அற்புதத்தின் அதிசயம் சாய்பாபா 

கனவில் வந்த சாய்பாபா, நிஜத்தில் அதில் செயல்படுத்தி இருக்கிறார் . சாய்பாபா தனது பக்தர்களை எந்த ஒரு சூழ்நிலையிலும் கைவிடுவதில்லை.
 | 

அற்புதத்தின் அதிசயம் சாய்பாபா 

ரகுநாதராவ்  என்பவர் மும்பையில் ஒரு தனியார் நிறுவனத்தில்  பணியாற்றி வந்தார்.  சாய்பாபாவின் தீவிர பக்தர்.   அவருக்கு திடீரென்று உடம்பிற்கு முடியாமல் போய் விட்டது. அதனால் மருத்தவ விடுப்பு எடுத்தார். அந்தக் காலம் முடிவடைந்த பின்னரும் அவரால் முன்பு போல் செயலாற்ற முடியவில்லை.

அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு கட்டாய ஓய்வு அளிக்க முன் வந்தது நிறுவனம்.  மாதம் தோறும் ஓய்வூதியமாக 75 ரூபாய் வழங்குவதாகவும் அறிவித்தது.  அப்போது ஓய்வூதியம் யாருக்கும் வழங்கும் பழக்கம் அந்த நிறுவனத்திற்கு கிடையாது.   ரகுநாதராவின் மனைவிக்கோ இந்தச் செய்தி வேப்பங்காயை விடவும் கூடுதலாக சகந்தது. மாதந்தோறும் 75 ரூபாயை வைத்துக் கொண்டு எப்படிக் காலத்தை கழிக்கபோவது  தெரியவில்லை?  இந்த இக்கட்டான சூழலில் இருந்து எப்படி பாதுகாத்தது கொள்ளுவது?   இது போன்ற குழப்பான ஒரு நிலையில் ரகுநாதராவ் மனைவியின் கனவில் சாய்பாபா காட்சி அளித்தார்.   அப்போது தனது கஷ்டத்தைக் கூறி , அதற்குத் தகுந்த வழி செல்லுமாறு சாய்பாபாவிடம் அவர் மனைவி கண்கலங்க வேண்டினாள்.

அதற்கு சாய்பாபா, "ஓய்வூதியத்தை நூறு ரூபாயாக அதிகரித்துத்தர ஏற்பாடு செய்கிறேன் . கவலைப்படாதே என்று கூறிவிட்டு மறைந்து விட்டார்”. 

கனவும் கலைந்து போனது .  

அதன் பிறகு சில நாட்கள் கழித்து நிறுவனத்தில் இருந்து ரகுநாதராவிற்கு ஒரு கடிதம் ஒன்று வந்தது.  அதில் அவருக்கு மாதந்தோறும் 110 ரூபாய் ஓய்வூதியம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.   கனவில் வந்த சாய்பாபா, நிஜத்தில் அதில் செயல்படுத்தி இருக்கிறார் .     சாய்பாபா தனது பக்தர்களை எந்த ஒரு சூழ்நிலையிலும் கைவிடுவதில்லை.

                       ஓம்ஸ்ரீசாய்ராம்!!!!

அற்புதத்தின் அதிசயம் சாய்பாபா 

டாக்டர். வி. ராமசுந்தரம்

ஆன்மீக எழுத்தாளர்

EMAIL: venkatraman.ramasundaram@gmail.com

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP