தினம் ஒரு மந்திரம் - சந்திராஷ்டம காலத்தில் சொல்ல வேண்டிய துதி

இன்று கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டம தினம். ஜாதக ரீதியாக ‘சந்திராஷ்டம’ காலம் மிகவும் முக்கியமானது.
 | 

தினம் ஒரு மந்திரம் - சந்திராஷ்டம காலத்தில் சொல்ல வேண்டிய  துதி

இன்று கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டம தினம். ஜாதக ரீதியாக ‘சந்திராஷ்டம’ காலம் மிகவும்  முக்கியமானது. ஏனென்றால்  அன்று மனதின் தன்மை நிலையற்றதாக இருக்கும்.ஒருவர் பிறந்த ராசிக்கு எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தில் சந்திரன் வருமானால், அதையே சந்திராஷ்டமம் என்கிறது நம்முடைய  ஜோதிட சாஸ்திரம். சந்திரன் ஒருவரது ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான் ‘சந்திராஷ்டம’ காலம். இதற்கு மனோகாரகனான சந்திரன்  காரணம் என்பதால், அன்றைய தினம் மற்றும் பௌர்ணமி , திங்கட்கிழமைகளிலும் இந்த துதியை  பாராயணம் செய்து வந்தால் பாதிப்பில் இருந்து மீளலாம். 

சந்திராஷ்டம பாதிப்புகளை நீக்கும் சந்திர பகவான் துதி
ஸ்வேதாம்பரான் விததனும் வரஸுப்ரவர்ணம்
ஸ்வேதாஸ்வயுக்தரதகம் ஸுரஸேவிதாங்க்ரிம்
தோர்ப்யாம் த்ருதாபயவரம் வரதம் ஸுதாம்ஸும்
ஸ்ரீவத்ஸ மௌக்திக தரம் ப்ரணமாமி நித்யம்.

பொருள்:

வெண்மையான வஸ்திரம் தரித்தவரும், சிறந்த வெண்மை நிறம் உடையவரும், வெள்ளைக்குதிரை பூட்டிய தேரில் செல்கிறவரும், தேவர்களால் வணங்கப்பட்ட  சரணங்களை உடையவரும், இரண்டு கைகளிலும் அபயம், வரதம் என்ற முத்திரைகளைத் தரித்தவரும், வரங்களை அளிப்பவரும் அம்ருத கிரணத்தையும்,  ஸ்ரீவத்ஸம் என்ற முத்து மாலையையும் தரித்தவருமான சந்திர பகவானை நமஸ்கரிக்கிறேன்.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP