ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது!

தினமும் விஷ்ணு சகஸ்ரநாமத்தில் வரும். "ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே" என்ற இந்த சுலோகத்தை தினமும் குறைந்தது, 11 முறை சொல்லுங்கள், வீட்டில் சுபிட்சம் தேடி வரும்.
 | 

ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது!

சகஸ்ரநாமம் என்றால், அது விஷ்ணு சகஸ்ரநாமம்தான். அதன்பின்,. மற்று தெய்வங்களின் சகஸ்ரநாமங்கள் என. முன்பே நாம் பார்த்துள்ளோம். ஆனால், விஷ்ணு சகஸ்ரநாமத்தை தினமும் சொவதென்றால், குறைந்தது, அரைமணி நேரம் ஆகும். (நிறுத்தி சொல்ல வேண்டும்) எனக்கு நேரமில்லை என, சாக்கு போக்கு சொல்வோம். 

இதை நன்கு உணர்ந்த பார்வதி தேவி, இது பற்றி சிவபெருமானிடம் கேட்டாள். ’சுவாமி‘ விஷ்ணு சகஸ்ரநாமத்தை தினமும் முழுமையாக சொல்ல முடியாதவர்கள், எளிதாக பாராயணம் செய்வதற்கு ஒரு வழி சொல்லுங்கள் ’ என, கேட்டாள் பார்வதி ‘ராம ராம ராம’ என, மூன்று முறை சொன்னாலே, ஒருவனுக்கு தினமும், விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்த பலன் கிடைக்கும் என பதில் அளித்தார் சிவபெருமான். 

 ராம ராம ராம என மூன்று முறை சொன்னால், எப்படி ஆயிரம் நாமத்துக்கு சமமாகும் என, சந்தேகம்வரும்., அதற்கு கணத அடிப்படையில் பதில் உள்ளது.  எழுத்துக்களுக்கு இணையாக எண்கள் உள்ளன. "ர" என்ற எழுத்துக்கு எண் 2ம், "ம" என்ற எழுத்துக்கு எண் 5ம் ஆகும். மேலே சுலோகத்தில் "ராம" என்ற நாமம் மூன்று முறை வருகின்றது.

அதாவது 2X5 2x5 2x5. எறால் 2X5=10x2=20x5=100x2=200x5=1000 ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே. இதுதான் ராம நாமத்தின் அற்புதம்
அதனால்தான், ராம ராம ராம என்ற சொன்னால், விஷ்ணு சகஸ்ரநாம பலன் கிடைக்கும்.

தினமும் விஷ்ணு சகஸ்ரநாமத்தில் வரும்
"ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே 
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே"
 என்ற இந்த சுலோகத்தை தினமும் குறைந்தது, 11 முறை சொல்லுங்கள், வீட்டில் சுபிட்சம் தேடி வரும். 

Newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP