முருகனின் அருளை அள்ளித் தரும் ஆடிச் செவ்வாய்!

செவ்வாய்க்கிழமைகளில் கிருத்திகை அல்லது விசாக நட்சத்திரம் அமைந்திருந்தால், அன்றைய தின விரதம் நிச்சயம் பலன் கொடுக்கும் விரதமாக இருக் கும். இன்றைய தினம், பூஜையறையில் நடுவில் வேல்வைத்து இருபுறமும் இருவிளக்குகள் வைத்து, ஒவ்வொரு விளக்கிலும் மூன்று திரிகள் விட்டு ஆறு தீபங்களாக ஏற்றுவித்தால் விரதம் சிறப்பு பெறும். பூஜையறையில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராக காட்சி அளிக்கும் படம் வைத்து வழிபட வேண்டும்.
 | 

முருகனின் அருளை அள்ளித் தரும் ஆடிச் செவ்வாய்!

செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கு உகந்த நாள். செவ்வாய் எனப்படும் அங்காரகனுக்குரிய தெய்வமாக விளங்குவது, முருகப்பெருமானும், சக்தி தேவியும். ஆம், புராணக்கதைகளின் படி, பூமிதேவியின் மகன் செவ்வாய். இந்த செவ்வாய்க்கும், முருகப்பெருமானுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

நவக்கிரக வழிபாடுகளில் செவ்வாயோடு நேரடி தொடர்புடையவர், முருகப்பெருமான். அதனால் தான், பொதுவாகவே செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வேண்டி விரதமிருந்து வழிபடுவது உகந்தது என்கிறார்கள். அதிலும், ஆடி செவ்வாய்க்கிழமை மிகவும் உயர்ந்த விரதமாகவே பாவிக்கப்படுகிறது. ஆடி செவ்வாய் தேடிக்குளி என்று சொல்வார்கள்.

செவ்வாய்க்கிழமைகளில் கிருத்திகை அல்லது விசாக நட்சத்திரம் அமைந்திருந்தால், அன்றைய தின விரதம் நிச்சயம் பலன் கொடுக்கும் விரதமாக இருக் கும். இன்றைய தினம், பூஜையறையில்  நடுவில் வேல்வைத்து இருபுறமும் இருவிளக்குகள் வைத்து, ஒவ்வொரு விளக்கிலும் மூன்று திரிகள் விட்டு ஆறு தீபங்களாக ஏற்றுவித்தால் விரதம் சிறப்பு பெறும். பூஜையறையில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராக காட்சி அளிக்கும் படம் வைத்து வழிபட வேண்டும்.

முருகனின் அருளை அள்ளித் தரும் ஆடிச் செவ்வாய்!

ஆடி செவ்வாய்க்கிழமைகளில், முருகப்பெருமானின் தலங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆடி செவ்வாயில் முருகப்பெருமானை நினைத்து விரத மிருப்பவர்கள் வீட்டில் பூஜை செய்து விரதமிருந்து வழிபடுவதை விட, முருகன் கோவிலில் இரவு தங்கி, 1 நாள் விரதம் இருந்து, முருகனை தரிசித்தால் கிடைக்கும் பலன் இரட்டிப்பாகும்.

அன்றைய தினம் அதிகாலையில் நீராடி, முழு முதற்கடவுளான பிள்ளையாரை வணங்கி,  ஓம் சரவண பவ எனும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். நாள் முழுவதும் முருகன் நினைப்பிலேயே இருந்து, கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், முருகன் அனுபூதி உள்ளிட்டவற்றை பாராயணம் செய்யலாம். 

அன்று  பச்சரிசி, பாசிப்பருப்பு, நெய், மிளகு, சீரகம் சேர்த்து உப்பில்லா பொங்கல் செய்து பிரசாதம் படைத்து சாப்பிடவேண்டும். அன்றைய தினம் கந்தப்புராணம் படிப்பது நல்லது. இரவு தூங்கும் போது போர்வையின்றி வெறும் தரையில் படுக்க வேண்டும். அன்றைய தினம் சிவப்பு நிற ஆடைகளையே அணிவது நல்லது. 

முருகனின் அருளை அள்ளித் தரும் ஆடிச் செவ்வாய்!

முருகப்பெருமானுக்குரிய இத்தினத்தில், இயலாதவர்களுக்கு அன்னதானம் செய்தால் முருகனின் அன்பைப் பெறலாம். ஆடி செவ்வாயில் முருகப்பெருமானை நினைத்து  விரதம் இருந்தால், குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். கல்வியில் உயர்வடைய நினைக்கும் மாணவர்கள் சிறந்து விளங்கலாம். 

சொந்த வீடு கனவுகள் நனவாக முருகப்பெருமான் அருள்புரிவார். திருமணப்பேறும் குழந்தை செல்வமும் அருள்வார். வாழ்க்கையில் பேரும் புகழும் உண்டாகும். இயன்றால் முருகனின் சிறப்பு தலங்களான, ஆறுபடை வீடுகளில் ஏதேனும் ஒன்றிற்கு சென்று வழிபடலாம். அது தவிர, மருதமலை, வைத்தீஸ்வரன் கோவில் உள்ளிட்ட சிறப்பு வாய்ந்த முருகத்தலங்களுக்கும் சென்று வரலாம். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP