அவிதவா நவமியன்று சுமங்கலிகளை வழிபடுவோம்!

மஹாளய பட்சத்தில் நவமி நிதியில் சுமங்கலி வழிபாடு செய்தால், வீட்டில், மஹாலட்சுமி நித்யம் வாசம் செய்யும் அருள் கிடைக்கும். இன்று நவமி திதி இன்று இதை செய்ய முடியாதவர்கள், அம்மாவாசை அன்றோ, வரும் நவராத்திரியில் ஓர் நாளோ செய்யலாம்.
 | 

அவிதவா நவமியன்று சுமங்கலிகளை வழிபடுவோம்!

மஹாளய பட்சத்தின், பதினைந்து நாட்களும் மறைந்த முன்னோர்கள், நம் வீடு தேடி வருவார்கள் என்பது நம்பிக்கை. மஹாளய பட்சத்தின், 9ம் நாள், அவிதவா நவமி தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. 
இந்த நாளில், நம் வீட்டில் சுமங்கலியாக மரணம் அடைந்த முன்னோரை நினைத்து, வழிபாடு செய்வது சிறப்பு.

சுமங்கலி வழிபாடு, திதி செய்வதற்கு சமமாக கருதப்படுகிறது. குடும்பத்தில், சுமங்கலியாக இறந்த பெண்களை நினைத்து செய்வது தான், சுமங்கலி வழிபாடு.திருமணமாகி, பல ஆண்டுகள் வாழ்ந்து, பூவும், குங்குமத்துடனும் இறந்த பெண்மணியருக்கு, அவர்களின் திதிக்கு மறுநாள், சுமங்கலி வழிபாடு செய்ய வேண்டியது அவசியம். 

சுமங்கலி வழிபாட்டை, ஒற்றைப் படையில் பெண்களை வைத்து செய்ய வேண்டும். வீட்டுப் பெண்கள், அதாவது, இதைச் செய்யும் பெண்ணின் நாத்தனார், மகள் போன்ற உறவுகளை, முக்கியமாக உட்கார வைக்க வேண்டும். சொந்தமல்லாதவேறு சுமங்கலிப் பெண்கள் யாராவதும் உட்காரலாம். ஏழு அல்லது எட்டு வயது பெண் குழந்தை, சுமங்கலிகளுடன் உட்கார வைப்பது சிறப்பு. . 

சுமங்கலி இலையின் படையலைச் சேர்த்து ஐந்து பேர், அல்லது ஒன்பது பேரை அழைத்துச் சாப்பாடு போட வேண்டும்.வழிபாட்டில் உட்காரும் .பெண்கள் சாப்பிட்டு முடித்த பின், அவர்களுக்கு  நலங்கு இட்டு நமஸ்கரிக்க வேண்டும். 

பின்னர் தாம்பூலத்தில், மஞ்சள், குங்குமம், சீப்பு, கண்ணாடி ஆகியவற்றை வழங்க வேண்டும். முடிந்தவர்கள், புடவை, அல்லது ரவிக்கை  துணி வழங்குவது சிறப்பு. மருதாணி,போன்ற மங்கலப்  பொருட்களை வழங்குவதும் சிறப்பு. 

மஹாளய பட்சத்தில் நவமி நிதியில் சுமங்கலி வழிபாடு  செய்தால், வீட்டில், மஹாலட்சுமி நித்யம் வாசம் செய்யும் அருள் கிடைக்கும். இன்று நவமி திதி இன்று இதை செய்ய முடியாதவர்கள், அம்மாவாசை அன்றோ, வரும் நவராத்திரியில் ஓர் நாளோ செய்யலாம். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP