இப்படிதான் சாப்பிட வேண்டும்!

கைகளால் உணவை அள்ளி உண்ணும்போது ஜீரண சக்தியை அதிகரிக்கும். உணவைக் கைகளால் உண்ணும்போது உடலின் நரம்புகள், நாம் உணவு உண்கிறோம் என்ற செய்தியை மூளைக்கு அனுப்புகிறது. இதனால், ஜீரணம் மிக எளிதாக நடை பெறுகிறது.
 | 

இப்படிதான் சாப்பிட வேண்டும்!

உணவே நம் உடலை வளர்க்கிறது. நம் உயிரைக் காக்கிறது. அதனால்தான் திருமூலர், ‘உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என கூறினார். .காலை, இரவு என்று இரண்டு வேளைகள் உண்பதை மட்டுமே இல்லறத்தாருக்கான நியதியாக ஹிந்து மதம் கூறுகிறது. ஒருவேளை உண்பவர் 'யோகி' என்றும், இருவேளை உண்பவர் 'போகி' (உல்லாசி) என்றும் மூன்று வேளை உண்பவர் 'ரோகி' (வியாதியாளர்) என்றும் சொல்கிறது. எனவே, மூன்று வேளை உணவு என்பது பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட பழக்கம்தான்.

ஒவ்வொரு வேளை உணவைச் சாப்பிடும் முன்பும். ஆண்டவனை வணங்கிய பிறகே உண்ணவேண்டும். அந்த உணவை தந்ததற்கு நன்றியும், தான் உண்ணும் உணவு, ஜீரணமாகி, நல்ல உணர்வைத் தர வேண்டும் என்றும் வேண்டிக்கொள்ள வேண்டும். 

சுத்தமான எளிய உணவை ஒருவர் கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட வேண்டும். கைகளால்தான் உண்ணவேண்டும். நன்கு சுத்தம் செய்த கரத்தால் உண்பதே, பல நோய்களை வரவிடாமல் தடுக்கும். 

கைகளால் உணவை அள்ளி உண்ணும்போது ஜீரண சக்தியை அதிகரிக்கும். உணவைக் கைகளால் உண்ணும்போது உடலின் நரம்புகள், நாம் உணவு உண்கிறோம் என்ற செய்தியை மூளைக்கு அனுப்புகிறது. இதனால், ஜீரணம் மிக எளிதாக நடை பெறுகிறது. 

இதை  ஸ்பூனும் குச்சியும் தருவதில்லை. ஐந்து விரல்களையும் குவித்து உண்பது ஒரு சூட்சும முத்திரை நிலை. இதனால் ஜீரண மண்டலம் துரிதமாகச் செயல்படுகிறது.

Newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP