Logo

            பக்தனின் மனதை அறிந்த சாய்பாபா

“ஹரிபாவ் கர்ணிக்” என்பவர் சாய்பாபாவின் தீவிர பக்தர் ஆவார். ஒரு பெளர்ணமி அன்று சாய்பாபாவைத் தரிசனம் செய்வதற்குகாக “தானே” யில் இருந்து ஷீரடிக்கு வந்தார்.
 | 

            பக்தனின் மனதை அறிந்த சாய்பாபா

“ஹரிபாவ்  கர்ணிக்” என்பவர் சாய்பாபாவின் தீவிர பக்தர் ஆவார்.   ஒரு பெளர்ணமி அன்று சாய்பாபாவைத் தரிசனம் செய்வதற்குகாக “தானே” யில் இருந்து ஷீரடிக்கு வந்தார்.

சாய்பாபாவைத் தரிசனம் செய்தார்.

பின்னர் மசூதியின் படிகளில் இறங்கி வெளியேறினார் .

அப்போது தான் அவருக்குத் தோன்றியது. சாய்பாபாவிடம்

ஒரு ரூபாய் தட்சி ணை கொடுக்க வேண்டும் என்று.

உடனே பதறிப்போய் , மீண்டும் வந்தார். சாய்பாபாவைத் தரிசிக்க விரும்பினர்.

ஆனால், பாதுகாவலர் அதற்கு அனுமதி மறுத்து விட்டார்.

எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும் அனுமதி கிடைக்கவே இல்லை. இதனால், மிகவும் மன வேதனையடைந்து , தனது ஊரை நோக்கித் திரும்பிவிட்டார் .

வரும் வழியில் “நாசிக்” என்ற நகரில் உள்ள “காலராமர்”  கோயிலுக்குச் சென்று வர விரும்பினார் . அப்படியே சென்று இறைவனைத் தரிசித்து விட்டு கோயிலைவிட்டு வெளியே வந்து கொண்டிருந்தார் .

அப்போது , கோயிலில் சில நண்பர்களுடன் அமர்ந்திருந்த “நரசிம்ம மகராஜ்” என்பவர் ஹரிபாவ் கர்ணிக்கை நோக்கி வேகமாக வந்தார்.  அவர் கையைப் பற்றிக்கொண்டு "எனக்குத் தர வேண்டிய ஒரு ரூபாயைத் தராமலேயே செல்கிறாயே கொடு " என்று கேட்டார் .

ஹரிபாவ் அப்படியே கற்சிலைபோல அதிர்ந்து போய்விட்டார் .

யார் இவர்?

இவருக்கு ஒரு ரூபாய் தருவதாக, நான் எப்போது சொன்னேன்? சாய்பாபாவிற்குத் தானே ஒரு ரூபாய் கொடுக்க வேண்டும்!

திடீரென்று புரிந்தது அவருக்கு.  வந்திருப்பது நரசிம்ம மகராஜ் அல்ல , சாய்பாபா தன் பக்தன் மனம் வருந்தக்கூடாது என்பதற்காக இத்தனை தொலைவு வந்து  நரசிம்ம மகராஜ் ரூபத்தில் தன்னிடம் அந்தக் காணிக்கையை பெற்றுச் செல்கிறார் .

ரூபாயைக் கொடுத்த ஹரிபாவ், அந்த நிகழ்வில் இருந்து விடுபட வெகுநேரம்

ஆயிற்று.

                        ஓம் ஸ்ரீசாய்ராம்!!!!!

 

            பக்தனின் மனதை அறிந்த சாய்பாபா     

டாக்டர். வி. ராமசுந்தரம்

ஆன்மீக எழுத்தாளர்

EMAIL: venkatraman.ramasundaram@gmail.com

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP