திருப்புல்லாணி என்ற திருப்புல்லணை...!

பாரத தேசத்தின் ஆன்மாக்களில் தலைசிறந்த தடமாக விளங்குவது ராமேஸ்வரக் கடற்கரைப் பகுதி! ஆனால், ஏனோ தமிழர்கள் அதற்கு உண்டான மதிப்புடன், அதனைக் கொண்டாடாமல் இருக்கிறோம். திருப்புல்லாணி” வரலாற்றை இங்கு காண்போம்...
 | 

திருப்புல்லாணி என்ற திருப்புல்லணை...!

பாரத தேசத்தின் ஆன்மாக்களில் தலைசிறந்த தடமாக விளங்குவது ராமேஸ்வரக் கடற்கரைப் பகுதி! ஆனால், ஏனோ தமிழர்கள் அதற்கு உண்டான மதிப்புடன், அதனைக் கொண்டாடாமல் இருக்கிறோம். 

திருப்புல்லாணி என்ற திருப்புல்லணை...!

குறிப்பாக “திருப்புல்லாணி”.  இந்த தலத்திற்கு பல வரலாறுகள் உண்டு.

# ராமாயணத்தின் ஆணி வேராகிய  “விபீஷன சரணாகதி” நடந்த இடம் என்ற ஒன்றிற்காகவே அதீதமாகக் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும்.
# அடுத்ததாக குழந்தையில்லாத தசரதர் பிள்ளைப் பேறு வேண்டி மூல மந்திரம் பெற்ற தலம் என்றும் புராணம் சொல்கிறார்கள். 
# ராவணனுடன் போருக்குச் செல்லும் முன் ஆதிஜெகனாதரை வழிபட்டு, “கோதண்டம்” பெற்ற தலம்.
# ராமர் சயன கோலத்திலிருக்கும் ஒரே திருத்தலம் இதுவே! தர்ப்பைப் புல்லைத் தலையணையாகக் கொண்டு சயனம் கொண்டதால், இத்தலம் திருப்புல் அணை என்று பெயர் பெற்றது.
# இந்த ராமருக்கு விஸ்வரூப ஆராதனை கிடையாது. சனாதன தர்மத்தின் மிக உயர்ந்த கலாச்சாரமான “சக்தி இல்லையேல் சிவம் இல்லை” படி, மனையாளுடன் இல்லாவிட்டால் கடவுளாக இருந்தாலும் உரிய மரியாதை கிடைக்காது என்பதன் அடையாளமாக அமைந்துள்ளது.
 # ராவணனை வென்று திரும்பிய ராமன், சீதை, லட்சுமணனுடன் பட்டாபிஷேக கோலம் அருளிய தலமாகவும் இருக்கின்றது. அதுவும், அருகில் அனுமன் அடக்கமே திருவுருவாக வாய்பொத்தி பவ்யமாக நிற்கும் அழகைக் காண கண் கோடி வேண்டும். 
# தலத்தின் மிகச் சிறப்பான விசயம், இங்கே பிரார்த்தனை செய்வோர்களுக்கு புத்திர பாக்கியம் நிச்சியம் என்பதற்குச் சான்றாக சந்தானகிருஷ்ணருக்குத் தனி சந்நிதி அமைந்துள்ளது. முன்பெல்லாம் புத்திர பாக்கியத்திற்கு யாகம் வளர்த்து பூஜித்து வந்தார்கள். இப்பொழுது ஆலய நடைமுறையில் இல்லை. 

திருப்புல்லாணி என்ற திருப்புல்லணை...!

எல்லாவற்றையும் விட, இத்திருத்தலமே வைணவ ஆலயங்களில் மிகப் பழமையான திருத்தலம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இத்தனை ஏற்றம் பெற்ற திருப்புல்லாணி அருகிலேயே சேதுக்கரை இருக்கிறது. கயாவுக்கு நிகரான சிரார்த்தம் செய்யச் சிறந்த இடம். இலங்கைக்கு பாலம் கட்டத் துவங்கிய இடம். திருப்புல்லாணி சிறிய ஊராக இருப்பினும், திருக்குறுங்குடி, வானமாமலை மடங்கள் தங்கும் வசதிகள் செய்து கொடுத்திருக்கின்றன. இராமேஸ்வரத்திற்கு சொந்த வாகனத்தில் செல்பவர்கள், ராமேஸ்வர நெருக்கடியைத் தவிர்க்க தங்குவதற்குத் திருப்புல்லாணியையே பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு மணி நேரப்பயணத்தில் ராமேஸ்வரத்தை அடையமுடியும்.

திருப்புல்லாணி என்ற திருப்புல்லணை...!

அமாவாசை தர்ப்பனம் செய்பவர்களுக்கு விரத சமையல் செய்து கொடுத்து உதவுகிறார்கள் சில அன்பர்கள். பயணத்திற்கு முன் திட்டமிட திருப்புல்லாணி திருத்தலத்தில் அத்யான பட்டர், திரு.பாலாஜி அவர்களை 9786650889 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP