சூரியனை எப்போது தரிசனம் செய்ய கூடாது? 

மாலை நேரத்தில் சூரியனைப் பார்ப்பதும், சூரிய ஒளியை உடலில் ஏற்பதும், அழகை அதிகரிப்பதற்கு உதவும். அந்தி நேர சூரியன் அழகை அள்ளிக் கொடுப்பான் என்பது முன்னோர் வாக்கு.
 | 

சூரியனை எப்போது தரிசனம் செய்ய கூடாது? 

சூரியன், கண் கண்ட கடவுளாக கருதப்படுகிறார். சூரிய ஒளி தான் நமக்கு, அனைத்து சக்திகளையும்  கொடுக்கிறது. ஆனால், இந்த சூரியனையும் சில நேரங்களில் பார்க்க கூடாது என நம் முன்னோர்  கூறியுள்ளனர். 

காலை வேளையில் கதிரவனை தரிசிப்பதும், வணங்குவதும் நன்று. அதிகாலை சூரிய தரிசனம் ஆயுளை அதிகரிக்கும் என கூறியுள்ளனர். 

மாலை நேரத்தில் சூரியனைப் பார்ப்பதும், சூரிய ஒளியை உடலில் ஏற்பதும், அழகை அதிகரிப்பதற்கு உதவும். அந்தி நேர சூரியன் அழகை அள்ளிக் கொடுப்பான் என்பது முன்னோர் வாக்கு.
 
நீரில் பிரதிபலிக்கும் போதும், நடுபகலிலும் சூரியனைப் பார்க்கக் கூடாது. ஜொலித்து நிற்கும் சூரியனை, வெறும் கண்களால் காண்பது தீங்கு விளைவிக்கும். 

நடுப்பகலில் சூரியனைப் பார்ப்பதால், பார்வைக் கோளாறுகள் ஏற்பட வழியுண்டு. நீரில் பிரதிபலிக்கும் சூரியனை, மக்கள் பார்க்கக்கூடாது என்பதற்காக, சூரியன், வருண பகவானுடன் இணைந்திருக்கும் காட்சியை காணக்கூடாது என்று கூறி விலக்கினர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP