலை போக்கும் ஷீரடி

இந்துக்களுக்குப் புண்ணிய பூமியாக விளங்குவது காசி, ராமேஸ்வரம். இஸ்லாமியச் சகோதரர்களுக்குப் புண்ணிய பூமியாக விளங்குவது அஜ்மீர், நாகூர்  தர்க்கரக்கள்.  நாசரேத் - வேளாங்கண்ணி கிறித்தவ மக்களுக்குப் பரிசுத்த பூமி. ஆனால், கோதாவரிக்கரை “பக்கிரி “ சாய்பாபாவின் பாதம் பட்டு உயிர் தெழுந்து விட்ட ஷீரடி கிராமம் மந்திர பூமியாகி விட்டது . அதனால்தான் எங்கெங்கோ பிறந்த பல்வேறு சமய மக்களும் பக்கிரி சாய்பாபாவின் சரணாலயத்திற்கு இளைப்பாறிய ஆறுதலும் அமைதியும் பெற வந்து கொண்டே இருக்கிறார்கள்.

மனித சக்திகளுக்கு அப்பால் அவரிடம் ஏதாவது அமானுஷ்யசக்தி இருந்ததா? அப்படி இருப்பதாக அவர் என்றுமே சொன்னதில்லை. அதற்கான அடையாளங்கள் கூட காட்டியவில்லை.

வசதிமிக்க ஆஸ்ரமங்களில் சாய்பாபா வாழ்ந்தாரா ? இல்லை. சிதைந்து போன ஒரு மசூதி தான் அவருக்கு ஆஸ்ரமம் ஆலயம் எல்லாம். சாய்பாபா புலித்தோல் அணிந்த பொன்னார் மேனியனாக விளங்கினார்? இல்லை. தலையில் கட்டுவதற்கு ஒரு கிழிந்த துண்டு, தொடையை மறைக்க இன்னொரு கந்தல் வேட்டி, அதற்கு மேல் அழுக்கை சுமக்கும் ஒரு அங்கி. அந்த கடைசி காலத்தில் கிடைத்த சீதனம்.

மனக்கவலை போக்கும் ஷீரடி

சாய்பாபா வேள்வியின் நாயகனாகக் காட்சி தந்ததில்லை. அவர் யார் ? பூர்வீகம் என்ன ?  என்ற கேள்வியின் நாயகனாக கடைசி வரை வாழ்ந்தார். தலைக்கு வைத்துப் படுக்க ஒரு செங்கல், விரித்து உடலைக் கிடத்திட இரண்டு சணல் சாக்குகள். அவர் சீரடிக்கு வரும் போது கொண்டு வந்த பெட்டகங்கள் இவை தான். கடைசி வரை இந்த கஜானாக்களை அவர் கைவிடவே இல்லை. திருவோடு ஏந்தி தினசரி வீடுகளில் பிச்சை எடுத்து உண்டார். என்றாலும் அவர் மேனி தங்கமாக மின்னியது.

சரி, சாய்பாபாவுக்கு வேதங்கள், உபநிடதங்கள் சாஸ்திரங்கள் தெரியுமா?  தெரியாது. புராண இதிகாசக் கதைகளாவது புரியுதா? புரியாது ஏன் ? அவருக்கு எழுதப்படிக்கவே தெரியாது. ஆனால் சாய்பாபாவுக்கு ஒரே வரியில் தான் தெரியும். அந்த மந்திரம் இறைவன் உயர்ந்தவன் என்பதாகும் அவருடைய தொண்டர் சேனை பல்கிப் பெருகி உலகெங்கும் வியாபித்திருக்கிறது . சாய்பாபா! எங்களோடு வாழும் இறைவா ! என்று அவர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள். மன உளைச்சலில் மூழ்கிய உள்ளத்திற்கு சாய்பாபா உற்சாகம் தருகிறார். ஓய்ந்து போய் இடறுகின்ற கால்களுக்கு உரமேற்றி ஒளி வெள்ளப் பாதை காட்டுகிறார்.
                                                                                                               ஓம்ஸ்ரீசாய்ராம் !!!

மனக்கவலை போக்கும் ஷீரடி

டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்
EMAIL: venkatraman.ramasundaram@gmail.com
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP