குரு பகவான் அமர்ந்த இந்த ஆலமரத்தை 108 முறை வலம் வந்து வணங்குங்கள் குறைகள் தீரும்.

ஒருமுறை கயிலாயத்தில் குரு தட்சிணாமூர்த்தியாக, சனகாதி முனிவர்களுக்கு அஷ்டமா சித்திகளை போதித்துக் கொண்டிருந்தார் சிவபெருமான். இந்த காட்சியைப் பார்த்த ஆறு பெண்கள், தாங்களும் சிவபெருமானிடம் இருந்து அஷ்டமா சித்திகள் குறித்து உபதேசம் பெற விரும்பினர்.
 | 

குரு பகவான் அமர்ந்த இந்த ஆலமரத்தை 108 முறை வலம் வந்து வணங்குங்கள் குறைகள் தீரும்.

ஒருமுறை கயிலாயத்தில் குரு தட்சிணாமூர்த்தியாக, சனகாதி முனிவர்களுக்கு அஷ்டமா சித்திகளை போதித்துக் கொண்டிருந்தார் சிவபெருமான்.இந்த காட்சியைப் பார்த்த  ஆறு பெண்கள், தாங்களும் சிவபெருமானிடம் இருந்து அஷ்டமா சித்திகள் குறித்து உபதேசம் பெற விரும்பினர். அந்த ஆறு பெண்கள் வேறு எவரும் இல்லை, சரவணப் பொய்கையில், முருகப்பெருமானுக்குப் பாலூட்டி, சீராட்டி வளர்த்த அதே கார்த்திகைப் பெண்களான அம்பா, துலா, நிதர்த்தளி, அப்ரகேந்தி, மேகேந்தி, வர்த்யேந்தி ஆகியோர் தான். இந்த ஆறு பேரும் சிவபெருமானிடம் சென்று, அவரைப் பணிவுடன் வணங்கி நின்றனர். பின்னர் சிவபெருமானிடம் தங்களுக்கு, அஷ்டமா சித்திகளை அருள வேண்டினர்.இந்த வேண்டுதலைக்கேட்ட  சிவபெருமான், ‘நீங்கள் உமாதேவியிடம் பிரார்த்தியுங்கள். அவர் உங்களுக்கு அருள்புரிவாள்’ என்றார் பரமன்.ஆனால், அன்னை உமாதேவியை வணங்கிட அந்த ஆறு பேரின் கர்வம் இடம் கொடுக்கவில்லை. ‘

குரு பகவான் அமர்ந்த இந்த ஆலமரத்தை 108 முறை வலம் வந்து வணங்குங்கள் குறைகள் தீரும்.

சிவபெருமானே நேரடி உபதேசம் நல்க வேண்டும்’ என்று உமையவளைத் தவிர்த்தனர். அதனால் அவர்கள் உமாதேவியின்  சாபத்துக்கு ஆளாயினர். இந்த சாபத்தினால்  ஒரு கதம்பவனத்தில் ஆல மரத்தடியில் கல்லாகிப் போனார்கள்.கல்லானாலும், மனம் முழுக்க சிவ சிந்தையுடன், அவர்கள் ஆறு பேரும் தவத்தில் ஈடுபட்டனர். ஆண்டுகள் ஆயிரங்களில் கடந்து விட்டன. குரு வடிவாக அந்த மரத்தடிக்கு வந்த சிவனார், ஆலம் பழங்களால் மூடப்பட்டுக் கிடந்த கற்களின் அருகில் அமர்ந்தார். கற்கள் உயிர் பெற்றன. சுய உரு பெற்ற கார்த்திகைப் பெண்கள், சிவனாரை வணங்கினர்.எங்களுக்கு சாப விமோசனம் அளித்த சிவபெருமானே, அஷ்டமா சித்திகளையும் உபதேசித்து எங்கள் விருப்பத்தை நிறைவேற்றி அருள வேண்டும் என்று வேண்டினர். அதன்படியே அந்த ஆல மரத்தடியில் கார்த்திகைப் பெண்களுக்கு அஷ்டமா சித்திகளையும் அருளினார் சிவபெருமான்.இப்படி கார்த்திகை பெண்கள் அஷ்டமா சித்திகளை இறைவன் ஈசனிடம் பெற்ற இடமே பட்டமங்கலம்.

கதம்ப வன புராணம், திருவிளையாடல் புராணம் ஆகிய  நூல்கள்  இந்தத் தலத்தின் வரலாற்றை பதிவு செய்துள்ளது.பட்டமங்கலத்தில் கார்த்திகைப் பெண்கள் ஆறு பேரும், உமையவளையும் வழிபட்டு மன்னிப்பு வேண்டியதுடன் , ஈசனிடம் இன்னொரு  விண்ணப்பத்தையும் வைத்தார்கள்.தாங்கள் இருக்கும்  இந்த இடத்திலேயே குடி கொண்டு, இங்கு வரும் பக்தர்களுக்கு வரம் தந்து அருள வேண்டும் என்பதே அந்த வேண்டுகோள்.அந்த வேண்டுகோளை ஏற்ற ஈசன் அப்படியே  அருள் செய்தார்.கார்த்திகை பெண்கள் சாபவிமோசனம் பெற்ற இந்தத் தலத்துக்கு வந்து வழிபடும் பக்தர்களது வேண்டுதல்கள் குறைவின்றி நிறைவேறுகின்றன!

குரு பகவான் அமர்ந்த இந்த ஆலமரத்தை 108 முறை வலம் வந்து வணங்குங்கள் குறைகள் தீரும்.

இறைவனும் இறைவியும் மீனாட்சி சுந்தரேஸ்வரராக கோவில் கொண்டிருக்கும் இந்த திருத் தலத்தில், குரு தட்சிணாமூர்த்தியாகவும் அருள்பாலிக்கிறார், ஆதிசிவன். கிழக்குப் பார்த்த ஆலயம்,குரு தட்சிணாமூர்த்தியும் கிழக்கு நோக்கி இருப்பது, இந்த ஆலயத்தின் மிகச்சிறப்பு.பட்டமங்கலத்துக்கு வந்து, அஷ்டமா சித்தி குரு பகவானையும், அவர் அமர்ந்தருளிய ஆலமரத்தையும் 108 முறை வலம் வந்து வணங்கினால் எண்ணற்ற பலன்கள் கைகூடும். பூப்படைதல் பிரச்சினை, தீராத நோய் ஆகியன நீங்கிட, திருமணத் தடை நீங்கிட பட்டமங்கல திருத்தலம்  நமக்கு வெளிச்சம் தரும்.கார்த்திகை பெண்களின் சாபம் தீர்த்த தலமான பட்டமங்கலத்தில் சனகாதி முனிவர்களுக்கு அஷ்டமா சித்திகளை அருளிய குரு  பகவானை தரிசிக்க நமது குறைகள் தீரும்.

பட்டமங்கலம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP