இறை வழிபாட்டில் சங்குக்கு முக்கியத்துவம் ஏன்?

வெண்மை நிற பால் சங்கை உரைத்து சாப்பிட்டால், உடலில் உள்ள கிருமிகள் அழிக்கபடுவதோடு பல விதமான நோய்களும் குணமாகும். ஆலயங்களில் பிரதான சங்காக வலம்புரிச் சங்கு இடம் பெறும். சங்கின் அமைப்பு, அந்தப் பிரணவத்தை உணர்த்துகிறது. வலம்புரி கணபதியின் தும்பிக்கையைப் போல் தோற்றம் அமைந்திருக்கும்.
 | 

இறை வழிபாட்டில் சங்குக்கு முக்கியத்துவம் ஏன்?

இறைவன் வழிபாட்டில், சங்குக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சங்குகளால் செய்யப்படும் அபிஷேகம் சிறப்பு மிக்கது. இதை தரிசிப்பது பெரும் பலனை அளிக்கும்.

ஹிந்துக்களின் கலாசாரத்தில் சங்கு ஊதுதல் மிகவும் முக்கியமானது. சங்கு ஊதினால் அபசகுனம் என்பது இப்போது சினிமாக்களால் ஏற்பட்ட அவதுாறு.  ஆனால்,சங்கில் உள்ள மருத்துவ குணங்களை அறிந்த முன்னோர், அதை இறை வழிபாட்டில் சேர்த்துள்ளனர்.

நுண் கிருமிகளை அளிக்கும் தன்மை கொண்டது சங்கு.  இதனை அறிந்த நம் முன்னோர், வீட்டு வாசலில் சங்கை, பாதி பூமிக்கு அடியிலும் மீதி மேலே தெரியும் படியும் பதித்தனர். இதனால் வெளியில் இருந்து வரும் காற்று, சங்கின் ஊது துவாரம் வழியாக உள்ளே செல்லும், காற்றில் கலந்துள்ள மாசுகளை சங்கு அழித்து, நல்ல காற்றை, வீட்டுக்குள்ளே தருகிறது. 

இதனால் தான் இன்று வரை, சங்கை, வீட்டு வாசலில் கட்டி தொங்க விடுகின்றனர். பழங்காலங்களில் அரண்மனைகளில் அரச விழாக்கள் ஆரம்பிக்கும் முன்பும், போருக்கு தயாராகும் போது சங்கினை ஒலிக்க வைப்பார்கள். ஏனெனில், சங்கு ஒலியில் தீய சக்திகள் நீங்கி நல்ல சக்திகள் உருவாகிறது.  

வெண்மை நிற பால் சங்கை உரைத்து சாப்பிட்டால், உடலில் உள்ள கிருமிகள் அழிக்கபடுவதோடு பல விதமான நோய்களும் குணமாகும். ஆலயங்களில் பிரதான சங்காக வலம்புரிச் சங்கு இடம் பெறும். சங்கின் அமைப்பு, அந்தப் பிரணவத்தை உணர்த்துகிறது. வலம்புரி கணபதியின் தும்பிக்கையைப் போல் தோற்றம் அமைந்திருக்கும். 

பாற்கடலைக் கடைந்த போது வந்த பல மங்கலப் பொருட்களில் இந்தச் சங்கும் ஒன்று.இந்தச் சங்கு உதயம் ஆனதும், மஹாவிஷ்ணு, அதைத் தன் கரத்தில் வைத்துக்கொண்டு சங்கு சக்ரதாரி ஆனார். சங்கு ஐஸ்வர்யம், வீரம், மங்கலம் இவற்றைப் பிரதிபலிக்கும் பொருளாக அமைகிறது. 

வலம்புரிச் சங்கில் லட்சுமி, குபேரன் ஆகியோர் வாசம் செய்கிறார்கள். இதை வைத்துப் பூஜை செய்ய, சுபீட்சம் பெருகும். வியாதிகள் நீங்கும். வீட்டில், இச்சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தால், குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் தொடர்ëந்து இருக்கும்.

வலம்புரிச் சங்கில் தீர்த்தம் துளசி இட்டு, பூஜை செய்து, மங்கள ஸ்நானம் செய்தால், பிரம்மகத்திதோஷம் நீங்கும். வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு, பிரதி வெள்ளி தெளித்து வர, தோஷம் விலகி நலம் உண்டாகும்.

வலம்புரிச்சங்கு பூஜிக்கப்படும் வீட்டில் பில்லி சூன்யங்கள், ஏவல்கள் நெருங்காது. ஓடிவிடும்.
பிறந்த குழந்தைக்கு ஜுரம் வந்தால், சங்கில் நீர்விட்டு, ருத்ராட்சம் இட்டு அது ஊறிய நீரை மட்டும் ஊட்டி விட ஜுரம், தோஷங்கள் அனைத்தும் விலகும்.

தினமும் காலையில் எழுந்தவுடன் காலைக் கடங்களை முடித்து, பூஜை அறைக்குச் சென்று, நேற்று சங்கில் ஊற்றி வைத்தள நீரை, வீட்டின் வாசல்படி மற்றும் முக்கிய இடங்களில் தெளிக்க வேண்டும். சங்கை மலர்களால் அர்ச்சித்து ஓம்,ஓம்,ஓம் என்று கூறி, தூப தீபம் காட்டி வணங்க வேண்டும். 

வெள்ளிக்கிழமையன்று பசும்பால், துளசி இலைகளைப் போட்டு வைத்து செய்ய வேண்டும். மறு நாள் சனிக்கிழமை அந்தப் பசும்பாலையும், துளசியையும் சாப்பிட்டு வந்தால் எப்படி நாள்பட்ட வியாதியும் குணமாகும். 

இந்த சங்கு பூஜையை 48 நாட்கள் தொடர்ந்து செய்து வழி பட்டு வந்தால் பல்வேறு நன்மைகள் நாடி வரும். தினம் தினம் சங்கு பூஜை செய்பவர் இல்லத்தில் எல்லா எதிர்ப்புகளும் நீங்கி, அதிர்ஷ்ட தேவதை அடியெடுத்து வைப்பாள். 
Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP