Logo

சாய் பாபாவின்  யோகக்கலை!

சாய் பாபா வசித்த மசூதி பாழடைந்த பழைய கட்டிடமாகத்தான் இருந்தது. ஆயினும் அந்த மசூதியில் இருப்பதையே பாபா அதிகம் விரும்பினார். அங்குள்ள ஒரு மிகப்பழைய அறையில் தான் பாபா அமர்ந்திருப்பார்.
 | 

சாய் பாபாவின்  யோகக்கலை!

சாய் பாபா வசித்த மசூதி பாழடைந்த பழைய கட்டிடமாகத்தான் இருந்தது. ஆயினும் அந்த மசூதியில் இருப்பதையே பாபா அதிகம் விரும்பினார். அங்குள்ள ஒரு மிகப்பழைய அறையில் தான் பாபா அமர்ந்திருப்பார்.  அவருக்கு எதிரே  துனி என்னும் ஹோம குண்டம் இருக்கும். அங்கு ஒரு மூலையில் கோதுமை, புகையிலை ஆகிய சாக்கு மூட்டைகள் வைக்கப்பட்டிருக்கும். மதிய உணவிற்குப் பிறகு சிறிது நேரம் ஆக்ர நெடுஞ்சாலையில் அமைந்துள்ள லெண்டி என்று அழைக்கப்படும் நந்தவனத்திற்குச் செல்வார்.

சில நாட்கள்  ரொட்டியை அவரே  சுட்டு எடுப்பதும் உண்டு. அவை  அத்தனை ருசியாக இருக்குமாம். மசூதிக்கு வெளியே இப்படி ஏறாளமான ரொட்டிகளை சுட்டு பக்தர்களுக்கு வழங்கிக் கொண்டே இருப்பார்.
இரவில் பக்தர்களுக்குப் பணத்தை அள்ளி  வழங்கும்கொடை வள்ளலாகவும் பாபா இருந்துள்ளார். தனது சட்டைப் பைக்குள் கையை நுழைத்து பணத்தை அள்ளி வழங்குவார். தனக்கு எவ்வளவு தேவை  என்பது
பக்தன் ஒருவன் விரும்புகிறானோ அந்த அளவு காசு அவனுக்குக் கிடைக்கும். இது பக்தர்களை  பொரிதும் மெய்சிலிர்க்கச் செய்யும்.

அந்த பக்தனுக்கு இவ்வளவுதான் தேவை என்பதை பாபா எப்படி
அறிந்துகொள்கிறார்? ஆச்சர்யம்...ஆச்சர்யம்!

சாய் பாபாவின்  யோகக்கலை!

தினமும் காலையில் எழுந்ததும் மசூதியில் உள்ள துனி அருகே போய் அமர்வார். அப்போது பக்தர்களிடம் இரவில் தான் வெகு தொலைவில் உள்ள பல்வேறு பிரதேசங்களுக்குச் சென்று வந்ததாகக் கூறி அதை வரிவாக 
விவரிப்பார். இது கேட்டு அங்கு கூடியிருக்கும் பக்தர்கள் குழப்பத்தில் ஆழ்ந்து போய்விடுவர். காரணம் பாபா இரவு அங்கு அந்த மசூதியில் உறங்கிக்  கொண்டிருந்தது அவர்களுக்குத் தெரியும். அப்படி இருக்கும் போது  பாபா எவ்வாறு வேறு இடங்களுக்குச் சென்றிருக்க முடியும்? ஆனாலும்  பாபாவிடம் இது குறித்து எதிர்க்கேள்வி கேட்க முடியாமல் அவர்கள் மெளனித்துப் போவார்கள். எனினும் பாபாவின் செயல்கள் வியப்பைத் தருகிற விதத்தில் இருப்பதாக மசூதி அருகே உள்ள ஆசிரியர் ஒருவர் கூறியுள்ளார். இரவில் பாபாவின் அறையில் பல்வேறு மொழிகளில் பாபா யாருடனோ பேசிக் கொள்வதைப் பலமுறை கேட்டுள்ளதாக அவர் சொல்வார். பாபா சற்றும் அறிந்திராத ஆங்கில மொழியில் மிகச் சரளமாகப் பேசியதைத் தான் கேட்டதாக அவர் கூறுவது அனைவரையும் திகைப்படையச் செய்யும்.

அப்படியானால் இரவு நேரத்தில் வெகு தொலைவு பயணம்மேற்கொண்டு பலதரப்பட்ட மக்களைச் சந்தித்ததாக பாபா கூறுவது நிச்சயம் உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்பதை பக்தர்கள்
உணரத்தொடங்கினர். அதுவே  அவர்களை  பாபாவின் அருகில் இன்னும் நெருக்கமடையச் செய்தது. தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும்ஹோமக் குண்டத்தின் அருகில் அமர்ந்து கொள்ளும் பாபா அடிக்கடி கைகளை  அசைத்தும் விரல்களை  விரித்து மூடியும் ஹக் என்று கூறுவார். ஹக் என்றால் கடவுள் என்று பொருள். இப்படி அவர் செய்வதற்கு என்ன அர்த்தம் என்பது எவருக்குமே புரியாது.

பாபா ஒவ்வொரு  வாரத்திலும் மூன்றாவது நாள் மட்டுமே தனது உடலைக் கழுவி  சுத்தம் செய்வார். அதற்காக ஊர் எல்லையில் இருந்த ஆலமரத்துக் கிணற்றுக்குச் செல்வார். வாய்க்குள் நீரை  ஊற்றி அலம்பிக்
கொப்பளித்துத் துப்புவார். அந்த நீரை  வாங்கித் தங்கள் தலையில் தெளித்துக்கொள்ள பக்தர்கள் அங்கு கூட்டமாகத் திரள்வதும் உண்டு. அப்படிச் செய்தால்  தங்கள் நோய் நொடிகள் குணமடைவதைப் பலரும் அறிந்திருக்கின்றனர். ஒருசமயம் இவ்வாறு பாபாவின் எச்சில் நீரைவாங்கி தன் உடம்பில் தெளித்துக்
கொண்ட ஒருவருக்கு அவரைக் கடுமையாகப் பிடித்திருந்த தொழுநோய்குணமடைந்த அதிசயமும் நடந்ததுண்டு. ஆனாலும் தான் குளிப்பதைப் பக்தர்கள் வந்து காண்பது பாபாவிற்கு
எரிச்சலையே தந்தது.

சாய் பாபாவின்  யோகக்கலை!

பாபா அமர்ந்து வசதியாகக் குளிப்பதற்காக கல் நாற்காலி ஒன்றை பக்தர் ஒருவர் வழங்கினார். ஆனால் அதனை பாபா பயன்படுத்தவே  இல்லை. வழக்கம்போல தரையில் அமர்ந்து குளிப்பதையே அவர் விரும்பினார்.  அக்கல் இன்றளவும் மசூதியில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஒருமுறை பாபா குளிக்கச் செல்லும்போது அவ்வூர்வாசி ஒருவர் மறைந்திருந்து பார்த்தார். அப்போது இருபத்தி இரண்டரை  அடி நீளமும் 3 அங்குல அகலமும் உடைய லினன் துணியினால் அவர் தவ்தி செய்தார். பின்னர் அந்தத் துணியை
வாய்க்குள் திணித்து விழுங்கினார். அரைமணி நேரத்திற்குப் பிறகு அந்தத் துணியை வெளியே எடுத்தார்.

அதன்பிறகு பாபா வாந்தி எடுத்தார். அதில் அவரது குடல் கும்பி அனைத்தும் வெளியே வந்திருக்கிறது. அதனை நன்கு சுத்தம் செய்து நாவல் மரக்கிளையில் உலரவைத்திருக்கிறார். அது நன்றாக உலர்ந்த பின்னர் மீண்டும் குடலைத்தன் வாய் வழியாக உள்ளே  செலுத்தி இருக்கிறார். இதனைக் கண்ட பக்தருக்கு ஏற்பட்ட வியப்பு சொல்லி மாளாது.

யோகக்கலையில்  இதனை தந்தி யோகம் என்று கூறுவர். இதுபற்றி அங்குள்ளவர்கள் யாருக்கும் அப்போது தெரியாது. இதுபோலவே  இன்னுமொரு நம்பவே  முடியாத நிகழ்ச்சி ஒன்றையும்
கூறுவர். பக்தர் ஒருவர் ஒருநாள் மசூதிக்குச் சென்றபோது அங்கு கண்டகாட்சி அவரை  அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அங்கு கை,கால்,விரல்கள், கழுத்து என்று பாபாவின் உடல் உறுப்புகள் அனைத்தும் தனித்தனியே ஆங்காங்கே சிதறிக் கிடந்திருக்கின்றன. இதனைப் பார்த்து பீதியடைந்த அந்தப் பக்தர் உடனடியாகக் கிராம அதிகாரியிடம் ஓடிப்போய் பாபாவை யாரோ கண்டம் துண்டமாக வெட்டிக் கொலை செய்துவி ட்டதாகப் புகார் தொரிவித்தார்.

சாய் பாபாவின்  யோகக்கலை!

அதிர்ந்து போன அதிகாரி  அது உண்மைதானா என்று கண்டறிவதற்காக வேகமாக மசூதிக்கு வந்தார். ஆனால் அங்கே அவர் கண்ட காட்சி திடகாத்திரமான உடம்புடன் அமைதியே உருவாக துனியின் முன்
அமர்ந்திருந்தார் சாயி மகான்!

மகான்கள் தங்கள் உடல் உறுப்புகளைத் தனித்தனியே கழற்றி மாட்டும் சக்தி படைத்தவர்கள். இதனை கண்ட யோகம் என்று கூறுவர். இந்த உண்மை அவர்களுக்குத் தாமதமாகவே  புரிந்தது.

சாய் பாபாவின்  யோகக்கலை!

வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர் 
EMAIL: venkatraman.ramasundaram@gmail.com

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP