தினம் ஒரு மந்திரம் – தீராத வினையெல்லாம் தீர்த்து வைக்கும் திருவேங்கடமுடையான் சுலோகம்.

எந்நேரமும்,எந்தக் காலமும் பக்தர்களின் கூட்டத்தால் கோவிந்தா கோவிந்தாவென எப்போதும் ஒலித்துக்கொண்டேயிருக்கும் திருமலையின் தெய்வம் வேங்கடமுடையான்.
 | 

தினம் ஒரு மந்திரம் – தீராத வினையெல்லாம் தீர்த்து வைக்கும் திருவேங்கடமுடையான் சுலோகம்.

எந்நேரமும்,எந்தக் காலமும் பக்தர்களின் கூட்டத்தால் கோவிந்தா கோவிந்தாவென எப்போதும் ஒலித்துக்கொண்டேயிருக்கும் திருமலையின் தெய்வம் வேங்கடமுடையான். சனிக்கிழமைகளில் இந்த துதியை பாராயணம் செய்தால் வினைகள் தீரும்.

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோவிலின் வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
 படியாய்க் கிடந்துநின் பவளவாய் காண்பேனே

பொருள்: மிகப்பெரிய தீவினைகளையும் அழித்திடும் வல்லமை மிக்க பெருமாளே! நெடிதுயர்ந்த திருவுருகொண்ட வேங்கடவா! நின் பக்தர்களும் தேவர்களும் ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை போன்ற நாட்டிய நங்கையரும் ஏங்கி எதிர்நோக்கும் உன் தரிசனம் காணும்படியாக இருந்து உன் பவளவாயை எந்நேரமும் தரிசிக்க அருள்புரிவாய்.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP