இந்த குரு பெயர்ச்சியில் எந்த ராசிக்காரர்களுக்கு சொந்த வீடு அமையும் ?

இன்று ,அக்டோபர் மாதம் 4 ந் தேதி, புரட்டாசி 18 ந் தேதி இரவு 10.05 மணிக்குகுரு பெயர்ச்சி நடைபெறுகிறது .பொதுவாக அனைத்து கிரகங்களின் பெயர்ச்சியும் சிறப்பித்து கொண்டாடப்படுவதில்லை. முக்கியமாக நான்கு கிரகங்களின் பெயர்ச்சி மட்டுமே சிறப்பித்து சொல்லப்படுகிறது.
 | 

இந்த குரு பெயர்ச்சியில் எந்த ராசிக்காரர்களுக்கு  சொந்த வீடு அமையும் ?

இன்று ,அக்டோபர் மாதம் 4 ந் தேதி, புரட்டாசி  18 ந் தேதி இரவு 10.05 மணிக்குகுரு பெயர்ச்சி நடைபெறுகிறது .பொதுவாக அனைத்து கிரகங்களின் பெயர்ச்சியும் சிறப்பித்து கொண்டாடப்படுவதில்லை. முக்கியமாக நான்கு கிரகங்களின் பெயர்ச்சி மட்டுமே சிறப்பித்து சொல்லப்படுகிறது. கால புருஷத் தத்துவப்படி குருப் பெயர்ச்சி வருடத்திற்கு ஒரு முறையும், சனிப் பெயர்ச்சி இரண்டரை வருடத்திற்கு ஒரு முறையும், ராகு கேது பெயர்ச்சி ஒன்றரை வருடத்திற்கு ஒரு முறையும் நடக்கிறது.

இந்த வருடம் சுபகிரகமான குருபகவான்  துலாராசியிலிருந்து விருச்சிக ராசியில் ஒரு வருட காலம் பயணம் செய்யவிருக்கிறார்.குரு அமரும் இடத்தை விட அவர் பார்க்கும் இடத்திற்கு வலிமை அதிகம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.

குருவின் காரகத்துவம் :

நேர்மையான செயல்களைச் செய்வது ,தங்கம் வாங்குவது, வீடு கட்டுவது, திருமணம் செய்வது, குலதெய்வம்,குழந்தைப் பேறு, நல்ல விஷயங்கள், சுப காரியங்கள், தீர்த்த யாத்திரைகளுக்குச் செல்வது அனைத்தும் குருபகவானின் அருளாலேயே நடக்கும்.

வீடு - மனை யோகம்

வீடு மனை வாங்குபவர்கள் பணம் மட்டுமே சம்பாதித்தவர்களாக இருக்க மாட்டார்கள். அதற்கான யோகமும் அமைய வேண்டும். அந்த யோகத்தைக் கொடுப்பதில் குரு பகவான் முக்கிய பங்கு வகிக்கிறார். இந்த குரு பெயர்ச்சியில் எந்தெந்த  ராசிக்காரர்கள் எல்லாம் வீடு கட்டுவார்கள் அல்லது வாங்குவார்கள் என்பதை பற்றிப் பார்ப்போம்.
குரு பகவானின் பார்வை ராசி மற்றும் சுகஸ்தானம் போன்றவற்றின் மீது விழும் போது ஒருவர் வீடு-மனை-வாங்கும் யோகத்தைப் பெறுகிறார்.

பஞ்சமஸ்தானம் மற்றும் பாக்கியஸ்தானத்தின் மீது குருபார்வை விழும் போது பூர்வீக சொத்துக்களைப் பெறும் யோகத்தை ஒருவர் பெறுகிறார்.இனி 12 ராசிக்காரர்களில் இந்த குருபெயர்ச்சியால் யோகம் பெற்றவர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களின் இரண்டாம் இடமான தன ஸ்தானத்தையும், நான்காமிடமான சுகஸ்தானத்தையும், விரய ஸ்தானமான பனிரெண்டாமிடத்தையும் குரு பார்க்கிறார். வீடு  வாங்கக் கூடிய யோகம் கண்டிப்பாக மேஷ ராசிக்கு உண்டு.  விரய ஸ்தானத்தை குரு பார்க்கிறாரே எப்படி என்று யோசிக்க வேண்டாம். வீடு வாங்குவதன் மூலம் சுப விரயமாக நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். இந்த வருடம் வீடு மனை அமைய சுகஸ்தானாதிபதியான சந்திரனை வணங்கி வரவும். முடிந்த வரை அம்பாள் கோவில்களுக்குச் சென்று வரவும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு  உங்கள் ராசியையும், தைரிய ஸ்தானத்தையும், லாப ஸ்தானத்தையும் பார்க்கிறார். லாப ஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பதால் வீடு வாங்க முயற்சி செய்தால் கண்டிப்பாக நடந்தேறும். உங்கள் ராசிநாதனான சுக்கிர பகவானையும், மஹாலட்சுமியையும் வணங்கி வர உங்கள் வீடு வாங்கும் கனவு நிறைவேறும்.

மிதுனம்:

மிதுன ராசியைப் பொறுத்தவரை தனஸ்தானத்தை  குரு பார்ப்பதுடன்,தொழில் ஸ்தானம் மற்றும்    விரய ஸ்தானத்தையும் குரு  பார்க்கிறார். அவர் தொழில் மற்றும் திருமணத்திலிருந்த தடையையும் நீக்கி விடுவார். குரு பகவான் மார்ச் - 13 - 2019 முதல் ஜூன் - 18 -2019 வரை அதிசாரம் பெற்று தனுசு ராசியில் சஞ்சரிக்கும் போது வீடு வாங்கும் யோகம் பெறுவீர்கள்.

கடகம்:

கடகராசியைப் பொறுத்தவரையில் உங்கள் ராசியையும், பாக்கிய ஸ்தானத்தையும்,  லாப ஸ்தானத்தையும்   பார்ப்பதால் கட்டாயமான முறையில் வீடு வாங்கியே ஆவீர்கள். அல்லது கட்டுவீர்கள். இந்த காலகட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு பணம் பல வழிகளிலும் வரும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. உங்கள் ராசிநாதனான சந்திரன் பகவானையும் அம்பாளையும் வழிபட்டு வர உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.

சிம்மம்:

சிம்மராசியைப் பொறுத்தவரை அஷ்டம ஸ்தானத்தையும், தொழில் ஸ்தானத்தையும், விரய ஸ்தானத்தையும் பார்க்கிறார். உங்கள் ராசியில் சுகஸ்தானத்தில் இருப்பதால் வீடு வாங்கும் யோகம் உண்டு. எனவே தீவிர முயற்சி எடுத்தால் சொந்த வீட்டில் குடி புகும் பாக்யம் பெறுவீர்கள்.

கன்னி:

கன்னிராசியைப் பொறுத்தவரை பாக்கிய ஸ்தானத்தில் மீது குருவின்  ஏழாம் பார்வை விழுவதால் பூர்வீக சொத்துக்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வழக்குகள் நடந்து கொண்டிருந்தாலும் அது உங்களுக்குச் சாதகமாக முடியும் வாய்ப்பு உள்ளது.

துலாம்:

துலா ராசியினருக்கு குரு பகவான் அதிசாரம் பெறும் காலமாகிய மார்ச் - 13 - 2019 முதல் ஜூன் - 18 - 2019வரையிலான காலத்தில் வீடு மனை வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். அந்த காலகட்டத்தில் குரு பகவானின் பார்வை உங்கள் பாக்கிய ஸ்தானத்தின் மீது விழுவதால் பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசியினருக்கு ராசியிலேயே குரு சஞ்சரிப்பதாலும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தை ஐந்தாம் பார்வையாலும்,பாக்கிய ஸ்தானத்தை ஒன்பதாம் பார்வையாலும் பார்ப்பதால் பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து உங்கள் பங்கைப் பெறுவீர்கள். அதன் மூலம் புது மனையும் வாங்குவீர்கள்.

தனுசு:

தனுசு ராசியினருக்கு குரு பகவான் ராசியாதிபதி ஆகிறார். ஐந்தாம் பார்வையால் சுகஸ்தானத்தைப் பார்க்கிறார்.குருவின் அதிசார காலகட்டத்தில் (13-03-2019 முதல் 18-06-2019) ராசியிலேயே சஞ்சாரம் செய்யப்போகிறார்.எனவே 2019 குரு பெயர்ச்சிக்குள்ளாக தனுசு ராசியினர் கண்டிப்பாக வீடு வாங்கும் யோகத்தைப் பெறுவீர்கள்.

மகரம்:

மகர ராசியினரின் பஞ்சம ஸ்தானத்தை குரு பகவான் ஏழாம் பார்வையால் பார்ப்பதால் பூர்வீக சொத்துக்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குருவின் அதிசார காலகட்டத்தில் (13-03-2019 முதல் 18-06-2019) சுகஸ்தானத்தைப் பார்ப்பதால், இந்த காலத்தில் புது வீடு வாங்கும் முயற்சியினை மேற்கொண்டால் வெற்றி நிச்சயம்.

கும்பம்:

கும்ப ராசியினருக்கு சுகஸ்தானத்தை குரு பகவான் பார்க்கிறார். எனவே வீடு வாங்கும் முயற்சியில் ஈடுபடலாம்.குருவின் அதிசார காலகட்டத்தில் (13-03-2019 முதல் 18-06-2019) பஞ்சம ஸ்தானத்தைப் பார்ப்பதால் பூர்வீக சொத்துப் பிரச்ச்சனை தீரும்.

மீனம்:

மீன ராசியினருக்கு குரு பகவான் ராசியினைப் பார்ப்பதாலும், பஞ்சம ஸ்தானத்தைப் பார்ப்பதாலும்  கண்டிப்பாக வீடு வாங்குவீர்கள். இருக்கும் வீட்டை புதிதாக இடித்து கட்டுவது ,கிரகப் பிரவேசம் செய்வது போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

சுபம் 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP