இன்று செவ்வாய்க்கிழமை தமிழ் கடவுள்முருகனை தமிழ் துதிகளால் போற்றி வணங்குவோம் வாருங்கள்.

இன்று செவ்வாய்க்கிழமை தமிழ் கடவுள்முருகனை தமிழ் துதிகளால் போற்றி வணங்குவோம் வாருங்கள்.
 | 

இன்று செவ்வாய்க்கிழமை  தமிழ் கடவுள்முருகனை தமிழ் துதிகளால் போற்றி வணங்குவோம் வாருங்கள்.


இன்று செவ்வாய்க்கிழமை  தமிழ் கடவுள்முருகனை தமிழ் துதிகளால் போற்றி வணங்குவோம் வாருங்கள்.செவ்வாய்க்கிழமை அழகன் முருகனுக்கு உகந்த கிழமை. செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், பூமி சம்பத்தப்பட்ட தீராத பிரச்னையினால்  மனம் வருந்துபவர்களும், செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டு வந்தால், விரைவிலேயே அதற்கான பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். செவ்வாய்க்கிழமையான இன்று தமிழ் கடவுள்முருகனை தமிழ் துதிகளால் போற்றி வணங்குவோம் வாருங்கள்.


ஓம் அழகா போற்றி

ஓம் அறிவே போற்றி

ஓம் அரன் மகனே போற்றி

ஓம் அயன்மால் மருகா போற்றி

ஓம் சக்திவேலவா சரவணா போற்றி

ஓம் முக்தி அருளும் முருகா போற்றி

ஓம் பன்னிருகை வேலவா போற்றி

ஓம் பவழ வாய் சிரிப்பு பாலகா போற்றி

ஓம் ஆறிரு தடந்தோள் போற்றி

ஓம் ஆறெழுத்து மந்த்ரம் போற்றி

ஓம் இடும்பனை வென்றவனே போற்றி

ஓம் இடர் களைவோனே போற்றி

ஓம் உமையவள் மகனே போற்றி

ஓம் உலக நாயகனே போற்றி

ஓம் ஐயனே போற்றி அருளே போற்றி

ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி

ஓம் ஓம்கார சொருபனே போற்றி

இன்று செவ்வாய்க்கிழமை  தமிழ் கடவுள்முருகனை தமிழ் துதிகளால் போற்றி வணங்குவோம் வாருங்கள்.


ஓம் மூலப்பொருளே குகனே போற்றி

ஓம் ஓதுவார்க் கினியனே போற்றி

ஓம் ஓங்காரத்துள் வளர் ஒளியே போற்றி

ஓம் திருவடி தொழுதிட அருள்வாய் போற்றி

ஓம் குருவடிவான குருவின் உருவே போற்றி

ஓம் பக்தர்கள் போற்றும் பழம் நீ போற்றி

ஓம் சித்தர்கள் வசமான செல்வேள் போற்றி

ஓம் தேவர்கள் சேனைத் தலைவா போற்றி

ஓம் தேவகுஞ்சரி மணாளா போற்றி

ஓம் வெண்நீறணியும் விசாகா போற்றி

ஓம் கண்ணின் மணியே கனியே போற்றி

ஓம் தண்டபாணி எம் தெய்வமே போற்றி

ஓம் குண்டல மொளிரும் சுந்தரா போற்றி

ஓம் வேதப் பொருளே வேந்தே போற்றி

ஓம் அருந்தமிழ் வளர்த்த ஐயா போற்றி

ஓம் செந்தில் உறையும் ஸ்கந்த போற்றி

ஓம் பழனி பதிவாழ் பாலக போற்றி

ஓம் இருளிடர் போக்கும் பகலவா போற்றி

ஓம் இன்பமாம் வீடருள் இறைவா போற்றி

ஓம் அன்பின் உருவமே எம்அரசே போற்றி

ஓம் ஒளவைக் கருளியவனே போற்றி

ஓம் சேந்தா குறிஞ்சி வேந்தா போற்றி

இன்று செவ்வாய்க்கிழமை  தமிழ் கடவுள்முருகனை தமிழ் துதிகளால் போற்றி வணங்குவோம் வாருங்கள்.

ஓம் கந்தா கடம்பா கார்த்திகேயா போற்றி

ஓம் கருணாகரனே போற்றி

ஓம் கதிர் வேலவனே போற்றி

ஓம் மூலப்பொருளே முருகா போற்றி

ஓம் சூரனுக் கருளிய சேனாபதியே போற்றி

ஓம் குன்று தோறாடும் குமரா போற்றி

ஓம் ஏழாவதுபடை விடுடையவா போற்றி

ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி

ஓம் கந்தசஷ்டி நாயக போற்றி

ஓம் இதயக் கோயிலில் இருப்பாய் போற்றி

ஓம் பக்தர்தம் பகை ஒழிப்பவனே போற்றி

ஓம் மருதமலை இறைவா போற்றி

ஓம் மயில் வாகனனே போற்றி

ஓம் வடிவேலுடனே வருவாய் போற்றி

ஓம் அடியார் துயரம் களைவாய் போற்றி

ஓம் வளமான வாழ்வு தருவாய் போற்றி

இன்று செவ்வாய்க்கிழமை  தமிழ் கடவுள்முருகனை தமிழ் துதிகளால் போற்றி வணங்குவோம் வாருங்கள்.

ஓம் வள்ளி தெய்வானை மணாளா போற்றி

ஓம் செஞ்சுடர் மேனிச் செவ்வேள் போற்றி

ஓம் மலைமகட் கிளைய மகனே போற்றி

ஓம் அமிர்தாம் தமிழின் தலைவர் போற்றி

ஓம் தமிழர் தம் கருணை மிகு இறைவா போற்றி

ஓம் ஆடும் அயில்வேல் அரசே போற்றி

ஓம் வந்தருள் செய் வடிவேலவா போற்றி

ஓம் கலியுக வரதா கந்தா போற்றி

ஓம் கவலைக் கடலை களைவோய் போற்றி

ஓம் தந்தைக்கு மந்த்ரம் உரைத்தவா போற்றி

ஓம் எந்தனுக்கு இரங்கி அருள்வாய் போற்றி

ஓம் சைவம் வளர்த்த சம்பந்தா போற்றி

ஓம் சரவணபவ சண்முகா போற்றி

ஓம் வேடர் தம் கொடி மணாளா போற்றி

ஓம் வனத்தில் வேடனாய் வந்தாய் போற்றி

ஓம் புனத்தினில் ஆண்டியாய் வந்தவா போற்றி

ஓம் தேன்திணைமா நெய்வேத்யா போற்றி

ஓம் தெவிட்டா இன்பமே தென்றலே போற்றி

ஓம் தேவாதி தேவனே தெய்வமே போற்றி

ஓம் போகர் நாதனே பொலிவே போற்றி

ஓம் போற்றப் படுவோனே பொருளே போற்றி

ஓம் புண்ணிய மூர்த்தியே வரதா போற்றி

ஓம் யோக சித்தியே அழகே போற்றி

ஓம் பழனியாண்டவனே பாலகா போற்றி

ஓம் தென்பரங் குன்றோனே தேவா போற்றி

ஓம் கருணைமொழி போருர்க் கந்தா போற்றி

ஓம் அருணகிரிக் கன்பு அருளினை போற்றி

இன்று செவ்வாய்க்கிழமை  தமிழ் கடவுள்முருகனை தமிழ் துதிகளால் போற்றி வணங்குவோம் வாருங்கள்.

ஓம் குறிஞ்சி நிலக் கடவுளே போற்றி

ஓம் குறுமுனி தனக்கருள் குருவே போற்றி

ஓம் தணிகாசலம் வுறை சண்முகா போற்றி

ஓம் சிக்கல் மேவிய சிங்காரா போற்றி

ஓம் நக்கீரர்க் கருள் நாயகா போற்றி

ஓம் விராலி மலையுறு வேலவா போற்றி

ஓம் திருக்கழுக் குன்றின் செல்வா போற்றி

ஓம் மணம்கமழ் கடம்ப மலையாய் போற்றி

ஓம் குன்றக்குடி அமர் குகனே போற்றி

ஓம் குமரகுரு புகழ் அழகா போற்றி

ஓம் கதிர் காமத்துறை கடவுளே போற்றி

ஓம் துதிபுரி அன்ªபன் துணையே போற்றி

ஓம் பழனிப் பதிவாழ் பண்டித போற்றி

ஓம் செந்தூர் பதிவாழ் சுந்தரா போற்றி

ஓம் மருதாசல மூர்த்தியே மகிழ்வே போற்றி

ஓம் கந்தாஸ்ரமம் நிறை கந்தா போற்றி

ஓம் பழமுதிர்த் சோலைப் பதியே போற்றி

ஓம் பத்துமலை முத்துக்குமார போற்றி

ஓம் அவ்வையின் பைந்தமிழ் கேட்டவா போற்றி

ஓம் அருமையின் எளிய அழகே போற்றி

ஓம் இரு மயில் மணந்த ஏறே போற்றி

ஓம் அருள்சேர் இருவினை நீக்குவாய் போற்றி

ஓம் நீங்காப் புகழுடை நிமலா போற்றி

ஓம் திருப் புகழ் விருப்புடைத் தேவா போற்றி

ஓம் மருதமலை ஆண்டவா போற்றி

ஓம் போற்றி... போற்றி... மருதமலை வேலவா போற்றி


newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP