விபத்து தவிர்க்கும்... வழித்துணையாய் காக்கும் மந்திரம்!

விபத்துகள் நேராமல் வழித்துணையாய் காக்கும் மந்திரம்
 | 

விபத்து தவிர்க்கும்... வழித்துணையாய் காக்கும் மந்திரம்!


பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை 

ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சு ஆடுதல் 

கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது 

நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே. 

விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல் 

உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லையாம் 

பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை

 நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே.

 (நமசிவாய துதி)


பொருள்:

நமசிவாய எனும் பஞ்சாட்சர மந்திரத்திற்கு அளப்பறியா சக்தி உண்டு. இந்த பஞ்சாட்சரத்தை ஓதி அப்பர் தனக்கு நேர்ந்த பல கடும் சோதனைகளைக் கடந்தார். அப்பர் ஸ்வாமிகள் அருளிய நமசிவாய பதிகத்திலிருந்து கொடுக்கப்பட்டுள்ள இந்த இரண்டு பாடல்களை ஏதேனும் தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும்போது பாராயணம் செய்தால் விபத்துகள் ஏதும் நேரிடாமல் நமசிவாய நாமம் நமக்கு வழித்துணையாய் நின்று காக்கும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP