நெற்றியில் குங்குமம் நிறைய வேண்டும்!

மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு போன்ற கிருமி நாசினிப் பொருட்களைக் கொண்டு, குங்குமம் தயார் செய்யப்படுகிறது. அவ்வாறு தயார் செய்யப்பட்ட குங்குமத்தை. பெண்கள் தங்களுடைய நெற்றியின் மையப் பகுதியில் அணிவதால், உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளின் வெப்பத்தை, குங்குமம் தடுக்கிறது.
 | 

நெற்றியில் குங்குமம் நிறைய வேண்டும்!

பெண்கள், நெற்றியிலும் உச்சியிலும் வைத்துக் கொள்ளும் குங்குமத்தில் தாம் மகிழ்ந்து இருப்பதாக மஹாலட்சுமி கூறுகிறாள். எனவே, குங்குமம் தான் உயர்ந்தது. 

நெற்றியில் குங்குமம் அணியும் போது, தீய சக்திகள் விலகும். அதிலும், இரு புருவங்களுக்கிடையில் குங்குமம் வைத்தால், அவர்களை யாரும், அவ்வளவு எளிதில் வசியம் செய்ய முடியாது. 

மேலும்,மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு போன்ற கிருமி நாசினிப் பொருட்களைக் கொண்டு, குங்குமம் தயார் செய்யப்படுகிறது. அவ்வாறு தயார் செய்யப்பட்ட குங்குமத்தை. பெண்கள் தங்களுடைய நெற்றியின் மையப் பகுதியில் அணிவதால், உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளின் வெப்பத்தை, குங்குமம் தடுக்கிறது. 

குங்குமத்தின் மேல் சூரிய ஒளிப்படும்போது, குங்குமத்தில் உள்ள மூலிகை தன்மையும், சூரிய சக்தியிலிலிருந்து வெளிப்படும் வைட்டமின் டி சக்தியும் ,உடலுக்குள் சென்று நன்மையை ஏற்படுத்தி தருகிறது.
அதேபோல் மன அமைதி, மங்களகரமான தோற்றம், உடல் நலத்தையும் தருவதால், பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிவது சிறந்தது.

ஸ்டிக்கர் பொட்டுகள் வைப்பதை தவிர்த்து, பெண்கள் குங்குமம் வைத்தால், வீட்டில் மஹாலட்சுமி மகிழ்ச்சியுடன் வாசம் செய்வாள்.

Newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP