நாளை வெள்ளிக்கிழமை ...லஷ்மி கடாட்சம் கிடைக்க இதை செய்யுங்கள்

கண்களைத் திறந்ததும் உள்ளங்கையைத் தேய்த்து கண்களை ஒற்றியபடி கண் விழிக்க வேண்டும். உள்ளங்கையில் மஹாலஷ்மி வாசம் செய்வதாக ஐதிகம்.
 | 

நாளை வெள்ளிக்கிழமை ...லஷ்மி கடாட்சம் கிடைக்க இதை செய்யுங்கள்

வீட்டில் சமையலறையில் மஹாலஷ்மி வாசம் செய்கிறாள். அதனால்  உங்கள் சமையலறையை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள்.  பஞ்சம் என்னும் வார்த்தை உங்களை அணுகாது.

கண்களைத் திறந்ததும் உள்ளங்கையைத் தேய்த்து கண்களை ஒற்றியபடி கண் விழிக்க வேண்டும். உள்ளங்கையில் மஹாலஷ்மி வாசம் செய்வதாக ஐதிகம். 

காலையில் எழுந்ததும் புறவாசல் கதவை திறந்த பிறகே வாயிற் கதவை திறக்க வேண்டும். அப்போதுதான் மூதேவி வெளியே சென்று ஸ்ரீ தேவி வீட்டுக்குள் அடியெடுத்து வைப்பாள்.

மஞ்சள், சந்தனம், தீபம், எண்ணெய், பசு, யானை, பால், தயிர், நெய்  இவற்றில் மஷாலஷ்மி வாசம் செய்கிறாள். அதனால் இரவு நேரங்களில் இவற்றை தானம் கொடுப்பதோ பெறுவதோ  கண்டிப்பாக கூடாது. பாற்கடலில் அமிலம் கடைந்த போது  பல பொருள்கள் வந்த பிறகே லஷ்மி வந்தாள். இதில் முக்கியமாக  14 பொருள்களை மட்டும் குறிப்பிட்டிருக்கிறார்கள். அவற்றில் பாசிப்பயறு, உளுந்து போன்ற தானியங்களும் அடக்கம்.அதனால் தான் கோயில் பிரசாதங்களில் பொங்கலும், வடையும் பிரத்யேகமாக இருக்கும். 

நாளை வெள்ளிக்கிழமை ...லஷ்மி கடாட்சம் கிடைக்க இதை செய்யுங்கள்

கடலில் இருந்து பெறப்படுவதால் உப்பில் லஷ்மி வாசம் செய்கிறாள் என்கின்றனர் நமது முன்னோர்கள்.  வெள்ளிக்கிழமைகளில் உப்பு பாத்திரங்களைக் கழுவி கவிழ்த்து வைக்கக் கூடாது என்று அதனால் தான் சொல்கிறார்கள். வெள்ளிக்கிழமைகளில் உப்பு வாங்கினால் மஹாலஷ்மியும் மகிழ்ச்சியுடன் வீட்டிற்குள் வருவாள். 

மனத்தூய்மையும், உடல் தூய்மையும் கொண்ட மனம் லஷ்மிக்கு விருப்பமானது.  அதிகாலையில் பிரம்மமுகூர்த்தத நேரத்துக்குள் நீராடி வாசலில் அகல் விளக்கேற்றி அன்றைய பணிகளில் ஈடுபடுங்கள். மஹாலஷ்மி மகிழ்ச்சியாக தங்கள் இல்லத்தில் வசிப்பாள். வாரம் ஒருமுறையாவது கோயிலுக்கு செல்லுங்கள். பிடித்த கடவுளை ஒருமுகமாக வணங்குங்கள். இயன்றபோது இயன்றதை தானம் செய்யுங்கள்.

உணவு பரிமாறு போது உப்பு, நெய், சாதம் போன்றவற்றை வெறும் கைகளால் பரிமாறக்கூடாது. இரவு நேரங்களில்  சாப்பிட்டு முடித்ததும் சோற்றுப்பானையைக் கழுவி கவிழ்த்து வைக்காமல்  சில பருக்கைகள் வைத்து தண்ணீர்  ஊற்றி வைக்கவும். இரவில் பித்ருக்கள் பசியாற வருவார்கள். காலிப் பாத்திரம் அவர்களை  சபிக்க செய்துவிடும்.   

நாளை வெள்ளிக்கிழமை ...லஷ்மி கடாட்சம் கிடைக்க இதை செய்யுங்கள்

குடும்பத்தில் ஏற்படும் மனக்கசப்புகளை பெரிய அளவில் மாற்றாதீர்கள். விவாதங்களும், வீண் சண்டைகளும் பெரிய சச்சரவுகளும் உள்ள இடத்தை  அன்பே உருவான லஷ்மி விரும்பமாட்டாள். 

விளக்ககேற்றும் போது கூந்தலின் நுனியை முடித்து வையுங்கள். அப்போது மட்டுமல்ல எப்போதும் கூந்தல்  விரிந்திருக்க கூடாது. தலைவிரி கோலம்  குடும்பத்துக்கு ஆகாது.  மாலை 6 மணிக்கு மேல்  தலைவாருவது, பேன் பார்ப்பது வீட்டிலிருக்கும் லஷ்மியை வெளியேற்றி, மூதேவையை அழைப்பதற்குச் சமம்.

மாலை நேரங்களில் விளக்கு வைத்த பிறகு  வீட்டிற்குள் இல்லை என்ற சொல்லையும், வறுமையையும் பயன்படுத்தாதீர்கள். தரித்திரம் வந்து சேரும்.

நமது முன்னோர்கள் செய்த ,சொன்ன அனைத்தும் நல்வழிக்கான பாதைதான் என்பதால் விதண்டாவாதம் செய்யாமல் அனைத்து நாள் கிழமைகளில் அதற்குரிய கடவுளை வழிபட்டு உங்களால் இயன்றதை தானம் செய்யுங்கள். கடவுள் எந்த ரூபத்திலும் இருப்பார் என்பதை உணருங்கள்.

நாளை வெள்ளிக்கிழமை ...லஷ்மி கடாட்சம் கிடைக்க இதை செய்யுங்கள்

கடவுள்களை வணங்குவது போலவே பித்ரு தோஷம் தாக்காமல் இருக்க அவர்களுக்கு செய்ய வேண்டிய கடன்களை அவ்வப்போது செய்து உரிய காலத்தில் தர்ப்பணம் செய்து வணங்கி வாருங்கள். தெய்வத்தின் துணையோடு அவர்களோடு ஆசியும் இணைந்து நம்மை காக்கும்.

எப்போதும் நல்லவற்றை மட்டுமே நினைத்து நல்லதை மட்டுமே பேசுங்கள். நம்மைச் சுற்றியிருக்கும் தேவதைகள் நமது எண்ணங்களையும் வார்த்தைகளையும் உண்மையாக்குவார்கள்.

கடவுள்களுக்கு உரிய ஸ்லோகமும், மந்திரமும் உச்சரிக்கவில்லையென்றாலும் அனைத்து கடவுளுக்கும் பிரியமான ஓம் என்னும் மந்திரத்தை கவனத்துடன் உச்சரித்தாலே போதுமானது. இதற்கென   தனியாக நேரம் ஒதுக்க முடியவில்லையென்றாலும் கிடைக்கும் நேரத்தில் பிடித்த கடவுளை நினைத்து மனதில் சொல்லலாம். 

 இவை அனைத்தும் உங்களை வறுத்திக்கொண்டு செய்ய வேண்டிய கடினமான வேலையோ அல்லது உண்ணாவிரதமிருந்து கடுந்தவம் புரியவோ தேவையில்லை. சாதாரணமாக செய்ய வேண்டியதுதான். ஆனால் கவனத்துடன் செய்ய வேண்டியது. எதிலும் ஒரு நேர்த்தியும், தூய்மையும் இருந்தால் வீட்டில் லஷ்மி வாசம் செய்வாள். எந்த ஒரு வீட்டில் லஷ்மி வாசம் செய்கிறாளோ அங்கு தரித்திரத்துக்கும் வறுமைக்கும் இடமிருக்காது. அனைவரும் செய்யக்கூடிய எளிய குறிப்புகள் தான் இவை.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP