உயிர்பலிகளை தடுத்து நிறுத்திய ஆதிசங்கரர் – அதிசங்கரர் ஜெயந்தி…

உடல் தூய்மையும் உடை தூய்மையும் இறைபக்தியை அடையும் வழிக ளில் ஒன்று என்று சொல்லும் நேரத்தில் உள்ளம் தூய்மையாக இருந்தால் தான் ஆன்மாவின் தத்துவத்தை நாமெல்லாம் அறிந்துகொள்ள முடியும் என்று உணர்த்தியவர் ஜகத் குரு ஆதிசங்கரர்.
 | 

உயிர்பலிகளை தடுத்து நிறுத்திய ஆதிசங்கரர் – அதிசங்கரர் ஜெயந்தி…

உடல் தூய்மையும்  உடை தூய்மையும் இறைபக்தியை  அடையும் வழிக ளில் ஒன்று என்று சொல்லும் நேரத்தில் உள்ளம்  தூய்மையாக இருந்தால் தான் ஆன்மாவின் தத்துவத்தை நாமெல்லாம் அறிந்துகொள்ள முடியும்  என்று உணர்த்தியவர் ஜகத் குரு ஆதிசங்கரர்.

ஐந்துவயதில் உபநயனம் நடத்தப்பெற்ற ஆதிசங்கரர்  கருவிலேயே திருவாக வளர்ந்தார்.  ஆதிசங்கரருக்கு இளம் வயதிலேயே துறவு மேற்கொள்ள ஆசை இருந்தது. ஆனால் தாயின் அனுமதியின்றி துறவறம் மேற்கொள்ள விரும்ப வில்லை. ஒருமுறை பூர்ணா நதியில் குளிப்பதற்காக தாயுடன் சென்றிருந்த ஆதிசங்கரரின் காலை முதலை ஒன்று கவ்வி பிடிக்க ஆதிசங்கரர், தாயிடம்  அம்மா நான் சந்நி யாசி ஆக நீங்கள் உத்தரவு கொடுத்தால் முதலை என் காலை விட்டுவிடும்என்றார். இக்கட்டான நிலையில் ஆர்யாம்பாளும் ஒத்துக்கொண்டார். தகுந்த மந்திரங்களைச் சொல்லி அந்த நதியிலேயே துறவறம் மேற்கொண்டார். வீடு வந்த பின்பும் வாசலிலேயே பிக்ஷாந்தேஹி என்று நின்றபோதுதான் அவ ருக்கு உண்மை புரிந்தது. 

துறவிகள் பெற்றோர்களுக்கு ஈமக்கிரியைகள் செய்யக்கூடாது என்று சாஸ் திரம் சொல்கிறது. அதனால் தாயின்  சோகத்தைக் கண்ட ஆதிசங்கரர்  உன் அந்திமக் காலத்தில்  ஈமக்கிரியைகளைச் செய்ய நான் வருவேன் என்று வாக்கு கொடுத்தார். அதற்கேற்ப தன்னுடைய தாயின் இறுதிக்காலத்தை ஞானதிருஷ்டி யால் அறிந்து வந்த ஆதிசங்கரர் துறவி  தீ மூட்டக்கூடாது என்று சுற்றியிருந் தவர்களின் எதிர்ப்பை கண்டு, தன் சக்தியாலேயே தன் தாய்க்கு  தீ மூட்டினார்.

துறவறம் மேற்கொண்ட ஆதிசங்கரர் கோவிந்த பகவத் பாகவரிடம் நான்கு வேதங்களும் கற்றறிந்தார். காசி கங்கையில் நீராடியபோது சிவப்பெருமான் எதி ரில் வந்தபோது ஆதிசங்கரர் விலகிச்செல் என்று சொன்னபோது உடலா? ஆன் மாவா? எது விலக வேண்டும் என்று சிவப்பெருமான் கேட்டாராம் அந்தத் தெளி வின் காரணமாகத்தான் மனீஷா  பஞ்சகத்தை  இயற்றினார் ஆதிசங்கரர்.

ஆதிசங்கரரின் ஆன்மிக பங்கு அளப்பறியாதது. நாடு முழுவதும் பயணம் செய்து மக்களை நல்வழிப்படுத்திய மகான் இவர். காணாபத்யம் கணபதி வழிபாடு, சைவம் -  சிவ வழிபாடு, வைணவம்- விஷ்ணு வழிபாடு, செளரம் - சூரிய வழிபாடு, சாக்தம்- அம்பிகை வழிபாடு, கெளமாரம்- முருக வழிபாடு போன்ற ஷண்மதங் களை ஸ்தாபித்தார். மேலும்  சைவ வைணவ பேதங்களை நீக்கி ஹரியும் சிவ னும் ஒன்று என்பதை  நிரூபித்தார். சிவனை நினைத்து ஸ்தோத்ரம் சொன்னார். அதே நேரம் கோவிந்தனை நினைத்து பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் என்றும் உருகினார்.

மகாபெரியவர் ஆதிசங்கரரின் காலத்தை பரம புண்ணிய காலம் என்று போற்றினார். ஸ்ரீ சங்கர ஜெயந்தி வழிபாட்டுக்கு பிறகே சிவராத்திரி, கோகுலா ஷ்டமி, ஸ்ரீ ராமநவமி, அனுமன் ஜெயந்தி போன்றவை கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது. ஆலயங்களில் இருந்த மூர்த்தங்களைச் சாந்தமடையச் செய்வதி லும் உயிர்பலிகளை தடுத்து நிறுத்தியதும் இவரது முக்கிய பணியாக இருந்தது. ஆலயங்களில் சாத்விகமான வழிபாட்டு முறைகளைக் கொண்டு வந்தவர் இவர்.

பிட்சை பெறும் போது ஏழைபெண் ஒருத்தி அளித்த நெல்லிக்கனிக்கு மகிழ்ந்து அவளுடைய வறுமையைப் போக்க மகாலட்சுமி ஸ்தோத்ரங்களால் துதித்து தங்க நெல்லிக்கனிகளை பொழிய செய்தார். இதுதான் கனகதாரா ஸ்தோத்ரம். அதுமட்டு மல்லாமல் செளந்தர்ய லஹரி,  மாத்ருகா பஞ்சகம், கோவிந்தாஷ்டகம், சுப்ர மணிய புஜங்கம், பஜ கோவிந்தம், ஆத்மபோகம்., சித்தாந்த சாங்கியம், விவேக சூடாமணி போன்ற ஸ்தோத்ரம் மற்றும் நூல்களை இயக்கியுள்ளார்.பிரம்ம சூத்ரம், உபநிடதங்கள். பகவத் கீதை, விஷ்ணு சகஸ்ரநாமம் போன்றவற்றுக்கு பேரு ரைகளைக் கண்டார். இவர் இயற்றிய பிரம்ம சூத்ர பாஷ்யத்தைக் கேட்டு வேத வியாசரே வயோதிகராக வந்து அங்கீகரித்தராம்.

இவருடைய அவதாரமில்லாம் இருந்தால் இன்று முக்கிய தலங்களில் ஸ்ரீ சக்ர பிரதிஷ்டை , ஜன ஆகர்ஷண பிரதிஷ்டை இல்லாமல் போயிருக்கும். அம்பி கையை ஸ்ரீ சக்ர வடிவில் வழிபடுவதை உருவாக்கியவர் இவர்.  இந்த சக்ரத்தில்  விஞ்ஞானமும் உண்டு, துல்லியமான கணிதமும் உண்டு, தெற்கில் சிருங்கேரி மடத்தையும்,  மேற்கில் துவாரகை துவாரகா பீடத்தையும், வடக்கில் ஜோஷி பீடத்தையும், கிழக்கில் பூரி நகரில் கோவர்த்தன பீடத்தையும் என்று நான்கு திசை களிலும் அத்வைத மடங்களை நிறுவி மக்களிடம் ஆன்மிக சிந்தனையை உரு வாக்கிய மகான் ஆதிசங்கரர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP