"அமா சோமவாரம்" என்றால் என்ன?

திங்கட்கிழமையை சோமவாரம் என்று அழைப்பார்கள். திங்கட்கிழமை வரும் அமாவாசையை நம் முன்னோர்களும், ஆன்றோர்களும், சான்றோர்களும் "அமா சோமவாரம்" என்று அழைத்தார்கள்.
 | 

"அமா சோமவாரம்" என்றால் என்ன?

திங்கட்கிழமையை சோமவாரம் என்று அழைப்பார்கள். திங்கட்கிழமை வரும் அமாவாசையை நம் முன்னோர்களும், ஆன்றோர்களும், சான்றோர்களும் "அமா சோமவாரம்" என்று அழைத்தார்கள்.

அன்றைய தினம் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள், காலையில் எழுந்து நீராடி, காலை 6 - மணியளவில் அரசமரத்தின் அடியில் வீற்றிருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு சென்று, 2 நெய் தீபம் ஏற்றி, விநாயகருக்கு ஒரு குடம் தண்ணீர் அபிஷேகம் செய்து, பவிநாயகருக்கு புதிய வஸ்திரம் கட்டி, சந்தனம், குங்கும பொட்டு வைத்து, அருகம்புல் வைத்து, ஒரு தேங்காய் உடைத்து, 2 வெற்றிலை பாக்கு மற்றும் வாழைப்பழம் வைத்து  ஊதுபத்தி மற்றும் கற்பூரம் காட்டி கீழே குறிப்பிட்ட மந்திரத்தை கூறி, தம்பதி சமேதமாக, அரசமரத்தின் கீழே வீற்றிருக்கும் விநாயகரையும் சேர்த்து, 108 முறை வலம் வரவும்..

மூலதோ ப்ரம்ம ரூபாய, மத்யதோ விஷ்ணு ரூபிணே
அக்ரத சிவ ரூபாய, வ்ருக்ஷ ராஜாயதே நமஹ....

இந்த மந்திரம் கூற இயலாதவர்கள்
‘ஓம் நமச்சிவாய அல்லது ஓம் நமோ நாராயணாய’ என்று கூறி மரத்தை 108 முறை வலம் வரவும்.
அமாவாசை தினத்தில், அரசமரத்திற்கு ஆகர்ஷண சக்தி அதிகம.திங்கட்கிழமை வரும் அமாவாசை தினத்தன்று, அரசமரம் அதன் ஆகர்ஷண சக்தியை, 10 ல் 5 பங்கு சதவீதம் வெளியிடுகிறது.

மருத்துவ ரீதியாக ஒரு சில பெண்களுக்கு, இயற்கையிலேயே கர்ப்பபை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருப்பதாலும் கர்ப்பத்தை தாங்கிக்கொள்ளும் சக்தி ஒரு சில பெண்களுக்கு இல்லாததாலும், அவர்கள் முற்கூறிய முறையில் வழிபாடு செய்தால், அவர்களுக்கு புத்திர பாக்கியம்  கிடைக்கும்.

மேலும், புத்திரபாக்கியம் இல்லாத ஆண்கள், இந்த மரத்தை வலம் வரும் போது அவர்களுக்கு ஏற்படும் விந்தணுக்கள் சம்பந்தப்பட்ட குறைபாடுகள் சரியாகும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP