ஹோமங்கள் பலனளிக்க என்ன செய்ய வேண்டும் ?

பிரச்னைக்கு தீர்வு தரும் தெய்வ சக்திகளை உரிய முறையில் வழிபட்டு வணங்குவதன் மூலம் அவர்களை அக்னியில் எழுந்தருளச் செய்யலாம். மந்திர பூர்வமாக பூஜை செய்து அவர்களது அருளைப் பெறுவதற்குதான் ஹோமங்கள் நடத்தப்படுகிறது.
 | 

ஹோமங்கள் பலனளிக்க என்ன செய்ய வேண்டும் ?

பிரச்னைக்கு தீர்வு தரும் தெய்வ சக்திகளை உரிய முறையில்  வழிபட்டு வணங்குவதன் மூலம் அவர்களை அக்னியில் எழுந்தருளச் செய்யலாம்.  மந்திர பூர்வமாக பூஜை செய்து அவர்களது அருளைப் பெறுவதற்குதான் ஹோமங்கள் நடத்தப்படுகிறது.

முன்பெல்லாம் இறைவனுக்காகவே  பெரும்பாலான ஹோமங்கள் நடத்தப் பட்டன. உலக நன்மைக்காக, மழை வேண்டி, மக்கள் அமைதியாக வாழ,இயற்கை சீற்றம் கொள்ளாமல் இருக்க.... இப்படி பொதுவான ஹோமங்களை   மக்கள் ஒன்று கூடி நடத்தினார்கள். நாளடைவில் தனிப்பட்ட  பிரச்னைகளைத் தீர்க்கவும் தங்கள் இல்லங்களிலேயே ஹோமங்கள் நடத்த தொடங்கினார்கள்.

சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள் தங்கள் பாடல்களில்  ஹோமங்களை பற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். தேவர்களும்,  மன்னர்களும் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள  ஹோமங்களின் மூலம் கடவுளின் அருளை பெற்றார்கள். அதர்வண வேதத்தில்  ஹோமங்கள் அமைதிதரும் சாந்திகம் என்றும், விருப்பங் களை நிறைவேற்றும் பெளஷ்திகம் என்றும் எதிரிகளை ஒழிக்கும் ஆபிசாரிகம் என்றும் மூன்று வகையாக பிரித்துள்ளது. யஜூர் வேதத்தில் முப்பது வகையான ஹோமங்களை பற்றிய குறிப்புகள் இருக்கிறது.

நமது  முன்னோர்களின் வழிபாடுகளிலும் இயற்கையே முதன்மையாக இருக்கிறது.  அவற்றிலும் சூரிய வழிபாடு பிரதானமாக இருந்தது. காரணம் சூரி யன் சக்திவாய்ந்த கடவுளாக கருதப்பட்டார். தங்களைக் காத்துக்கொள்ளவும், தங்களை பாதுகாக்கவும்  விளங்கும் கடவுளாக  நெருப்பை கக்கும் சூரியனை வழிபட நெருப்பை குண்டலத்தை ஏற்படுத்தி வழிபட்டார்கள் முன்னோர்கள்.

ஹோமத்தின் மூலம் தெய்வங்களை திருப்திபடுத்தலாம் என்பது முன்னோர் களின் கணிப்பு. செய்யும் ஹோமங்களுக்கு ஏற்பன் பலவகையான சமித்துகள், மூலிகைகள், பழங்கள், தானியங்கள், உலர் பொருள்கள், வாசனை திரவியங்கள் ஆடைகள் அக்னிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. நெய் அனைத்து ஹோமங்களை யும் பலப்படுத்துகிறது. நட்சத்திரங்கள், ராசிகளுக்கேற்ப ஹோமங்களில் பொருள் கள் இரையாக்கப்படுகின்றன. 

ஒவ்வொரு  தெய்வத்துக்கும் தனிப்பட்ட முறையில் மந்திரங்கள் அதாவது மூலமந்திரம், வேத மந்திரம், காயத்ரி மந்திரம், பிரார்த்தனை மந்திரங்கள் உண்டு. முறையான சமித்துகள் கொண்டு செய்யபப்டும் ஹோமங்கள் மட்டுமே முழு மையான பலன் தரும்.  மந்திரங்களை உச்சரிக்கும் குருமார்கள்  100%  மந்திரத் தில் கவனம் வைத்து ஹோம குண்டலத்தில் உட்கார வேண்டும். இப்படி செய்யும்  ஹோமங்களே பலன் அளிக்கும். 

விஞ்ஞான பூர்வமாக ஹோமத்தீயினால் வரும் புகையை சுவாசிக்கும் மனிதர்கள்  உடலில் நோய் எதிர்ப்புசக்தியை பெறுகிறார்கள். உடலில் இருக்கும் கிருமிகளை ஹோமத்தில் இரையாக்கப்படும் மூலிகை கலந்த சமித்துகள் தருகிறது. ஹோமம் நடக்கும் இடத்தைச் சுற்றி குறிப்பிட்ட தூரத்தில் உள்ள நீர் நிலைகள், நச்சு நிறைந்த ஆக்ஸிஜன்களை சுத்தப்படுத்தி அந்த இடத்தையே ஆரோக்யமாக வைக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

கணபதி ஹோமமே என்றாலும் முறையாக முழு கவனத்துடன் செய்யுங்கள். நிச்சயமாக பலன் பெறுவீர்கள்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP