Logo

சாய்பாபா உரை

காசிநாத் கோவிந்த் உபாசினி என்பவர் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் ஒரு ஆயுர்வேத மருத்துவர். தன் சொந்த ஊரில் வியாபாரமும் செய்தார். ரஹூரி எனும் இடத்தில் குல்கர்னி என்ற சாமியாரை சந்தித்தார். அவர் சாய்பாபாவை சென்று பார்க்குமாறு கூறினார். உபாசினி ஷீரடி வந்தார். மசூதியிலேயே தங்கினார். ஒரு நாள் ஷீரடியில் உள்ள க ண்டோபா கோயிலில் உணவு சமைத்துக் கொண்டார் உபாசினி.
 | 

சாய்பாபா உரை

காசிநாத்  கோவிந்த்  உபாசினி என்பவர் ஒரு பிராமணக் குடும்பத்தில்    பிறந்தவர்.  இவர் ஒரு ஆயுர்வேத மருத்துவர்.  தன் சொந்த ஊரில் வியாபாரமும் செய்தார்.  ரஹூரி எனும் இடத்தில் குல்கர்னி என்ற சாமியாரை சந்தித்தார்.  அவர் சாய்பாபாவை சென்று பார்க்குமாறு கூறினார். உபாசினி ஷீரடி வந்தார்.  மசூதியிலேயே தங்கினார்.  ஒரு நாள் ஷீரடியில் உள்ள க ண்டோபா கோயிலில் உணவு சமைத்துக் கொண்டார் உபாசினி.

எந்த உணவையும், முதலில் சாய்பாபாவிற்கு படைத்துவிட்டே , பிறகு தானோ அல்லது மற்றவர்களோ சாப்பிட வேண்டும் என்பது அவரது பழக்கம். அன்று அவர் உணவைத் தயாரித்து கொண்டிருக்கும் போது  கருப்பு நாய் ஒன்று அங்கேயே, நின்று கொண்டு, உணவை யே பார்த்து கொண்டிருந்தது.  தயாரித்த உணவை சாய்பாபா இருக்கும் மசூதியை நோக்கி அவர் எடுத்து செல்லும்போது அந்த தாய் கூடவே வந்தது.  அப்புறம் அது காணமலே போய்விட்டது.  மசூதியில் சாய்பாபா விடம், சென்ற போது, " எதற்காக இங்கே வந்திருக்கிறாய்?"  என்று அவர் சற்று தடித்த குரலில் கேட்டார்.  உபாசினிக்கு, இதன் அர்த்தம் புரியவில்லை" சாய்பாபா உங்களுக்கு நைவேத்தியம்  செய்வதற்காகத் தான் வந்திருக்கிறேன்" என்றார்.

                                             சாய்பாபா உரை

" நான் தான் உன்னுடனேயே இருந்தேனே ! நீ தான் உணவளிக்க மறுத்து விட்டாயே. அப்புறம் எதற்கு, இப்போது கொண்டு வந்தாய்.? என்று சாய்பாபா கேட்டார்.  
உபாசினிக்கு ஒன்றுமே புரிய வில்லை.
சாய்பாபா விளக்கினார். 

“நீ சமைத்து கொண்டு இருக்கும் போது  உன்னருகே நின்றிருந்ததே கறுப்பு நாய், அது நான் தான்" என்றார். சாய்பாபா.
உபாசினிக்கு உடலெங்கும் அதிசியத்தால்,  குப்பென்று வியர்த்தது . மறு நாள் இது போன்ற தவறு எதுவும் செய்து விடாமல் கவனமாக இருக்கு வேண்டும்,  என்று உறுதி பூண்டார் உபாசினி.அடுத்த நாள் சமையல் செய்கிற போது கண்களைக் கூர்மையாக்கிக்கொண்டு கவனித்தார், ஆனால், அப்படி எதுவும் தென்பட வில்லை, ஆதலால், தனது சமையல் வேலையில், திவீரமாக இறங்கினார். 

அப்போது பிச்சைக்காரன் ஒருவன் அங்கு வந்து நின்றான். சமைத்ததும், நல்ல சாப்பாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், உபாசினி சமைப்பதையே பார்த்தவாறு அவன்  நின்றிருந்தான். இது அவருக்குக் கடும் கோபத்தைக் கொடுத்தது. பிராமணன் சமைக்கிறபோது, வேறு, சாதிக்காரர்கள் யாரும் பார்க்கக் கூடாது என்று கூறி அவனை விரட்டினார்.அந்தப் பிச்சைக்காரனும் வருத்தத்துடன் அங்கிருந்து நகர்ந்தான்.
சமைத்த உணவை எடுத்தக் கொண்டு சாய்பாபாவிடம், சென்றார் உபாசினி.

ஆனால், இன்றும் அந்த உணவை எடுத்துக் கொள்ள சாய்பாபா மறுத்து விட்டார். “நேற்றும் எனக்கு உணவளிக்க மறுத்தாய். இன்றும் அப்படியே செய்தாய்". என்று கூறினார் சாய்பாபா.
நேற்று சரி. அந்த கறுப்பு நாயை விரட்டினேன். ஆனால், இன்று அப்படி எதுவும் நடக்கவில்லையே சாய்பாபா. என்று பரிதாபமாக்கூறினார் உபாசினி.
"ஏன் நடக்கவில்லை? பிச்சைக்காரன் ஒருவனை விரட்டினாயே! அது நான் தான்" என்று சாய்பாபா கூறியதும் உபாசினி அப்படியே நொறுங்கி போனார். இதுபோன்று பல்வேறு நிலைகளில்  சாய்பாபாவின் மகா சக்தியை உபாசினி அறிந்திருந்தார். உபாசினி தனது தவறை உணர்ந்து வருந்தினார். 
தனது பக்தர்களிடம், " என்னையே நினையுங்கள். நான் இருக்கிறேன். உங்களுக்கு ஆபத்து நேரங்களில் கண்டிப்பாக உதவுவேன். என் சமாதிக்குள் இருந்து ம் கூட நான் இயங்கிக் கொண்டே இருப்பேன்”. என்றே அடிகடி சொல்ல ஆரம்பித்தார்.


டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP