திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் நடனத் திருவிழா

சென்னை பெருநகரம் திருவான்மியூர் உள்ள மிக பிறசித்தி பெற்ற மருந்தீஸ்வரர் கோவில், குறித்து இந்த சிறப்புக் கட்டுரையில் காண்போம்...
 | 

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் நடனத் திருவிழா

சென்னை பெருநகரம் திருவான்மியூர் உள்ள மிக பிறசித்தி பெற்ற மருந்தீஸ்வரர் கோவில், தொண்டை மண்டலத்தின் வெகு சிறப்பான பதினெட்டு கிராமங்களில் மயிலைக்கு அடுத்து திருவான்மியூரே சிறப்பானது. இங்குதான் ஏழாம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட இந்த மருந்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.  

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் நடனத் திருவிழா

இவ்வாலயத்திற்கு கிழக்கில் 7 நிலை இராஜகோபுரம், அதையடுத்து 5 நிலை இரண்டாவது கோபுரம் மற்றும் மேற்கில் ஒரு 5 நிலை கோபுரம் அமைந்துள்ளன. மேற்கு கோபுரம் மகாபலிபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் இருப்பதால் இந்த வாயில் பிரதானமாக உள்ளது. கிழக்கிலுள்ள இராஜ கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தவுடன் ஒரு விசாலமான திறந்த வெளியும் வலது புறத்தில் தியாகராஜ மண்டபமும் இடது புறத்தில் கோவில் தீர்த்தமும் உள்ளது. 

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் நடனத் திருவிழா

கயிலை மலையில் சிவன் பார்வதி திருமணம் நடைபெறும் சமயம் திருமணத்தைக் காண எல்லோரும் அங்கு கூடியதால் வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. அதனை சமன் செய்ய சிவபெருமான் அகத்திய முனிவரை தென்திசை அனுப்பினார். தென்புலம் சென்றால் தன்னால் தெய்வத் திருமணத்தைக் காண இயலாமல் போய்விடுமோ என்று சிவனிடம் முறையிட இறைவனும் அகத்தியர் விரும்பும் போது திருமணக் கோலம் காட்டி அருளுவதாக கூறினார். அதன்படி திருவான்மியூர் தலத்தில் அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டி அருளினார். 

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் நடனத் திருவிழா

அகத்தியர் திருவான்மியூர் தலத்தில் தங்கி இருந்த போது வயிற்று வலியினால் அவதிப்பட்டார். இறைவன் அகத்தியருக்கு காட்சி கொடுத்து மருந்துகள் பற்றியும், அதன் உபயோக முறைகளைப் பற்றியும் உபதேசம் செய்து அருளினார். அதனாலேயே இறைவன் மருந்தீஸ்வரர் என்ற பெயருடன் இத்தலத்தில் அறியப்படுகிறார். சந்திரனும் சூரியனும் ஒருசேர இங்கு வந்து வழிபட்டதால், மற்ற கிரகங்கள் இங்கு மறைந்து நின்றது எனவும், அதனாலேயே இங்கு நவகிரக சந்நிதி கிடையாது என்றும் கூறப்படுகிறது. 

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் நடனத் திருவிழா

ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் உள்ள வன்னி மரமே இத்தலத்தின் தல விருட்சமாகும். இந்த வன்னி மரத்தினடியில் தான் அகத்தியருக்கு இறைவன் திருமணக் காட்சி கொடுத்ததாக ஐதீகம். வான்மீகி முனிவரும் முக்திப் பேறு வேண்டி நாரதரின் ஆலோசனைப் படி இத்தலம் வந்து இந்த வன்னி மரத்தடியில் தான் சுயம்பு லிங்கத்தைக் கண்டெடுத்து வழிபட்டதாக புராண செய்திகள் கூறுகின்றன. 

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் நடனத் திருவிழா

அகத்திய முனிவருக்காக ஒரு முறையும், வான்மீகி முனிவருக்காக ஒரு முறையும் ஆக இரண்டு முறை இறைவன் இந்த வன்னி மரத்தடியில் காட்சி கொடுத்துள்ளார். இந்த வன்னி மரத்தடியில் பங்குனி மாத பிரம்மோற்சவத்தில் ஒன்பதாம் நாள் இறைவன் அகத்தியருக்கு திருமணக் காட்சி கொடுத்த விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. முக்கியத் திருவிழாவான நடனக்காட்சியையும் ஆண்டுதோறும் வால்மீகி முனிவருக்கு அளித்து வருகிறார். குற்றாலத்துக்குப் பிறகு திருவான்மியூரில் நடக்கும் இந்த நடனத் திருவிழாவே இங்கு சிறப்பானது.

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் நடனத் திருவிழா

கருவறையில் மூலவர் மருந்தீஸ்வரர் சுயம்பு லிங்க உருவில் தீண்டாத் திருமேனியாக மேற்கு நோக்கி காட்சி கொடுக்கிறார். பால்வண்ண நாதர், மருந்தீஸ்வர் ஆகிய பெயர்களால் இத்தலத்து ஈசன் அழைக்கப் பெறுவதற்குக் பல காரணங்கள் உள்ளன. ஈசன் அருளால் சாப விமோசனம் பெற்றது காமதேனு. பசு பால் சொரிந்து சிவலிங்கம் வெண்ணிறமாகக் காட்சி தந்ததால் பால்வண்ண நாதர் என்று பெயர் பெற்றதாக மக்களால் நம்பபடுகிறது. 

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் நடனத் திருவிழா

தினமும் இங்கிருக்கும் இறைவனுக்கு கோபூஜையுடனே மற்ற பூஜைகளும் செய்யப்படுகிறது.இந்த கோவிலின் கர்ப்பகிரகத்திற்க்கு மேலிருக்கும் விமானம் சதுர்வஸ்தம் முறையில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இங்கு கோவிலில் கொண்டிருக்கும் மருந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்ட பின்பு, பிரசாதம் தரப்படும் விபூதியை உண்பதால் எப்படிப்பட்ட தீராத வியாதிகளும் குணமாக தொடங்கும் என கூறுகிறார்கள்.இக்கோவிலில்   வரிசையாக  108 சிவலிங்கங்கள் , 63 நாயன்மார்களின் உருவச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதையும் காணலாம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP