தீவிர பக்தர் பையாஜி 

“பையாஜி” என்ற மூதாட்டிக்கு மட்டும் சாய்பாபாவை அப்படி நினைக்கத் தோன்றிவில்லை. அவளைப் பொறுத்தவரையில் அந்தச் சிறுவன் பாசத்தால் அரவணைக்க வேண்டியவன் என்றே கருதினாள்.
 | 

தீவிர பக்தர் பையாஜி 

சாய்பாபா ஷீரடிக்கு வந்த சமயத்தில்,  அவரின் செயலை கண்டு மனநலம் குன்றியவர் என்றே பலரும் நினைத்தனர் . அதனால் அவரைக் கிண்டல் செய்வதும், அவர் மீது கல்லெறிந்து வேடிக்கை காட்டுவதும் ஊராரின் பொழுது போக்காக இருந்தது. ஆனால் “பையாஜி” என்ற மூதாட்டிக்கு மட்டும் சாய்பாபாவை அப்படி நினைக்கத் தோன்றிவில்லை. அவளைப் பொறுத்தவரையில் அந்தச் சிறுவன் பாசத்தால் அரவணைக்க வேண்டியவன் என்றே கருதினாள். சாய்பாபா மீது அவளுக்கு அளவுகடந்த அன்பும், பிரியமும் ஏற்பட்டது .

“அந்த பையன் சாதாரணமானவனாகத் தெரியவில்லை. அவன் கண்களும், தீர்க்கமான முகமும், அவன் தோற்றமும் மிகவும் பரிசுத்தமானவனாகவே அறியப்படுகிறான் . அவனிடம் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது. ஒருவளை மனித உருவில் அவதாரம் எடுத்த கடவுளாகக் கூட இந்தச் சிறுவன் இருக்கக்கூடும்”. இப்படி யெல்லாம் பையாஜியின் மனதிற்குள் எண்ண வரிகள் தோன்றின.

“அந்த குழந்தை எப்போது பார்த்தாலும் இந்த வேப்ப மரத்தடியிலேயே இருக்கிறதே! சாப்பிடுவதற்கு என்ன செய்யும்? பசித்தால் அந்தச் சிறுவன் எதைப் புசிப்பான் ? இங்கே என்ன இருக்கிறது உண்டு பசியாற? திடீரென்று காட்டிற்குள் செல்கிறது இந்தக் குழந்தை. காடு ,மேடு என்று பார்க்காமல் அதுபாட்டுக்கு ஒடியாடுகிறது .பிறகு திருப்பவும் வேப்ப மரடித்தடியில் வந்து அமரந்து கொள்கிறது. யாரிடமும் மனம் விட்டுப் பேசுவதும் கிடையாது. போகட்டும் ... அந்தக்குழந்தைக்குச் சாப்பிட ஏதாவது கொடுக்க வேண்டும்.

தீவிர பக்தர் பையாஜி 

இப்படி நினைத்து ,தனது வீட்டில் இருக்கும் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு வந்து தினமும் சாய்பாபாவிற்கு ஊட்டிவிட நினைப்பாள் பையாஜி. ஆனால் சாய்பாபாவோ அதனைப் பெற்றுக் கொள்வதே கிடையாது. பையாஜியின் வற்புறுத்தல் தாங்காமல் வாங்கினாலும் கூட அதனை பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் ஊட்டி மகிழ்வார். இதைப்பார்த்து பையாஜி மனம் வேதனைஅடைந்தார். போகும்'பறவைகள் சாப்பிடட்டும்.  தப்பில்லை ஆனால் பாவம், இந்தக் குழந்தை சாப்பிடாமல் கிடக்கிறதே என்று அவளது மனம் பதறும் 'எப்படியும் இந்தக் குழந்தையை சாப்பிடாமல் விடப்போவதில்லை” என்று அவள் தீர்க்கபாக முடிவெடுப்பாள் .

ஆனால் குழந்தை சாய்பாபா அந்த உணவைப் பெற்றுக்கொள்ளாமல் காட்டிற்குள் ஓடி போக்குக் காட்டும்.  பையாஜியும் விடுவதில்லை.  தன் முதுமையையும் பொருட்படுத்தாமல் சாய்பாபா பின்னாலேயே காட்டுக்குள் அவளும் ஒடுவாள் . இது போன்ற சம்பவம் எத்தனையோ நாட்கள் நடந்திருக்கிறது .  அந்த ஊர் மக்கள் இதனை நன்கு அறிவர் .
சாய்பாபாவின் மீது பாசம் அதிகரித்து, ஒரு கட்டத்தில் சாய்பாபா சாப்பிட்ட பிறகே , தான் சாப்பிடுவது என்று பையாஜி பழக்கப்படுத்திக் கொண்டாள். ஆகவே, சாப்பாடு தயாரானதும் அதனை எடுத்துக் கொண்டு சாய்பாபாவை தேடிப்போவாள் . அவருக்கு ஊட்டுவதற்குள்  போதும் போதும் என்றாகி விடும். ஆனால் ,மனம் தளராமல்   மறுபடி,மறுபடி முயன்று உணவை ஊட்டிவிட்ட பிறகே தான் பசியாறுவாள். அந்த அளவிற்கு அந்த வெள்ளை மனதைக் கொண்ட பையாஜி சாய்பாபா மீது ஈடுபாடு கொண்டிருந்தாள் என்றால் அது ஒரு பேரதிசயமே!!! 

தீவிர பக்தர் பையாஜி 

டாக்டர். வி. ராமசுந்தரம்
  ஆன்மீக எழுத்தாளர

EMAIL: venkatraman.ramasundaram@gmail.com

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP