இசையால் வசமாகாத இதயம் எது ?

இசையை ரசிக்க கல்வியறிவு தேவை இல்லை. இசைஞானம் சற்று இருந்தாலே போதும். படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு விஷயம் இசைதான். இந்தியாவின் முக்கிய இசைகளாக கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை, கசல், கிராமிய இசை போன்றவை போற்றப்படுகின்றன.
 | 

இசையால் வசமாகாத இதயம் எது ?

உலகில் மொழி வடிவம் பெறுவதற்கு முன்னரே இசை தோன்றியது என்று சொல்வார்கள் . மனிதன் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் கருவியாக இசை இருந்து வந்திருக்கிறது என்றால் மிகையில்லை. பண்டைய தமிழர்களின் வாழ்வில் இசையும் ஓர் அங்கமாகவே இருந்தது எனலாம். இசை என்றால் இசைய வைப்பது என்று பொருள். அழகிய ஒலியால் கேட்கும் அனைத்து உயிரினங்களையும் இசைய வைப்பது என்றும் சொல்லலாம். காதுக்கு உணவு இல்லாத போது தான் வயிற்றுக்கு உணவளிக்க வேண்டும் என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். உள்ளம் தொடும் இசையும் காதுக்கு உணவளிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இசையை வடமொழியில் நாதம் என்று அழைக்கிறார்கள். 

இசையை ரசிக்க கல்வியறிவு தேவை இல்லை. இசைஞானம் சற்று இருந்தாலே போதும். படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு விஷயம் இசைதான். இந்தியாவின் முக்கிய இசைகளாக கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை, கசல், கிராமிய இசை போன்றவை போற்றப்படுகின்றன. தென்னிந்திய இசை என்று உலக மக்களால் போற்றப்படும் கர்நாடக இசை உலகின் தொன்மையான இசைவடிவங்களில் ஒன்றாகும். கர்நாடக சங்கீதம் ராகம், தாளம் என்னுமிரண்டையும் அடிப்படையாகக் கொண்டது. ஸட்ஜம் என்பது ஸ - என்ற எழுத்தாலும், ரிஷபம் என்பது ரி- என்ற எழுத்தாலும், காந்தாரம் என்பது க- என்ற எழுத்தாலும், மத்திமம் என்பது  ம்- என்ற எழுத்தாலும்,பஞ்சமம் என்பது ப்- என்ற எழுத்தாலும், தைவதம் என்பது த - என்றஎழுத்தாலும் நிஷாதம் என்பது நி -என்ற எழுத்தாலும் குறிக்கப்படுகின்றன. இந்த ஏழு இசைகளும் கலந்து ஸ்வரம் என்று அழைக்கப்படுகின்றன. இவை சப்தஸ்வரங்கள் ஆகும்.

கர்நாடக இசையின் ஆதிமும்மூர்த்திகள், முத்துத்தாண்டவர், அருணாச்சலக் கவிராயர். மாரிமுத்துப் பிள்ளை என இம்மூன்று இசை அறிஞர்கள்தான்  சீர்காழியில் வாழ்ந்து கர்நாடக இசையை செழிப்பாக்கினர். கர்நாடக இசையின் உயிர் நாடியாக இவர்கள் இயற்றியப் பாடல்கள் விளங்குகிறது. இசை மும்மூர்த்திகளாக தியாகராஜ பாகவதர், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் என மூவரையும் குறிப்பிடுகிறார்கள். இவர்களுக்கு கர்நாடக  சங்கீதத்தில் வழிகாட்டியாக ஆதிமும்மூர்த்திகள் இருந்ததாகவும் சொல்லலாம். கர்நாடக இசையை முழுமையாக அறிய சங்கீதத்தில் ஞானம் இருக்க வேண்டும் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் ரசிப்பதற்கு ஆர்வமும், இசையில் ஈடுபாடும் இருந்தால் போதும் மனம் அதிலேயே லயித்துவிடும். நல்ல இசை நம் காதுகளுக்கு மட்டுமல்லாமல் நம் வேதனைகளை மறக்கச் செய்யும் மருந்தாகவும் அமைகிறது. இத்தகைய முக்கியத்துவம் பெற்ற இசைக்கென்று ஒரு தனிவிழா நடத்த வேண்டாமா... மார்கழி குளிரும்.. மனம் மயக்கும் சங்கீத கச்சேரியும் மறக்க முடியாத நிகழ்வாக நம் வாழ்வில் ஒன்றாக கலந்திருக்கிறது.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP