சுப நிகழ்ச்சிகளில் வாழைக்கு முக்கியத்துவம் ஏன்?

அந்த காலத்தில் திருமண வீடுகளில் மட்டுமே வாழை மரம் கட்டப்பட்டது.ஏனென்றால் அதில் நமது கலாச்சாரமும், பண்பாடும் அடங்கி இருக்கிறது. வாழை மரம் போல, மனிதனின் வாழ்வும் வாழையடி வாழையாகத் தழைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கட்டப்பட்டது.இதற்கு அறிவியல் ரீதியான காரணங்களும் உண்டு.
 | 

சுப நிகழ்ச்சிகளில் வாழைக்கு முக்கியத்துவம் ஏன்?

எவ்வளவோ மரம் இருந்தும், வீட்டில் நிகழும் சுப நிகழ்ச்சிகளுக்கு வாழை மரம் கட்டுவது ஏன்? நமது வீட்டில் நிகழும் சுபகாரியங்களுக்கு அடையாளமே வாசலில் வாழை மரம் கட்டுவது தான். 

அதுவும் பூ பூத்துக், காய் காய்த்த வாழை மரத்தைத் தான் தேர்ந்தெடுத்துக் கட்டுவோம். நமது முன்னோர்கள் காரண காரியம் இல்லாமல் எதையும் சொன்னதும் இல்லை, செய்ததும் இல்லை.

அந்த காலத்தில் திருமண வீடுகளில் மட்டுமே வாழை மரம் கட்டப்பட்டது.ஏனென்றால் அதில் நமது கலாச்சாரமும், பண்பாடும் அடங்கி இருக்கிறது. வாழை மரம் போல, மனிதனின் வாழ்வும் வாழையடி வாழையாகத் தழைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கட்டப்பட்டது.இதற்கு அறிவியல் ரீதியான காரணங்களும் உண்டு. 

தாவரங்கள் காற்றில் இருக்கும் கார்பன்-டை-ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு, ஆக்சிஜனைப் பரவச் செய்கின்றன.வீட்டில் சுபநிகழ்ச்சி என்றால் ஏராளமான விருந்தினர்கள் வருவார்கள், போவார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் விடும் மூச்சு காற்றிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடு, காற்றில் கலக்கும்.

கூட்டம் அதிகப்படியாகச் சேரும் போது அவர்களின் உடல் உஷ்ணம், வியர்வை ஒன்றாகச் சேரும் போது, ஒதுவித மூச்சு அடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

அப்போது வீட்டில் கட்டியிருக்கும் மா இலை தோரணங்கள், வாழை மரங்களும் ஒன்று சேர்ந்து காற்றில் பரவி இருக்கும் கிருமிகளை அழிப்பதோடு, உஷ்ணத்தைக் குறைக்கும். ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது வாழை மரம்.
அனைத்து மரமும் இதை தானே செய்யும் எதற்காக வாழையை மட்டும் வெட்டி வைக்கிறார்கள? 
வாழை வெட்டி, 1 வாரம் வரை பச்சை காயாமல் இருக்கும். அதனால் தான் வாழைக்கு நம் முன்னோர் முக்கியத்துவம் கொடுத்தனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP