இன்று தர்ப்பணம் கொடுத்தால் வீட்டில் துர்மரணம் ஏற்படாது!

அகால மரணம் அடைந்தவர்களுக்கு, மஹாளய பட்சத்தில், தினமும் தர்ப்பணம் கொடுக்க தேவையில்லை. சதுர்த்தசி தினத்தில், கட்டாயம், தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அவர்களை நினைத்து அன்னதானம் செய்ய வேண்டும். ஏழைகளுக்கு உடைகள் வாங்கி கொடுக்கலாம். இப்படி செய்தால், குடும்பத்தில், துர்மரணம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது .
 | 

இன்று தர்ப்பணம் கொடுத்தால் வீட்டில் துர்மரணம் ஏற்படாது!

மஹாளய பட்சத்தில் இன்று, 14வது நாள். சதுர்த்தசி திதியான. இந்த நாள், சஸ்திரஹத சதுர்த்தி என அழைக்கப்படுகிறது.
மஹாளய பட்சத்தில், 15 நாட்களும் முன்னோருக்கு தர்ப்பணம் செய்வது நல்லது.  எனினும், குறிப்பிட்ட நாளில் செய்தால், அதற்கான பலனை பெறலாம்.

அந்த வகையில், சஸ்திரஹத சதுர்த்தி தினமான இன்று, தர்ப்பணம்  செய்தால், வீட்டில் துர்மரணம் ஏற்படாமல் தடுக்கலாம். 
ஒவ்வொரு ஜீவனும் பிறக்கும் போதே, அதன் ஆயுளை இறைவன் முடிவு செய்துவிடுகிறான்.

ஆனால், அந்த விதியை மாற்றி, சிலர், விபத்தால், மரணம் அடைகின்றனர். சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். சிலர் மற்றவர்களால் கொலை செய்யப்படுகின்றனர்.இப்படி துர்மரணம் அடைந்தவர்கள் முக்திபெற, இன்று தர்ப்பணம் செய்வது சிறப்பு. 

அகால மரணம் அடைந்தவர்களுக்கு, மஹாளய பட்சத்தில், தினமும் தர்ப்பணம் கொடுக்க தேவையில்லை. சதுர்த்தசி தினத்தில்,  கட்டாயம், தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அவர்களை நினைத்து அன்னதானம் செய்ய வேண்டும். ஏழைகளுக்கு உடைகள் வாங்கி கொடுக்கலாம். இப்படி செய்தால், குடும்பத்தில், துர்மரணம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது .

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP