எந்த ஹோரையில் என்ன வேலை துவங்கலாம்?

நினைத்த காரியம் எந்தத் தடங்கலும் இல்லாமல் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதே நம் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பாகும். அதனால்தான் அதை நினைத்தே கவலைப்படுவதும் இயல்பாகவே அமைந்துவிடுகிறது.
 | 

எந்த ஹோரையில் என்ன வேலை துவங்கலாம்?

செவ்வாய் ஹோரையில் கடைசி அரைமணிநேரத்தில் நாம் தரவேண்டிய கடனின் ஒருபகுதியை திருப்பிதந்தால் நம்முடைய கடன்கள் விரைவில் தீரும். நினைத்த காரியம் எந்தத் தடங்கலும் இல்லாமல் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதே நம் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பாகும். அதனால்தான் அதை நினைத்தே கவலைப்படுவதும் இயல்பாகவே அமைந்துவிடுகிறது. அரசு தொடர்பான செயல்களைத் தொடங்குவதாக இருந்தால் கூடிய வரை சூரிய ஹோரையில் தொடங்குவது நல்லது. நிலம் தொடர்பான விஷயம்வீடு நிலம் வாங்குவது என்றால் செவ்வாய் ஹோரைகளில் செய்வது நல்ல பலனைத் தரும். அதே நேரம் கடன் வாங்குவதை மட்டும் இந்த ஹோரையில் செய்யக்கூடாது அதற்கு பதிலாக செவ்வாய்  ஹோரையில் கடைசி அரைமணிநேரத்தில் நாம் தரவேண்டிய கடனின் ஒரு பகுதியைத் திருப்பி தந்தால் நம்முடைய கடன்கள் விரைவில் தீரும். பத்திரப்பதிவு ஒரு விஷயத்தைத் தீர்மானிப்பது போன்று இறுதி முடிவு எடுக்கும் பல முக்கிய விஷயங்களை சனி ஹோரைகளில் செய்யலாம். அதே சமயம் ஆரோக்ய குறைபாட்டினால் மருத்துவமனைக்கு செல்வது, மருந்து வாங்குவது போன்ற செயல்களை இந்த ஹோரையில் தொடங்கினால் அது தொடர்ந்து கொண்டெ இருக்கும்.

திருமணம் தொடர்பான பேச்சு, பொருத்தம் பார்த்தால் போன்ற சுப காரியங்களை குரு ஹோரையில் ஆரம்பிப்பது நன்மையைத் தரும். அதே சமயம் பெண் பார்க்கும் படலம் போன்ற சுப நிகழ்வுகள் சுக்கிர ஹோரையில் அமர்ந்தால் அவர்களுக்குள் நல்ல அந்நியோன்யம் ஏற்படும். நாள் பார்த்து  எல்லா செயலையும் செய்வது என்பது சிரமமானது.உதாரணமாக அரசாங்கம் தொடர்பான செயல்களை ஞாயிற்றுக்கிழமைகளில் ஈடுபடலாம். ஆனால் அன்று விடுமுறை நாள். இப்படி பல்வேறு விஷயங்களை  எண்ணி மறக்காமல் ஹோரைகளைப் பார்த்து செய்வது சுலபமான வழி. பொதுவாக குருஹோரை, சந்திர ஹோரை, புதன் ஹோரை, சுக்கிர ஹோரை இந்த நான்கிலும் எந்த செயல்களையும் மேற்கொள்ளலாம். இன்னொரு சுலபமான வழி வீட்டிலேயே செய்யலாம். பசுவும் கன்றும் சேர்ந்து இருப்பது போல கோலம் போட வேண்டும். முக்கியமாக அரிசி  மாவில் போட வேண்டும். வீட்டின் பூஜையறையில் அல்லது சாமி படத்தின் முன்னால் கோலமிட்டு விளக்கேற்றி மகாலஷ்மி அல்லது நமது குலதெய்வத்தை அர்ச்சித்து வழிபடலாம். மல்லிகை முல்லை போன்ற வாசனையுள்ள பூக்களைப் பூஜைக்கு பயன்படுத்த வேண்டும்.அல்லது குங்குமத்தால் அர்ச்சனை செய்யலாம். அதை நெற்றியில் இட்டுக்கொள்வது சிறந்த ரட்சையாக அமையும். கோலம் காலில் மிதிப்படக்கூடாது. இந்தப் பூஜையைத் தொடர்ந்து 45 நாட்கள் செய்தால்  நீங்கள் எதிர்பார்த்த விஷயம் நிச்சயம் கைகூடும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP