Logo

மன உறுதி என்பது எதுவரை?

இளம் துறவி கட்டாயம் குருவிடம் கேட்க வேண்டும் என்று நினைத்து குருவே, மனதில் உறுதி என்பது எதுவரை இருக்க வேண்டும். அப் படி இருந்தாலும் மனம் உறுதியில் அமைதி பெற் றதை எப்படி உணர்ந்துக் கொள்வது...
 | 

மன உறுதி என்பது எதுவரை?

மனதில் உறுதி என்பது எதுவரை இருக்க வேண்டும். இதற்கு எல்லை உண்டா? ஆசைக்கு அளவு உண்டா?  இப்படியான கேள்விகள் எல்லாருக்கும் உண்டு. இதேப்போல் இளம் துறவி ஒருவருக்கும் இருந்தது. குருவிடம் நீண்ட வருடங்களாக பாடம் பயின்று வந்த இளம் துறவிக்கு இந்த கேள் விக்கு மட்டும் பதில் கிடைக்கவில்லை. 

குருகுல கல்வி முடிந்து மாணவர்கள் அனைவரும் இல்லம் திரும்பும் நேரம்வந்தது. இளம் துறவி கட்டாயம் குருவிடம் கேட்க வேண்டும் என்று நினைத்து குருவே, மனதில் உறுதி என்பது எதுவரை இருக்க வேண்டும்.அப்படி இருந்தாலும் மனம் உறுதியில் அமைதிபெற்றதை எப்படி உணர்ந் துக் கொள்வது என்று கேட்டார். குரு அதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் என்னோடு மீண்டும் சில காலம் நீ பயணிக்க வேண்டும் என் றார். இளம் துறவியும் சம்மதித்தார். 

அதன் பிறகு குருவோடு இணைபிரியாமல் இருந்தார். குருவுக்கு வேண்டிய பணிவிடைகள் மட்டுமல்லாது அவர் எங்கு சென்றாலும் அவருடன் பயணித்து கேள்விக்கு விடை கிடைக்குமா என்று பார்த்தார். ஆனால் பதில் கிடைத்தபாடில்லை. தினமும் காலையில் குருவுக்கு தண்ணீர் எடுத்து வரும் பணி  இளம் துறவிக்கு வழங்கப்பட்டது. இளம் துறவியும் போகும் போது மகிழ்ச்சியுடன் சென்று தண்ணீரூடன் திரும்பும் போது முக சஞ்ச லத்தோடு திரும்புவார். 

இளம் துறவியின் நடவடிக்கையைக் கண்ட குருவுக்கு சந்தேகம் வந்துவிட்டது. ஏன் உன் முகம் இவ்வளவு வாட்டமாக இருக்கிறது என்று கேட் டார். இளம் துறவி அப்படியெல்லாம் ஒன்றுமில்லை குருவே. தலைபாரம் என்று சொல்லி நழுவி விடுவார். இது தொடர்கதையானது. குரு யோசி த்தார். இவன் தண்ணீர் எடுக்கும்நேரம் தவிர இதரநேரம் முழுவதும் நம்முடன் தான் இருக்கிறான்.அதனால் அங்குதான் பிரச்னை என்பதை  உணர்ந்து கொண்டார்.

அடுத்து வந்த நாட்களில் குரு இளம்துறவியுடன் நீர் நிலைக்கு கிளம்பினார். ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் இளம் துறவியின் கண்கள் அலை பாய்ந்தது. குரு அதை கவனித்தார். அடுத்த நாளும் இது தொடர்ந்தது. இப்படியே ஒவ்வொரு நாளும் அந்த இடம் வந்ததும் இளம் துறவி சஞ்சலப்ப டுவதும் குரு அதைப் பார்ப்பதும் தொடர்ந்தது. ஒரு நாள் குரு என்ன காரணம் என்று கேட்டார். அது அந்த இடத்தில் தங்க குவியல் ஒன்றைப் பார்த் தேன். அதனால் தான் இந்த இடம் வந்ததும் நான் சஞ்சலப்படுகிறேன் என்று கூறினார்.

குரு எதுவும் பேசாமல் யோசித்து நாளைக்குள் இதற்கான தீர்வு சொல் என்றார். மறுநாள் குருவும் இளம் சீடரும் அந்த இடத்துக்கு வந்த போது இளம் துறவி குருவே நான் அதற்கான தீர்வு கண்டு பிடித்துவிட்டேன் என்றார். குரு எதுவும் பேசாமல் அவனைப் பார்த்தார். நான் ஓடிப் போய் அந்த தங்க குவியலை மூடி விட்டு வந்துவிட்டால் அந்தப் பக்கம் வரும்போது திரும்பி பார்க்க நேராது அல்லவா அதனால் அதை செய்துவிட்டு வருகி றேன் என்று ஓடி போய் அதே போல் செய்தும் வந்தான் இளம் துறவி. 

குரு புன்னகைத்தார். ஏன் குருவே புன்னகைக்கிறீர்கள் என்று கேட்டார் இளம் துறவி. இல்லை மனதில் உறுதி என்பது எதுவரை என்றாயே எல் லாமே மண் தான் என்னும் மன உறுதி இருந்தால் ஆசை எப்படி வரும்.என்னை பொறுத்த வரை தங்கமும் ஒண்ணுதான்.மண்ணும் ஒண்ணு தான். நீ இன்னும் தங்கத்தைத்  தங்கமாகவே பார்க்கிறாய். மனதில் இந்த சஞ்சலம் இருக்கும் வரை உன்னால் உறுதியை எட்டமுடியாது என்றார் குரு.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP