துலா ஸ்நானம் செய்தால் கோடி புண்ணியம்!

துலா மாதத்தில், அதாவது ஐப்பசி மாதத்தில், விடியல் நேரத்திலிருந்து இரண்டு மணி நேரம், காவிரியில் அனைத்து புனித நதிகளும் சங்கமம் ஆகின்றன. எனவே துலா ஸ்நானம், காவிரியில் செய்வது மிக உத்தமம்.
 | 

துலா ஸ்நானம் செய்தால் கோடி புண்ணியம்!

நதிகளை புண்ய தாய் வடிவில் உருவகப்படுத்தி வணங்கி வழிபடுவது ஹிந்துக்களின் வழக்கம். அதில், முக்கியமானதாக எழு நதிகளை குறிப்பிடுவதுண்டு. கங்கை, யமுனை, பிரம்புத்ரா, நர்மதா, கோதாவரி, காவிரி, சரஸ்வதி ஆகிய ஏழும் சிறப்புற்றது.
 
கங்கையில் நீராடுவதன் முக்கியத்துவம் பற்றி  நிறைய கேட்டிருக்கிறோம். ஆனால் பலரும் அறியாத பெரும்சிறப்பு, காவிரிக்கும் உள்ளது. நரகாசுரனை வதம் செய்த கண்ணனுக்கு, வீர-ஹத்தி (வீரனை கொன்ற பாபம்) தோஷம் பீடித்தது. அதற்கு பரிகாரமாக , துலா மாதமான ஐப்பசி மாதத்தில், காவிரியில் நீராடி பாபத்தை போக்கினார். 

துலா மாதத்தில், அதாவது ஐப்பசி மாதத்தில், விடியல் நேரத்திலிருந்து இரண்டு மணி நேரம், காவிரியில் அனைத்து புனித நதிகளும் சங்கமம் ஆகின்றன. எனவே துலா ஸ்நானம், காவிரியில் செய்வது மிக உத்தமம்.

கங்கையில் மூன்று நாட்களும், யமுனையில், ஐந்து நாட்களும் குளித்தால் தான், விஷ்ணு லோகம் கிட்டும். ஆனால், காவிரியில், துலா மாதத்தில் ஸ்நானம் செய்தாலே போதும், விஷ்ணு உலகம் கிடைக்கும் என, காவிரி புராணத்தில் கூறப்பட்டுள்ளது. 

ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறைக் காவிரியில் நீராடுவது மிக்க சிறப்பு., குறிப்பாக, துலா மாதத்தில் முதல், திருச்சிமாவட்டம், திருப்பராய்த்துறையிலும், கடைசி நாள், மாயவரத்திலும், காவிரியில் நீராடுவது சிறப்பு. 

துலா மாதத்தில், ஸ்ரீரங்கம், அம்மா மண்டபம் பகுதியில் ஓடும் காவிரியில் நீராடி, ரங்கதாத பெருமானை தரிசித்தால், எல்லா பேறும் கிடைக்கும்.
துலா ஸ்நான மகிமைகள் பற்றி நாளையும் பார்ப்போம்.
 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP