Logo

பக்தர்களைக் காப்பாற்றும் துவாரகா மயி      

தனது துண்டை எடுத்து மிரீகர் உதறியபோது துண்டின் ஓரத்தில் ஒரு பாம்பு நெளிந்தது . அதனைக் கண்ட ஒருவன்," அய்யோ! கொடிய நச்சுப் பாம்பு "என்று அலறினான்.
 | 

பக்தர்களைக் காப்பாற்றும் துவாரகா மயி      

“பாலாசாகேப்  மிரீகர்” என்பவர், சிதலீ என்ற  ஊருக்குப் பயணம் மேற்கொண்டார். வழியில் ஷீரடியில் தங்கி சாய்பாபாவைத் தரிசனம் செய்தார்.  அப்போது சாய்பாபா தன் பக்தர்களைப் பார்த்து "உங்களுக்கு துவாராக மயி தெரியுமா?" என்று கேட்டார். அவர்கள் அனைவரும் இதற்குப் பதில் தெரியாததால் அமைதி காத்தனர் . அதற்குப் பதிலையும் சாய்பாபாவே கூறினார், "நீங்கள் தற்போது இருக்கும் இந்த இடமே “துவாராக மயி”. இவள் தன் மடியில் அமர்ந்திருக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் எந்த ஆபத்தில் இருந்தும் அவள் காப்பாள்" என்றார் .

சாய்பாபா, எதற்காக இப்படி க் கூறுகிறார் என்பதைப் பக்தர்களால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. பிறகு, சாய்பாபா அனைவருக்கும் விபூதி வழங்கினார் . அப்படியே விபூதி  வந்த மிரிகரின் தலையில் கை வைத்த சாய்பாபா, "உங்களுக்கு லம்பா  பாவைத் தெரியுமா? என்று கேட்டார். சாய்பாபா என்ன கேட்கிறார்? யார் அந்த லம்பா பாவா ?' மிரீகருக்கு ஒன்றும் புரியவில்லை.  சாய்பாபாவையே பார்த்துக் கொண்டிருந்தார் . மீண்டும் சாய்பாபாவே ," அவன் பயங்கரமானவன் தான் .  ஆனாலும், அவனால் துவாரகா மயியின் குழந்தைகளை ஒன்றும் செய்ய இயலாது "என்றவாறே மிரீகருக்கு விபூதியை வழங்கினார்.

பக்தர்களைக் காப்பாற்றும் துவாரகா மயி      

பின்னர் மிரீகர், தான் சிதலீக்குப் புறப்படுவதற்கு சாய்பாபாவிடம் உத்தரவு கேட்டார். அதற்கு அனுமதி அளித்த சாய்பாபா, மிரீகருடன் துணைக்கு ஷாமாவையும் சென்று வருமாறு பணித்தார். எதற்காக ஷாமாவைத் துணைக்கு வருமாறு சாய்பாபா கூறினார் என்று மிரீகருக்குப் புரியவில்லை . எனினும் சாய்பாபாவின் கட்டளையை  யாரால் தான் மீற முடியும்?
இரவு நேரத்தில் சிதலீயை அவர்கள் சென்றடைந்தனர்  அங்குள்ள மாருதி கோயிலில் அவர்கள் தங்கினர் .

அங்குதான் அந்தச் சம்பவம் நடைபெற்றது. தனது துண்டை எடுத்து  மிரீகர் உதறியபோது துண்டின் ஓரத்தில் ஒரு பாம்பு நெளிந்தது . அதனைக் கண்ட ஒருவன்," அய்யோ! கொடிய நச்சுப் பாம்பு "என்று அலறினான். மிரீகரும் ,ஷாமாவும் திடுக்கிட்டுப் பார்த்தனர்.  அந்த பாம்பு மெல்ல ஊர்ந்து செல்வதைக் கண்டனர் . அதற்குள் அங்கிருந்தோர் அந்த பாம்பை அடித்துக் கொன்றனர். ஆக ,சாய்பாபா கூறிய'லம்பா பாவா' என்று கூறியது கொடிய இந்த நச்சுப் பாம்பைத்தான் என்பது அவர்களுக்கு அப்போது தான் புரிந்த்து . துவாரகா மயி மிரீகரைக் காப்பாற்றினாள்.   சாய்பாபா  இருக்கும்  இடம் (துவாரகா மயி)  கூட பக்தர்களை காப்பாற்றும்  அரண்  ஆக விளங்கிறது.   ஒம் சாய் ஒம்!!!!   தொடரும்.   

பக்தர்களைக் காப்பாற்றும் துவாரகா மயி      
    வி. ராமசுந்தரம்
 ஆன்மீக எழுத்தாளர்
 EMAIL: venkatraman.ramasundaram@gmail.com

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP