நாக வடிவில் நாடி வந்தோர் துயர் தீர்க்கும் திருவேற்காடு கருமாரியம்மன்

ஆடி மாதம் பிறந்துவிட்டது.தெருவெல்லாம் அம்பிகையின் புகழ் பாடும் பாடல்கள் நம் செவிகளை நிரம்பி வருகிறது.
 | 

நாக வடிவில் நாடி வந்தோர் துயர் தீர்க்கும் திருவேற்காடு கருமாரியம்மன்

ஸ்ரீ் தேவி கருமாரியம்மன் காயத்ரி
    
ஓம் மா தேவ்ய ச கருணாய வித்மஹே
சர்வ மங்களாய தீமஹி
தன்னோ கருமாரி ப்ரசோதயாத்!

இது அகிலம் காக்கும் அன்னை திருவேற்காடு கருமாரித் தாயின் காயத்ரீ மந்திரம். தினம் தினம் இந்த மந்திரத்தை சொல்லி வர அன்னையின் அருள் நம்மை காத்தருளும்.

ஆடி மாதம் பிறந்துவிட்டது.தெருவெல்லாம் அம்பிகையின் புகழ் பாடும் பாடல்கள் நம் செவிகளை நிரம்பி வருகிறது. ஞாயிற்றுக் கிழமைகளில் பல பகுதிகளில் கூழ் ஊற்று நிகழ்ச்சிகள் படு விமர்சையாக நடந்து வருகிறது. சென்னைக்கு அருகில் அமைந்துள்ள திருவேற்காட்டில் வீற்றிருந்து, அருள் பாலிக்கும் கருமாரித் தாயின் திருவருள், தலபுராணம் குறித்து இந்த பதிவில் அறிவோம்.

திருவேற்காடு கருமாரியம்மன் தல புராணம்

ஒரு சமயம் அகிலம் காக்கும் அன்னை கிழவி வடிவம் கொண்டு குறிசொல்லும் குறத்தியாக சூரியனைத் தேடிச் சென்றாள். இதுவும் அன்னையின் திருவிளையாடல்களுள் ஒன்று. தனக்கு குறி சொல்ல வந்திருப்பது அன்னை கருமாரி அன்பதை உணராத சூரியன், அன்னையை உதாசீனப்படுத்தவே அன்னை அவனிடமிருந்து மறைந்தாள். 

உடனே சூரியன் ஒளியின் பிரகாசம் குன்றியது.சூரியன் தனது பெருமையை இழந்தான். அன்னையை உதாசீனப்படுத்தியதன் விளைவு தான் இது என தனது தவறை உணர்ந்த சூரியன், தன் பிழை பொருத்தருள அன்னையிடம் கதறியழ மனமிறங்கிய அன்னையும் தாய் மனதுடன் சூரியனை மன்னித்து அருள் செய்தார். 
இதனால் மன நிம்மதியடைந்த சூரியனும் ‘ஞாயிற்றுக்கிழழை’ என்ற தனது நாளை அன்னையின் திருநாளாகக் கொள்ள வேண்டும் என்று வேண்டினான். அன்னையும் அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டாள்.அத்துடன் ஆண்டிற்கு இரண்டு முறை பங்குனி புரட்டாசி மாதங்களில் சூரியன் தன் கதிர்களால் அன்னையை அபிஷேகம் செய்யவும் வரம் கேட்டுப் பெற்றான். 

இதனால் திருவேற்காடு தலத்தில் அம்மனுக்கான விசேஷ நாளாக ஞாயிற்றுக்கிழமை  பின்பற்றப்பட்டு வருகிறது.  ஞாயிற்றுக்கிழமை நாளில்  ஏராளமான பக்தர்கள் இத் திருக்கோயிலுக்கு வருகை தந்து தங்கியும்  செல்கின்றனர். இங்கு மிகப்பெரிய நாகப் புற்று உள்ளது.  புற்றில் பாலூற்றி வழிபடுவோர்க்கு  வாழ்வு அளித்து இராகு கேது போன்ற கிரகங்களால் வரும் தோஷங்களை நீக்குவேன் என்பது  அன்னையின் அருள் வாக்கு.  ஆடி உற்சவத்தின் போது புற்றுக்கு பால் ஊற்றுதல் சிறப்பு  நிகழ்ச்சியாக  படு விமர்சையாக நடைபெறுகிறது. தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு இந்த நாக வடிவில் இருக்கும் அம்மன் அருள்பாலிக்கிறார் என்பது நம்பிக்கை.

திருவேற்காடு  கருமாரியம்மன் தலத்தில் மரச்சிலை அம்மன் என்ற சன்னதி உள்ளது.  இந்த சன்னதியில்   ரூபாய் நோட்டுகள் மாலையாக அம்மனுக்கு அணிவிக்கப்படுகிறது. இதனால் இந்த சன்னதியில் நாணயங்கள்  கொட்டிக் கிடக்கின்றன.  கடன் தீர்த்தல், வியாதி, வழக்குகளில் நொடிந்து போனவர்கள்  இங்கு வந்து வேண்டிக் கொள்கின்றனர்.  பூட்டுகளை கொண்டு வந்து சன்னதி முன்பாக பூட்டி தொங்க விட்டுச் செல்வது வழக்கமாக உள்ளது.  இப்படிச் செய்வதால் தங்கள் பிரச்சினைகள்  தீர்வதாக நம்பப்படுகிறது.
ஆடிமாதத்தில், திருவேற்காடு சென்று அருள்மிகு கருமாரித் தாயை தரிசனம் செய்து மன நிம்மதி அடைவோம்.

ஓம் ஐம் க்லீம் ஸ்ரீ்ம் - ஓம் சக்தி மஹா சக்தி சிவ சக்தி சர்வ சக்தி .....
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP