யார் உண்மையான பக்தன்?

கடவுள் கருணையாலேயே, எல்லாம் நடப்பதாக நம்புபவனே, உண்மையான பக்தன் என்பதை, மஹாலட்சுமி புரிந்து கொண்டாள். மஹாவிஷ்ணு சிரித்தார்.
 | 

யார் உண்மையான பக்தன்?

பக்தர்கள் இருவர், மகா விஷ்ணுவை வேண்டிக் வேண்டிக் கொண்டிருந்தனர். அப்போது, மகாவிஷ்ணுவிடம், ‘சுவாமி! இந்த இரு பக்தர்களின் யார் தங்களை முழுமையாக நம்புகிறார்கள்?’ என, மஹா லட்சுமி கேட்டாள்.
அதற்கு மகாவிஷ்ணு, ‘ அவர்கள் இருவரின், வேண்டுதல்களையும் கேட்டால், உனக்கே புரியும்’ என கூறினார். 

முதல் பக்தன், ‘கடவுளே! எனக்கு வரும் வருமானத்தில், மாதத்தின் பாதி நாட்களை ஓட்டிவிடுகிறேன். மீது பாதி நாட்களில் நான் கஷ்டப்படாமல் இருக்க, நீதான் வழிகாட்ட வேண்டும்’ என,  வேண்டினான்.  
இரண்டாவது பக்தன், ‘சுவாமி! எனக்குக் கிடைப்பவை எல்லாமே உன்னருளால் கிடைப்பவை தான். அதனைக் கொண்டு பாதி நாட்களுக்கு, படி அளக்கும் நீ, மீதி நாட்களுக்கும் படி அளக்க மாட்டாயா என்ன? உன்னருள் கிட்டும் வரை, நான் காத்திருப்பேன்’ என, வேண்டினான். 

கடவுள் கருணையாலேயே, எல்லாம் நடப்பதாக நம்புபவனே, உண்மையான பக்தன் என்பதை, மஹாலட்சுமி புரிந்து கொண்டாள். மஹாவிஷ்ணு சிரித்தார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP