ஐயப்ப பக்தர்கள் சொல்ல வேண்டிய ஐயப்ப காயத்ரி மந்திரம்

அரசியல் சர்ச்சைகள் சபரிமலையை சீர்குலைக்கப் பார்த்தாலும் , பக்தர்கள் கூட்டத்தின் தீவிர பக்தியும், சபரிவாசனின் சக்தியும் அதை முறியடித்து விடும்.
 | 

ஐயப்ப பக்தர்கள்  சொல்ல வேண்டிய  ஐயப்ப காயத்ரி மந்திரம்

கார்த்திகை மாதம் பிறந்து விட்டது. காணும் திசையெல்லாம் காவி, கருப்பு உடைகளில் ஐயப்ப பக்தர்கள் கழுத்தில் மணி மாலையும் நெற்றி நிறைய சந்தனமும் குங்குமமும் மணக்க பக்தி மயமாய காட்சி தருகிறார்கள். சுவாமியே சரணம் அய்யப்பா என்கிற சரண கோஷம் நம் செவிகளை தாண்டி இதயத்தை தொடுகிறது.அரசியல் சர்ச்சைகள் சபரிமலையை சீர்குலைக்கப் பார்த்தாலும் , பக்தர்கள் கூட்டத்தின் தீவிர பக்தியும், சபரிவாசனின் சக்தியும் அதை முறியடித்து விடும்.

பம்பா நதியில் மூழ்கி பாபங்கள் தொலைத்து புனிதமான பதினெட்டு படிகளை தலையில் இருமுடிக்கட்டுடன் சரணகோஷத்துடன் கடக்கும் போது கிடைக்கும் பேரமைதியும் பெருமகிழ்ச்சியையும் வார்த்தைகளி வெளிப்படுத்துவது சாத்தியமில்லாத ஒன்று. பதினெட்டு படிகள் கடந்து ஐயன் அய்யப்ப சுவாமியின் சன்னதியில் அடியெடுத்து வைக்கும் போது நமது கண்களில் படுகிறது  தத்வமஸி என எழுதப்பட்டிருக்கும் பலகை. இதற்கு நீயே அதுவாக இருக்கிறாய் என பொருள் . இங்கு 'அது' என்பது ஐயப்பனைக் குறிக்கும்.நீ உருவத்தால் மனிதனாய் இருக்கிறாய். உன் உடலைக் கொண்டு பல பாவங்கள் செய்கிறாய்.என்னை நினைத்து விரதம் இருக்கும் போது மட்டும் உன் உடலையும், மனதையும் கட்டுக்குள் வைத்திருக்கிறாய்.அதனால்தான் உன்னை எல்லாரும் சுவாமி என்கிறார்கள்.ஏன், சிலர் ஐயப்பா என்று என் பெயரையே உனக்கு சூட்டி அழைக்கிறார்கள்.அப்போது நீ நானாகவே ஆகிறாய்.சபரிமலைக்கு மாலை அணிந்து விரதமிருந்ததால் நீ தெய்வநிலைக்கு உயர்த்தப்படுகிறாய்.இங்கிருந்து நீ திரும்பிய பிறகும், இந்த விரதங்களை மனதால் கடைபிடி. நானாகவே நீ மாறி விடுவாய் என்று ஐயப்பன் தன் பக்தர்களுக்கு சொல்வதன் தாத்பர்யமே இந்த  தத்வமஸி.

அய்யன் ஐயப்பனாக மாறவேண்டிய பக்தர்கள் தங்கள் விரத காலத்தில் அவசியம் சொல்ல வேண்டிய காய்த்ரி மந்திரம் இதோ:

ஓம் பூதநாதாய வித்மஹே

பவநந்தனாய தீமஹி

தந்நோ சாஸ்தா ப்ரசோதயாத்

சுவாமியே சரணம் ஐயப்பா!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP