தீவிர பக்தராக  மாறிய   ராம்லால்

ராம்லாலுக்கு அதிசயமாக இருந்தது. இப்பேர்ப்பட்ட மகான் தன் கனவில் வந்திருக்கிறார் என்றால், கணநேரம் கூடத் தாமதிக்காமல் உடனடியாக ஷீரடி சென்று அந்த மகானைத் தரிசித்தார்
 | 

 தீவிர பக்தராக  மாறிய   ராம்லால்

“ராம்லால்”  என்பவர் பஞ்சாப்பைச் சேர்ந்தவர்.  மும்பையில் வசித்து வந்தார்,  எனினும் இவர் சாய்பாபாவை பற்றி அறிந்ததும் கிடையாது, தெரிந்ததும் கிடையாது.    இவர் கனவிலும் சாய்பாபா ஒரு நாள் பிரகாசமாகத் தோன்றினார் . தன்னை நேரில் வந்து சந்திக்குமாறு அவருக்கு ஆணையிட்டுவிட்டு மறைந்துவிட்டார்.    

ராம்லாலுக்கு  இது  ஆச்சர்யமாக இருந்தது. 

 யார் இந்தப் பெரியவர்? 

எங்கிருக்கிறார் ? 

 ஏன் தன்னைக் சந்திக்குமாறு கூறினார்?  இப்படிப் பலக் கேள்விகள் அவருள்ளே எழுந்தன . ஆனாலும் ,அவரை எப்படிச் சென்று தரிசனம் செய்வது என்பது மட்டும் ராம்லாலுக்குப் புரியவில்லை.  எனினும் கனவில் காட்சியளித்த அவரின் உருவம் மட்டும் அவர்  கண்களைவிட்டு அகலவே இல்லை .

இது போன்ற சூழலில் ஒரு நாள் கடை வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.  கடை ஒன்றில் ஒரு பெரியவரின் படம் இருந்தது.  அந்தக் கடையைத் தாண்டிச் சென்றவரின் கண்களை அந்தப் படம் கவர்ந்து இழுத்தது.  இந்தப் பெரியவரை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்ற எண்ணத்துடன் நின்றவருக்கு 'சட்' டென்று நினைவு வந்தது .

தனது கனவில் தோன்றி காட்சியளித்த மகானே தான்!

உடனடியாக அந்தக் கடையை நோக்கிச் சென்றார். கடை முதலாளியிடம், "அந்தப் படத்தில் இருப்பது யார்" ? என்று வினவினார்.

அவரும் சாய்பாபாவைப் பற்றியும்,  அவரின் பெருமைக்குரிய பல்வேறு அற்புதங்களைப் பற்றியும் எடுத்துரைத்தார்.  மேலும் ஷீரடியில் அவர் இருப்பதைப் பற்றியும் அங்கு எப்படிச் செல்ல வேண்டும் என்பது பற்றியும் விரிவாகக் கூறினார்.    ராம்லாலுக்கு அதிசயமாக இருந்தது.  இப்பேர்ப்பட்ட மகான் தன் கனவில் வந்திருக்கிறார் என்றால், கணநேரம் கூடத் தாமதிக்காமல் உடனடியாக ஷீரடி சென்று அந்த மகானைத் தரிசித்தார்.    அப்புறம் சாய்பாபாவின் தீவிர பக்தராகவும் மாறினார்   ராம் லால் .    

ஓம்ஸ்ரீசாய்ராம்!!!!

 

 தீவிர பக்தராக  மாறிய   ராம்லால்
டாக்டர். வி. ராமசுந்தரம்

ஆன்மீக எழுத்தாளர்

EMAIL: venkatraman.ramasundaram@gmail.com

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP